ஞாயிறு, 20 நவம்பர், 2011

இனிக்கும் நாளென்று...?

அறியாதிருப்ப காரியக் குறையோ
தாயுண்டு தனயனுண்ண மீளுண்ட 
யான் விளைக்க பிழையறிவோர்
பெரியோர் வினை தொடுக்க

உள்ளமர்ந்து பிழையகற்றி அருள்வோனே
திகழுதம் மேனி இகழுதம் உலகே
மகிழுந்தமிழ் இன்னோர் நாவினில்
இனிக்கும் நாளென்று...?

புகுந்தோன் வளம்வர கிடந்தோன் 
மறந்தழ மாறுதென் மாடம் வாசம்
வீச வாசல் வந்தோனைத் தேடும்
பனியமர்ந்து நாடும் 

நல்லோனின் நலமறிய நரனாய்
நாவிரித்த வலையில் நகலும்
அகலும் அறிந்துழா ஆளுஞ்சுனை
நிறைந்திறக்க காணீர்.....

வியாழன், 10 நவம்பர், 2011

தவறென்ன யான் செய்தேன்....?

இமைக் கூடி இயல் தாண்டி 
இணைத் தாவி இதழ்ச் சூடி
இடைச் சாடிய கரந்தழுவ 
மறந்தென்னில் மலர

உனக்குள்ளே உயிர்ப்பித்து 
உருக்கொண்டேன் உடனழிக்க 
தவறென்ன யான் செய்தேன்
உடையவளேக் கூறு

இணங்கி இடமளிக்க நாழிகையும்
இதமளிக்க இன்பத்தின் உச்சத்திலே
உலவுகின்ற நிலவும் உடனிருக்கும் 
கனவுல கல்லவே காட்சி

சாட்சி சொல்வோன் நானென்றே
மனம் சலசலக்க வினவா விளைவித்து 
விளையாட்டாய் காரணித்து வினைத்து 
விடை யளித்ததேனோ..?

திங்கள், 7 நவம்பர், 2011

இணையத்தின் ஓட்டம்....!

தனிமையின் தாகந் தீர்க்கவல்ல
சுவைமிகு மருந்தே பதிவுலகச் சுடரே
தாகம் தனிந்தே வெறுமையின் ஏக்கங்கள்
மறைந்தென்னில் மலரும்


அன்புக் கரங்களின் அரவனைப்பில் அகிலமும்
வளம்வர அரங்கத்தே காணா அவதறிப்பு
அனுதினம் அலைகடலாய் அன்பின் 
ஆர்ப்பரிப்பு என்றும் மாறா


கலங்குவதேன் கண்மணியே காரணத்தே
காலமிகுதியில் சேர்வனச் சீரும் சிறப்பே
நலமிதோ நவிலும் நாவண்ணம் கூற 
குரலினும் அறியாக் குழந்தாய் 
  
மலரினில் தேடும் கலனிலா சூடும்
பகலவன் சாடும் இரவணிக் கூடு 
இமைகளின் நாட்டம் இருதயக் கூட்டம் 
இணையத்தின் ஓட்டம் இனிது 


நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி