சனி, 4 டிசம்பர், 2010

ஆவி பொறியல் சாப்பிட வாங்க


அரைக்கிலோ பீன்சு வாங்கி
காம்பு கிள்ளி நாரெடுத்து
நன்னீரில் குளிக்கவைத்து
சுத்தம்செய்து
அருவாமனை வேண்டாமே
கூரானா கத்திகொண்டு
சின்ன சின்ன துகள் போலே
கடலைபருப்பு அளவினிலே
நறுக்கி வச்சு நாலைந்து
பச்ச மிளாகா அதே அளவில்
நறுக்கிபுட்டு அடுப்பையும்தான்
பத்தவச்சி வானலிய மேலவச்சி
சூடேறிய பிற்பாடு சிறிதளவு
என்னைவிட்டு கடுகு உளுத்தம்
தாளிப்பில் படபடனு சத்தம் வர
நறுக்கி வச்ச பச்ச மிளகா
கூடே போட்டு வதக்கி
கருகாத நேரம் பார்த்து
பீன்ஸையும் சேர்த்து போட்டு
ஒருநிமிடம் வதக்கி விட்டு
அளவான தீதனிலே மேல்மூடி
இட்டு நீராவிதனில் வேகவைக்க
சிறிது நேரம் காத்துநிக்க
பச்சை வாசம் பறந்து போக
மேல்மூடி திறந்து வச்சு
சுவைக்கேற்ப உப்பிட்டு
கிளறி கிளறி சிறிது நேரம்
ஆவியிலே வேகவைத்து
அடுப்பனைத்து கீழியிறக்க
நளபாகம் வேண்டாமே
அரிசி சோற்றுக்கும்
குழம்பேதும் வேண்டாம்
இட்லி தோசை சப்பாத்திக்கும்
துணையேதும் வேண்டாம்
பச்சை மிளகாவிற்க்கு ஏற்ற
காரம் சேர்த்து சமைக்க
அனுதினமும் உண்டாலும்
ஆசை தீராது சும்மா
சமைச்சு பாருங்க.........டிஸ்கி : நம்பினோர் கெடுவதில்லை என்ன நம்பி சமைக்கலாம் நான் கேரண்டி

டிஸ்கி 1 : சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம் இட்லி , தோசை , சப்பாத்தி இவைகளுடனும் சாப்பிடலாம் டூ இன் ஒன்

டிஸ்கி ௨ : ஹலோ எங்க சாட்டுபுட்டு சும்மா போறீங்க நாங்களும் சாப்புடனும் ஓட்டு போட்டுட்டு போங்க நண்பர்களே

23 கருத்துகள்:

Chitra சொன்னது…

கவிதையில் இன்று சமையல் வாசனை ..... நிஜமாகவே கரண்டியை வைத்து கலக்கி விட்ட கவிதை! :-)

ம.தி.சுதா சொன்னது…

சித்திராக்கா என் வயித்தில அடிச்சிட்டிங்களே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

ம.தி.சுதா சொன்னது…

அடடா இப்படியும் சமைக்கலாமா.. எம்புட்டுப்பேருக்கு வறிற்றுப் போக்ககோ.. கடவுளுக்குத் தான் தெரியும்... (இந்தக் குறிப்பால இல்லிங்கா இதைப் பார்த்து நான் சமைத்தால் தான் பிரச்சனை..)

வெறும்பய சொன்னது…

இதன் பெயர் தான் கவிச்சமையலோ....

அருமையா இருக்கு.. கவிதையாய் கூறிய விதம்..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வித்தியாசமான செய்முறை

இளங்கோ சொன்னது…

கவிதையாய் ஒரு சமையல். :)

எஸ்.கே சொன்னது…

very tasty poem!

வினோ சொன்னது…

சமையல் அருமை...

ஹரிஸ் சொன்னது…

சாப்டுட்டேன்..ஓட்ட போட்டுட்டேன்..

ஆமினா சொன்னது…

உங்க பேர சொல்லி சமைக்கிறேன்!!!

எதாவது ஆச்சுன்னா திரும்ப உங்க வீட்டுக்கே பார்சல் வந்துடும்....

மோகன்ஜி சொன்னது…

வெண்பா இயற்றுவதை வெண்பா சமைத்தல் என்றே சொல்ல வேண்டுமாம்.

வாணலியில் இட்டபீன்ஸை வட்டிலால் மூடாதே.

கோணலிதே சொல்லிடில் உள்ளநிறம் மங்கிடுமே.

கறிவேப்பிலை போடலியே தேங்காப்பூ
சேக்கலியே

குறிப்பாநீ சொன்னதாலே பெண்பார்க்க
சொல்வேனே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

me the paavam

dineshkumar சொன்னது…

மோகன்ஜி said...
வெண்பா இயற்றுவதை வெண்பா சமைத்தல் என்றே சொல்ல வேண்டுமாம்.

வாணலியில் இட்டபீன்ஸை வட்டிலால் மூடாதே.

கோணலிதே சொல்லிடில் உள்ளநிறம் மங்கிடுமே.

கறிவேப்பிலை போடலியே தேங்காப்பூ
சேக்கலியே

குறிப்பாநீ சொன்னதாலே பெண்பார்க்க
சொல்வேனே!

வணக்கம் ஐயா
இது எங்களோட பேட்சுளர் சமையல் ஆனாலும் ருசி அதிகம் சமைத்து சுவைத்து பாருங்கள் உண்மை புரியும்

ஆவியினால் வேகவைக்க வட்டில் மூடி அவசியமே
உள்ள நிறம் மங்கியதால் உள்ள சுவை
மாறாதே
பீன்ஸினோடு கலக்கையிலே உள்ள சுவை மாறிடுமே
மாறாத அதன் சுவையை மாற்ற எண்ணம் எழவில்லையே

ஆதிரா சொன்னது…

கவிதை சமைப்பவர் கவிதையில் சமைத்தது அருமை.. கவிதைக்கு எதிர் கவிதையும் அபாரம்.. ருசித்தேன் நாவினிக்க...

சிவா என்கிற சிவராம்குமார் சொன்னது…

நள பாகம்!

மாணவன் சொன்னது…

கவிதை நடையில் சமையல் குறிப்பா அருமை,

தொடருங்கள்...

பகிர்வுக்கு நன்றி...

வாழ்க வளமுடன்

ஜெய்லானி சொன்னது…

//நம்பினோர் கெடுவதில்லை என்ன நம்பி சமைக்கலாம் நான் கேரண்டி //

கேரண்டி எத்தனை மணி நேரம் ஹா..ஹா..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

சமையல் மிகவும் சுவையாக இருந்தது

ஹேமா சொன்னது…

அட....கவிதையில
ஒரு சமையல்.
தினேஸ் ம்ம்ம் ....நடந்துங்க !

vanathy சொன்னது…

சமையல் கவிதை அழகு.

karthikkumar சொன்னது…

சமையல் தெரியும்னு சொன்னீங்க பதிவாவே போட்டுடீங்களே பங்கு. நல்லா இருக்கு

சிநேகிதி சொன்னது…

வாவ் கவிதையில் அவியல் அருமையாக இருக்கு.. உண்மையிலே கலக்கிட்டிங்க...

நாஞ்சில் மனோ சொன்னது…

//சித்திராக்கா என் வயித்தில அடிச்சிட்டிங்களே...
//
மாட்டிகிட்டியா....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி