செவ்வாய், 28 டிசம்பர், 2010

வதம்...!


அரிதாரம்பூசா
அவதாரம் பிறக்க..!

தீராத பசிருசிதனில்
வித்திட்ட விதிதனையே
விளையாட்டாய்
வினையாகும் வீதியிலே
சதி செய்யும் சாதிமத
சங்கடங்களை துறக்க

மனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்க
வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்

இச்சைகளின் தூண்டுதலே
துகிலுரிப்பு யோதனரை
சுற்றிவந்து வட்டமிட்டு
சூளுரைத்து கொட்டமடக்கி
அடிபணியானின்????
வாளுயர்த்தி
வெட்டி முடக்கு

களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு

காவலனும் கரம்நீட்டா
வரமொன்று கொண்டுவர
நீவிதித்த வழிதனையே
காவலனும் கடைபிடிக்க
மனம் நினைக்க குணம்
மாறா நிலையிருக்க

சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா..!
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்...
நீதி : வணக்கம் அன்பு நெஞ்சங்களே வதம் ஒரு மீள் தான் தமிழ்மணத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிந்துள்ளது என்ன செய்வது மூவரில் இருவர் தொடர்ந்து களத்தில் உள்ளனர் "வதம்" மற்றும் "உயிர் மட்டும் பேசுதடி" உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஆளும் நெஞ்சங்களே

21 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

இன்னிக்கு வடை எனக்குத்தான்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வர வர நீங்களும் தேவா மாதிரி கொரிய மொழியில எழுத ஆரம்பிச்சிட்டீங்க...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்லாயிருக்கு

வைகை சொன்னது…

பங்கு....என் தமிழ் அறிவிற்கு இது கொஞ்சம் அதிகம்தான்! புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்!

Unknown சொன்னது…

ஓட்டு போட்டுட்டேன் ...

logu.. சொன்னது…

arumai nanbareyyy..

'பரிவை' சே.குமார் சொன்னது…

புரிந்து படிக்க வேண்டியிருந்தாலும் இரண்டு முறை படித்ததால் நல்லாயிருக்கு என்று சொல்லத் தோன்றியது. இல்லையேல் ஜெயந்த் அவர்கள் சொன்னது போல் தேவா அண்ணா தோத்தார் போங்கள்.

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

அருமை தோழரே...

செல்வா சொன்னது…

//களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு/

இந்த வரிகள் நல்ல இருக்கு அண்ணா ..
உங்க வதம் தமிழ்மனத்துல முன் நிற்கட்டும் .!

ஆமினா சொன்னது…

நல்லாயிருக்கு !!!!!

puthuvayal சொன்னது…

வதம்.ஆகா! கதம், கதம்.

Unknown சொன்னது…

அண்ணே பொன்னான வாக்குகளை அளித்து விடுவோம் .ஆனா கொஞ்சம் செலவாகுமே . ஏன்னா நாங்க மதுரைக்காரைங்க ஹி ஹி ஹி

ஹேமா சொன்னது…

வெற்றி நிச்சயம் தினேஸ் !

சென்னை பித்தன் சொன்னது…

//வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்...//
அருமை!

Philosophy Prabhakaran சொன்னது…

ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்... கண்டிப்பா போட்டுடறேன்...

மாணவன் சொன்னது…

//சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா..!
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்..//

superb....

மாணவன் சொன்னது…

//வணக்கம் அன்பு நெஞ்சங்களே வதம் ஒரு மீள் தான் தமிழ்மணத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிந்துள்ளது என்ன செய்வது மூவரில் இருவர் தொடர்ந்து களத்தில் உள்ளனர் "வதம்" மற்றும் "உயிர் மட்டும் பேசுதடி" உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வீசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஆளும் நெஞ்சங்களே//

கண்டிப்பாக ஓட்டு போட்டுவிடுகிறோம் நண்பரே

வெற்றிப் பெற வாழ்த்துக்கள்....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

போட்டு தாக்குங்க

நாங்க ஓட்டு போட்டுடறோம்

Meena சொன்னது…

வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர் . இதை மாதிரிக் கவியாக
(மாடல்) எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்

vanathy சொன்னது…

super !!

எஸ்.கே சொன்னது…

//சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா..!
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்...//

அழகான வரிகள்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி