திங்கள், 6 டிசம்பர், 2010

என்னவள்



என்று வருவாளோ
என் வீட்டு படியேறி
என்னை யறிவாளோ
என் முகம் கண்டவளோ
என் உள்ளம் கொண்டவளோ..........
எந்தன் மல்லி மலரே
ரோசா மலர்பிடி கரங்களுடன்
நித்தம் உன் நினைவில்
நீந்தி தவிக்கிறேனே
சத்தம் போடாமலே
சார லடிக்குதடி மனதில்
எத்துனை காலமடி
நின் முகம் காண..........
இம்மண்ணில் காத்திருக்க
சத்தியம் சொல்லடி
சாகா வரம் பெறுகிறேன்..........

டிஸ்கி 1 : வணக்கம் தமிழ் நெஞ்சங்களே நான் இதுவரை கண்டிராத என் வருங்கால துனைவிக்காக படைக்கும் படைப்பு (இது ஒரு மீள்)

டிஸ்கி 2 : நம்ம அரசியல் தலைவரெல்லாம் சேர்ந்து நம்ம பதிவர்களையும் கெடுத்துவச்சிருக்காங்க பின்ன என்ன ஓட்டு கேட்டாத்தான் போடுறாங்க ............

35 கருத்துகள்:

Unknown சொன்னது…

//நான் இதுவரை கண்டிராத என் வருங்கால துனைவிக்காக படைக்கும் படைப்பு//
பார்ரா! சூப்பர்! :-)

Unknown சொன்னது…

//என்று வருவாளோ
என் வீட்டு படியேறி
என்னை யறிவாளோ
என் முகம் கண்டவளோ
என் உள்ளம் கொண்டவளோ//
நல்லா feel பண்ணி எழுதி இருக்கீங்க! :-)

sakthi சொன்னது…

அழகு வரிகள்...

sakthi சொன்னது…

சத்தியம் சொல்லடி
சாக வரம் பெறுகிறேன்

அட ::)))

vaarththai சொன்னது…

//(இது ஒரு மீள்)//

அப்பவா? இப்பவா?

Unknown சொன்னது…

ஆஹா எனக்கான கவிதை போல் உள்ளது நண்பரே .நானும் ஒருத்திக்காக காத்துகொடிருக்கிறேன் .ஹும்ம் எப்ப வருவாளோ ?

தினேஷ்குமார் சொன்னது…

vaarththai said...
//(இது ஒரு மீள்)//

அப்பவா? இப்பவா?


இப்பவும் தான் நண்பரே ஸ்டில் ஐ ஆம் சர்ச்சிங்

RVS சொன்னது…

எப்போ வருவாளோ... உந்தன் கலி தீர... ;-)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே நான் இதுவரை கண்டிராத என் வருங்கால துனைவிக்காக படைக்கும் படைப்பு (இது ஒரு மீள்)

//

சோ இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகல அப்படி தானே.. (ஏற்க்கனவே மூணு கல்யாணம் ஆனத நான் யார் கிட்டேயும் செல்ல மாட்டேன்.. பயப்பட வேண்டாம்)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு..

வார்த்தை சொன்னது…

வந்த பொறகு,
"ஏன் வந்தாள்"னு
எழுத கூடாது.....சொல்லிபுட்டோம்
(சும்மா)

வைகை சொன்னது…

/நான் இதுவரை கண்டிராத என் வருங்கால துனைவிக்காக படைக்கும் படைப்பு////////////////

அதானே பார்த்தேன்! வந்ததுக்கு அப்பறந்தான் இந்த மாதிரி அழகான கவிதையெல்லாம் வராதே!

Unknown சொன்னது…

இதுவரை பார்க்கலியா?

வினோ சொன்னது…

தல சீக்கிரம் வருவாங்க...

karthikkumar சொன்னது…

நான் இதுவரை கண்டிராத என் வருங்கால துனைவிக்காக படைக்கும் படைப்பு//
ம் நடக்கட்டும் நடக்கட்டும்

karthikkumar சொன்னது…

வார்த்தை said...
வந்த பொறகு,
"ஏன் வந்தாள்"னு
எழுத கூடாது.....சொல்லிபுட்டோம்
(சும்மா////

நானும்தான் சொல்றேன் சும்மா.

அன்பரசன் சொன்னது…

//என்று வருவாளோ
என் வீட்டு படியேறி
என்னை யறிவாளோ
என் முகம் கண்டவளோ
என் உள்ளம் கொண்டவளோ........//

கண்டிப்பா உங்க மனசுக்கு பிடித்தமாதிரி தான் வருவாங்க.

Chitra சொன்னது…

நம்ம அரசியல் தலைவரெல்லாம் சேர்ந்து நம்ம பதிவர்களையும் கெடுத்துவச்சிருக்காங்க பின்ன என்ன ஓட்டு கேட்டாத்தான் போடுறாங்க


......ரூபாய், பிரியாணி, பிளாஸ்டிக் குடம், டிவி, ...... எதுவும் இல்லையா?

தினேஷ்குமார் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் said...
இதுவரை பார்க்கலியா?

அண்ணே சத்தியமா பார்கலனே

Unknown சொன்னது…

உங்க வருங்கால துணைவி ரொம்ப பாவங்க...

பெயரில்லா சொன்னது…

கவித பிச்சிகிட்டு வருது

பெயரில்லா சொன்னது…

நான் இதுவரை கண்டிராத என் வருங்கால துனைவிக்காக படைக்கும் படைப்பு//
சூப்பரு..அந்த மஹாலட்சுமி..எங்க இருக்காங்களோ..சீக்கிரம் வந்து சேரும்மா இந்தாளு எங்களை கொல்றாரு

Unknown சொன்னது…

உங்க வருங்கால துணைவி ரொம்ப பாவங்க...

இந்த மாதிரி அழகான கவிதைக்கு சொந்தக்காரங்களாக இருந்துட்டு,
அக்கறையே இல்லாமல் எங்கேயோ, பப்பரப்பா-னு இருக்காங்களே...

பெயரில்லா சொன்னது…

உங்க வருங்கால துணைவி ரொம்ப பாவங்க..//
ஆமா டெய்லி கவித சொல்லி....அவங்களை ஒரு வழி ஆக்கிடுவாரு

தினேஷ்குமார் சொன்னது…

பாரத்... பாரதி... said...
உங்க வருங்கால துணைவி ரொம்ப பாவங்க...

இந்த மாதிரி அழகான கவிதைக்கு சொந்தக்காரங்களாக இருந்துட்டு,
அக்கறையே இல்லாமல் எங்கேயோ, பப்பரப்பா-னு இருக்காங்களே...

நல்லா கேளுங்க எத்தன வருடமா தவமிருப்பது

தினேஷ்குமார் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
நான் இதுவரை கண்டிராத என் வருங்கால துனைவிக்காக படைக்கும் படைப்பு//
சூப்பரு..அந்த மஹாலட்சுமி..எங்க இருக்காங்களோ..சீக்கிரம் வந்து சேரும்மா இந்தாளு எங்களை கொல்றாரு

நீங்கதான் கொஞ்சம் கணித்து சொல்லணும் சொல்லுங்க எங்க இருக்காங்கன்னு பாஸ் இல்லைனா உங்க பாடு திண்டாட்டம் தான்

சிவராம்குமார் சொன்னது…

வீட்டுல பாக்கும்போது கவிதைய ரசிக்கிற பொண்ணா பாக்க சொல்லுங்க... :-)

மாணவன் சொன்னது…

//எத்துனை காலமடி
நின் முகம் காண..........
இம்மண்ணில் காத்திருக்க
சத்தியம் சொல்லடி
சாக வரம் பெறுகிறேன்.........//.

அழகான ரசனையுடன் அருமையான வரிகள்...

சூப்பர் தொடருங்கள்....

ஹேமா சொன்னது…

சாக வரமா இல்லை சாகாவரமா .....தினேஸ் !

அன்புடன் மலிக்கா சொன்னது…

கவிதை கலக்கல்.தினேஷ்
கவிதையை கண்டு ஓடிவரபோறாங்க.

ஓர் முக்கிய அறிவிப்பு
இக்கவிதைக்கு சொந்தக்காரி எங்கிருந்தாலும் இங்கே வரவும்.
கலியுகத்திற்குள் கற்பனைபுகுந்து ஆட்கொள்வதற்க்குள் அம்மணி நீங்க வந்துடுங்க..

மனோ சாமிநாதன் சொன்னது…

வரப்போகும் மனைவிக்கு கவிதை சமர்ப்பணம்!
வந்தபின் மனைவிக்கு இதயம் சமர்ப்பணமா?
கவிதை அருமை!
உங்களின் பீன்ஸ் சமையல் கவிதையும் அருமை தினேஷ்குமார்!

நிலாமதி சொன்னது…

உங்க ஜாதகம் சொல்லுங்க கணித்து சொல்கிறேன் எப்போதுவருவா என்று ?


She is on the way......haa haa

NaSo சொன்னது…

மச்சி உனக்காக வரப்போற துணைவி ரொம்ப பாவம். இப்படியே கவிதை சொன்னா என்னாகும்?

NaSo சொன்னது…

//ஹேமா said...

சாக வரமா இல்லை சாகாவரமா .....தினேஸ் !//

இப்போதைக்கு சாகா வரம், கல்யாணதுக்கு அப்புறம் சாகர வரம். கரக்டா மச்சி?

தமிழ்க்காதலன் சொன்னது…

அருமையான படைப்பு... எதிர்ப்பார்ப்பு.... என்னமோ தெரியல நண்பா.... நம்ம பொழப்பு இப்படியேதான் கெட்டுப் போகுது...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி