புதன், 28 டிசம்பர், 2011

சொக்கா சொக்கா ஆயிரம் நூறு.....


சொக்கா சொக்கா ஆயிரம் நூறு
எனக்கில்லை எனக்கில்லை - ஆமாம் 

1 . நகைச்சுவைப்  பதிவுகள்.
சுட்டு சிரிக்குது சட்டியிலே குழம்பு
சட்டுன்னு வாடிப் புள்ள ஒய்யாரமா
பட்டு சீலைக்கட்டி பார்க்க உன்னை 
கோமாளி வேசமிட்டு சிரிக்கவைக்கேன் 

2 . கவிதைகள்
காதல் கவிதை வாசிக்க தடம்புரளும்
வரிகளின் தாகம் சமூகச் சிந்தனைகளைத்
தூண்டும் புதுப்பிறவியாய் புனிதம் தேடும்
புவியனாய் அகத்தெளிவு 

3 . விழிப்புணர்வு
அங்கே வரான் இங்கும் தரான் 
எங்கே போச்சு வானம் பூமி
விழித்து நட விடிந்ததெங்கும் 
விடியல் நிலை பேசும் 

4 . கதைகள்
ஒரே ஒரு காட்டுக்குள்ள 
ஒத்தப் புள்ள குள்ள நரியாம் 
சுத்தி திரியுர வேளையில சாய
சட்டியில வீழக் கண்டேன்

5 . அனுபவம்/பயணக்கட்டுரை
நானும் நடக்கிறேன் நாளும் கடக்கிறேன் 
சேர்ந்துப் பகிர்வோம் நாளுமிங்கே
வருவோர் காண்பர் கண்சிமிட்ட 
உதவும் வரிகளாய் பதியட்டுமே

6 . அரசியல் கட்டுரை
ஆட்சி நடக்குது மத்தியில ஆளான
நானும் தான் ஓட்டுப் போட்டேன் 
அடிமையா நினைக்க அகங்கொதிக்க
வாளும்தான் பிடிக்க சூளுரைப்போம்

7 . திரை விமர்சனம்
முகவரி அறியாமா முகமூடி போடுவாங்க
சுயவரியல்லாம சுனை நீரல்லும் காட்சியாய்
காலத்தை மாத்துவாங்க வெள்ளித் திரையிலே
வேடிக்கை பார்க்க வாடிக்கையாய் 

8 . தொழில்நுட்பம்
அரிதென்பார் அவனியிலே புதிதென்பார் 
தொழில் நுட்பம் தெரியாமல் வாங்கிவிட்டால்
தின்டாட்டம் தான் அவனுக்கு கொண்டாட்டம்
அரியவை அறிய அனுதினம் 

9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
அறிமுகம் ஆனது எங்கே எங்கே
நான் அவையில் அரிதாரம் பூசியது 
இணையத்தின் நட்பினில் இனியவனாய்
என்றும் அன்புடன் இங்கே இங்கே.....

காணா தேசத்தே கடல் கடந்து பயணிக்கும் சில நட்புக்கரங்களின் இணையமான டெரர்கும்மி 2011 விருதுகளில் தங்களது பதிவுகளை இணைத்து பரிசுகளை அள்ளுங்கள் பதிவர்களே 


சனி, 24 டிசம்பர், 2011

இன்னும் பசித் தீரவில்லை


இன்னும் பசித் தீரவில்லை யுண்டுகழித்தும் 
கொண்டக் குழித் தேடிவரும் கண்டவுயிர்க்கும்
சண்டைக்களம் விதையுதிங்கு கூலிகொடுத்து
சிதையும் சதையுமென் றறியே 

கள்ளருக்கும் கல்லரைக்கும் காவலெவனோ
கண்சிமிட்ட கழுத்தறுக்கும் சூத்திரமேனோ
சொல்லிருக்கு சுமந்துவாரேன் சமர்த்துவானா
வல்லிழுக்கும் சீவனே உள்ளிருக்காய்

அன்னமிடை வல்லக்கொடை செல்லவிடை
தாருமெண்ணமே சக்தியுந்தன் சாடையெனில்
வண்ணம் சேருமிடத்து நாறுமுந்தன்
நாமமறிந்தே சூடுமிழைத் தொடு .....

வியாழன், 22 டிசம்பர், 2011

நாளும் இறைத்தான்


கண்டதும் கொன்றது வேடவன் செயல் 
சாயல் கண்டதும் வென்றது நாரணின் 
சுழல் காட்சி கண்சிமிட்ட வர்ணிக்கும்
வார்த்தை தடம் புரள

கடந்து வந்தேன் அளந்து கொண்டான்
அவன் எண்ணப்படியே மிதந்து வர 
வலை விரித்தான் அன்னப் படியாய்
அருகிய உள்ளத் தவிப்பாய்

நிறைந்து அல்லும் பகலுமாய் ஆடிப்
பிழையேன் கல்லும் கவடுமாய் சூடி
கொடுத்தான் நாடி பிடித்தான் நாளும் 
இறைத்தான் இல்லார்க்கும் இரை

சனி, 17 டிசம்பர், 2011

இறுக்கும் கயறு


சிறகுகள் விரிய சருகுகள் உதிர
சலசலக்கும் ஓசை திசை மாறிய
தேசம் வசைப் பாடிய கூட்டம்
வர்ணிக்க செவி யுதிர்க்கும்

உதிரம் உணர்வன்றி திரிக்கும்
தகிப்பில் தகனமாகும் குணம்
அகத்தே சமைக்க அடைத் தேடும்
குருவி கூடில்லா மிச்சம்

அச்சுருத்த வச்சிருத்தும் சுவை
வகையில்லாச் சூடி மிகையல்லா
மிடுக்கும் சுரமில்லா சறுக்கும்
சாரத்தில் இறுக்கும் கயறு


புதன், 14 டிசம்பர், 2011

இணையும் கரங்ககள்

அன்பினில் அகப்பட்டு அன்னவர் காக்க
அருகினில் கிட்டா கனியாய் யெட்டி
தூர நின்றதுவே கண்டங்கள் தாண்டி
வெற்றுடலாய் இயந்திரமாய்

இன்னல்கள் தீர்க்க தினிக்கப்பட்ட
வாழ்வியல் சூடும் மணக்கப்பட்ட
மாலை கனக்கும் சுமையெல்லாம் 
மறக்க வலை நாடி

விதி மாற்றி வீதி சமைக்க
துணையாய் இடர் நீக்கும் தூண்களாய்
சுடர்விட்டெரியும் இணையத்தி
இணைக்கும் கரங்களின்

முதலகவை நிரைவுற இரண்டின் 
துவக்கத்தே அன்புள்ளங்களின் 
ஆதரவை தேடி வலைபாயும் 
குருவிகளாய் கண் முன்னே

தாய்மொழி செந்தமிழின் தனித்திறம் 
மேலோங்க அன்பர்களின் படைப்புகளை 
நலமுடன் செதுக்குங்கள் வளம்வருவோம் 
முடிசூடா மன்னர்களாய் 


சனி, 10 டிசம்பர், 2011

"தமிழுக்கு கவி"


கனியாத உள்ளமெல்லாம்
கனிய வைக்க கவிபடைத்தாய்
பெண்ணடிமை விலங்கொடித்து
அச்சமிலா விடியல் கண்டாய்

சாதி ஒழிய சாட்டைதனை
கரம்பிடித்து சமத்துவம் புகட்டினாயோ
அச்சமில்லை என்றுரைத்து
காட்டாற்று கவி சமைத்து

வெள்ளையனை வெளியேற்ற
வேள்விபல கண்டவரே
தமிழ் பாலூட்டி தரணியெங்கும்
தமிழ் வளர்த்த மீசையாரே

நின் கவிபாடும் உலகெங்கும்
தமிழ் உரிமை போராளியே
உம் பாதங்களை பின்பற்றி
பயணிக்கும் உள்ளமிங்கு

தமிழ் கடவுளான உம்மை
சிரம் தாழ்த்தி கரமுயர்த்தி
வணங்குகிறேன் தினமும்மை
மகா கவியே அருள்புரிவாயோ

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் பிறந்த தினமான இன்று தமிழ் கடவுளாக அவரை வணங்குவோம்

வியாழன், 1 டிசம்பர், 2011

"நாற்திசைத் தேடும் குருவி ....!"

நாற்திசைத் தேடும் குருவி 
உந்தன் கனவென்ன சொல்லேன்
அள்ளிக்கொடுக்க உலகளந்தான்
கள்ளம் விளைத்ததுண்டோ

சோலைத் தேடி எந்தன் சுவாசம்
பச்சை சேலைக் கண்ணுருத்தும் காலம்
கனவாகி தினம் உண்ண மிச்சம்
எச்சம் தந்த வலிகள்

உயர பறக்கிறேன் உடனெழுந்த 
கட்டிட உச்சம் சன்னலோரம் கூடு
சல்லடையாக நிலப்பரப்பு நீள
குற்றம் செய்ததென்னவோ 

குடைந்துருக்க கடைந்தடுக்க 
கார்ப்பசித் தீர்ப்பாயோ நிழல் 
காணும் மானிடா நினைவங்கில்
நிலைத் தொடரா முற்றும்

கலியுகம் :- நான்கு திசைகளிலும் தேடியலையும் குருவியே உன் கனவு என்ன சொல்லேன் கடவுள் அள்ளிக் கொடுக்க அவர் மனதில் கள்ளம் ஏதும் இல்லை சோலைகளைத் தேடுகின்றேன் எந்தன் சுவாசம் முட்ட பச்சை சேலைப்போர்த்திய வயல்கள் கண்ணுக்கு இன்று கனவாகி போகின்றன இயற்க்கை உணவுகளை விளையும் நிலத்திலே சென்று உண்ணும் நாங்கள் இன்று எச்சம் உண்ணும் நிலையில் ...... இன்னும் ஆயிரம் கருத்துக்கள் உள்ளே அடக்கம் 

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி