புதன், 29 செப்டம்பர், 2010

காதலை மறந்து

பருவ வயதது
பருவ மயில் - அவள்
பார்த்ததும் காதலல்ல
பயங்கர சண்டை
சண்டையிலும் அவள்
முகம் கண்டு
சாந்தம் அடைந்தேன்

வீச்சருவால்
வீச துணிந்த கைகள்
அவள் வாசம்
அறிந்ததோ என்ன

பேசும் கண்விழியில்
பாசம் படர்ந்தன
பட்டென விட்டேன்
கைபிடியை

தாழவிழுந்தது அருவாள்
மட்டுமல என் மனமும்தான்
அவள் பாசவிழிகளில்....

நெற்கதிர் தலை
தூக்க மண்ணின்
பாசம் கண்டு
தலை கவிழ்ந்தனவோ

கதிர் விருப்பத்தில்
தலை கொய்தனவோ
கதிர் அருவாக்கள்.........

நாடு கடத்தப்பட்டு
வீடு திரும்பினேன்
அம்மன் கரகம்
சுமக்கும் பாக்கியம்
பெற்றேன்.......


கரகம் தரையிறங்க
தம்ம்பூலத் தட்டில்
திருநீரிருக்க என்
கைதனில் வழங்கலானேன்
திருநீர்........

நான் சன்னதி
திரும்பும் நேரம்
ஒரு கை
சோதித்த திருநீர்
அவள் கைஎன்றுனர்ந்தேன்

கை குழந்தையுடன்
அவள்.............
காவல் தெய்வமாக
நான் இன்றும்
காதலை மறந்து...........

சனி, 25 செப்டம்பர், 2010

கூத்துக்கு ஒரு கவி

ஆயிரம் ஆயிரம் கதைச்
சொல்லுவார் ஆனந்தம்
இதுவென கண்டுகளித்தோம்
தெருவோர நாயகனாய்
நினைவில் நிற்பார்

தை தோம் தை யென
சங்கீதம் முழங்க
ஆட வந்தவன் நானே
எனை ஆட்டுவிப்பவன்
நீயே....

சலங்கை யோலிதனை
கலங்கமிலாமல்
காற்றுக்கு இசையாக்குவார்
வேறோனே.......

ஓரிரவில் சரித்திரம்
முடிக்கும்
சாம்பவான்கள்
இவராவர்.......

சாதி மதமின்றி
அன்று அனைவரும்
கண்டுகளித்த
கதாநாயகர்கள்
எத்துனையோ.........

பெயரறிவோமா இன்று
பெருந்தவறு செய்துவிட்டோம்
என்று நினைக்கிறேன்

நாகரீகம் வளர்ந்து
நாடக கலையும் வளர்ந்து
இன்றும் கூழுக்காக
கூத்தாடுவோர் வற்றிய
வறுமையில்
கலைமரவாது.........

வந்தேன் வந்தேனே
உனை
வாழவைக்கும் தெய்வம்
நானே...........
தொடரும் இருளில்
தீச்சுடரான வாழ்க்கைகள்....

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

என் மணநாள் காண

மணநாள் காண
மனதிற்கு ஆவல்
காதலுண்டு மனதில்
காதலிக்கவில்லை

தனிமையில் இன்றுவரை
கழித்துவிட்டேன்
தனிமரமாக
இனி மடலொன்று
வரைவோம் அம்மாவுக்கு

விரைவில் பெண்பார்க்க
நானாக கேட்டால்
தவறாக என்னுவரோ
தந்தை யவர்கள்
வேண்டாம் வேண்டாம்...

காலம் வரும்
கனவில் வருபவள்
கைபிடிக்க வருவாள்
அவள் வருகைக்காக
தனிமையில் இன்றும்....

திங்கள், 20 செப்டம்பர், 2010

ஐம்பதாவது பதிவு

நடுத்தர வர்கம் நான்
இன்று உங்களில் ஒருவனானேன்
ஒவ்வொரு சூழ்நிலையிலும்
ஒடுக்கப் பட்டவன் நான்
திறமைகள் பலவிருந்தும்
பலனில்லாமல் போயின

நடுநிசியில் நந்தவனம்
பற்றி யோசிப்பவன்
நானரிந்ததேனோ
நட்சத்திரம் குடைபிடிக்க
நடுவானில் நாநிர்க்க

சுற்றும் இரண்டு
சூழ்நிலை மறந்து
மனமும் மதியும்
மதிக்க தக்கவன்

கள்ளம் கொலா
உள்ளம் அடைந்தேன்
பிற்குழியல்லா
பாதை தேடினேன்

கடக்கும் பாதை
மறவேனானேன்
அடி தொடும்முன்
குழிபெயர்த்தன

பாதங்கள் பலவீனப்பட்டன
அடித்தொடரும் முன்னரே
மனம் தளரவில்லை
கடவுளை பார்த்ததுண்டா
நீவிர்............

நான் பார்த்ததுண்டு
பலவுருவில் - இன்று
உங்கள் உருவில்
கடவுள் என் முன்னே
என் எழுத்துக்கு
கைகொடுக்கும்
தெய்வங்களாக.........

சனி, 18 செப்டம்பர், 2010

தந்தை மனம்

பொன் நகைத்தது
பெண் நகைத்ததால் - இரவு
விண் வியக்கும் வீதியுலா
விடியற்பொழுதோ நின்
மணவிழா......

கண்ணாளன் கைப்பிடித்து
கரையேற துடங்கும் விழா
என் நினைவு வேண்டாம்
இனி உனக்கு......

கருவேலம் முள்ளிருக்கும்
காட்டு வழியல்ல - நின்
கைபிடித்தவன் காட்டும் வழி
பாதையில் முள்ளிருக்குமாயின்

வழியில் தைத்த முள்
நினை வழிமறிக்க போவதில்லை
முள்ளிற் பாதம் பட்டாலும்
சொல்லிற்க் காளாகாதே.....

பாதையை சீர்ப்படுத்தி - நின்
துணையின் கரம்பிடித்து
தொலை தூரம் பயணிக்க
என் அன்பு மகளே.........

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

அன்புத் தோல்வி

நான்

ந டை பயில்கிறேன்
நா கரீக நவீன உலகில்

நி ஜம்கூட நிழலாகிறது
நீ திக்கு நிலையாகிறேன்

நு ணுக்கமாக யோசிக்கிறேன்
நூ ற்றுக் கணக்கான ஆசைகள்

நெ ருங்கி செல்கிறேன்
நே ர்மையான வழிதனில்

நை ய புடைக்கப் பட்டு

நொ றுங்கி விழுகிறேன்
நோ க்கம் மாறாமல்...........

திங்கள், 13 செப்டம்பர், 2010

தெருவோர எழுத்தரியா(பார்வையில்லா) பாடகன்

சலங்கையில்லா சங்கீதம்
சாலை யோரம் சமர்ப்பணம்

சிந்தனை சில நிமிடங்கள்
சீரான வாழ்வில்லை

சுற்றும் பூமியில்
சூதனமான வாழ்நிலை

செயற்க்கை கருவிகள்
சேர்ந்தி சைத்தாலும்

சைகை காட்டி
சொல்லும் வார்த்தையெல்லாம்
சோற்றுக்கு கவியானது
சௌகர்யமில்லா பாடகன்.............

கௌரவம்

கண்கள் வியக்கும்
காணலின் கரையில்
கிளிப் பேச்சு
கீற்று குடிசைகள்,,,,,,,,,,


குளத்து தாமரையின்
கூட்ட நெரிசல்கள்
கெட்டியக்காரனின்
கேளிக்கை வசனங்கள்.......


கை
கொடுத்துப் பழகிய
கோலங்களின் கோர்வை வளைவுகள்
கௌரவம்...........

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

என்னைப்பற்றி சிலவரிகள் 10

வணக்கம்
என் உடன் பிறவா நான் என் உடன்பிறந்தோர் என்று என்னும் சகோதர சகோதரிகளே என் மனமார்ந்த நன்றிகள் இக்களிமன்னயும் கலயமாக்க வழிகாட்டிய தெய்வங்கள் நீங்கள் உங்கள் ஆதரவுக்கு என் தாழ்பணிந்து வணங்குகிறேன் உங்களை. நிங்கள் ஆசி கிடைத்தால் பாக்கியம் பெறுவேன் இக்கலியுலகில் நான்...........
இன் நடைமுறை வாழ்கையில் நன்றியுள்ள நடைபினங்களைப் பற்றி அதாவது கண்ணுக்கு தெரியாத சமுதாயங்கள் பற்றி.....
என்னடா இவன் என்னைப்பற்றி சிலவரிகள் தொடரை முடிக்காமல் அடுத்த தொடருக்கு அடிஎடுக்கிறான் என்று என்னுகிறீர்களா........
என்னைப்பற்றி சில வரிகளின் தொடர் என்னைப்பொறுத்தவரை நீள்கிறது.............

கல்லூரி நண்பர்களின் வேண்டுகோளால் தடங்கல் ஏற்ப்பட்டுள்ளது...............
என் நட்ப்பை நடைபினமாக்கியவர்கள் இன்று குடைப்பிடித்து வழிமருக்கிரார்கள்...
நானும் கல்நெஞ்ச காரனல்ல அவர்கள் குரல் கேட்டு நான் எப்படி போனாலும் சரி உங்களுக்காக
அதாவது கல்லூரி நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பதிவிட மறைத்துவிட்டேன்.
ஆனா ஒன்னுங்க எல்லா மாணவர்களும் மறு தேர்வு எழுதினோம் வெற்றிபெற்றோம் நானும் முதல் வகுப்புலதான் வெற்றி பெற்றேன் நண்பர்களே.............
அவர்களும் என் நண்பர்கள் தானே என்னுள்ளே இன்றும் அதற்க்கு மேல் கூற என் நா இடம் கொடுக்கவில்லை............


இன்று நின்
வாழ்வு.........
நாளை நின்
தோழனின்......
வெற்றி
உணதாகட்டும்
வெற்றி பெறுவோர்
நின் தோழறாகினும்
நின் புகழே
போற்றப்படும்.......
என் உயிருள்ளவரை
கடவுள்..............

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

என்னைப்பற்றி சில வரிகள் 9

வாகனம் விடியலை நோக்கி விரைந்துகொண்டிருந்தது சரியாக காலை 8:00மணிக்கு சென்னை அடையாரிலுள்ள கல்வித்துறை அமைச்சரின் பங்களாவை அடைந்ததது அனைவரும் இறங்கினோம் எங்களுக்கு முன்னால் ஒரு நெடும் வரிசையில் மக்கள் கூட்டம் மனு ஒன்றை ஒவ்வொருவரும் கையில் பிடித்தபடி திக்கென்றது எங்களுக்கு என்னடா இவ்வளவு கூட்டமா விரைந்து வந்தும் விடியாதுபோகுமோ என்று அனைவர் மனதிலும் எண்ணம தோன்றும் நேரம்.
பங்களாவின் உள்ளிருந்து ஒரு குரல் வந்தது பதிக்கப்பட்ட மாணவர்களை அமைச்சர் ஐயா உள்ளே அழைக்கிறார் என்று அனைவரும் உள்ளே செல்லாமல் நானும் மற்றொரு நண்பனும் மற்றும் என் பெற்றோர் மற்றும் எங்களுடன் வந்த உறவினர் ஐவரும் சென்றோம் நான் முன்தினம் இரவில் அமைச்சரின் உடனதிகாரியுடன் கூறியதை தெளிவுடன் தக்க சாட்சியங்களுடன் அமைச்சரிடம் சமர்ப்பித்தோம் அவர் ஒரு அதிகாரக் கடிதம் ஒன்றை முத்திரையுடன் கொடுத்து இக்கடிதத்தை BOARD OF TECHNICAL EDUCATION OF TAMILNADU அங்குள்ள உயர் தலைவரிடம் கொடுக்குமாறு சொன்னார்கள் அவருக்கு நன்றி கூறி அனைவரும் விரைந்தோம் வாகனத்தில் கிண்டியை நோக்கி.
நாங்கள் சென்றதும் மற்ற வாகனமும் கிண்டியை வந்தடைந்திருந்தது அதில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள நான்கு மாணவர்களின் பெற்றோர்களும் சில மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். அனைவரும் சிற்றுண்டியை முடித்துவிட்டு BOARD OF TECHNICAL EDUCATION OF TAMILNADU அலுவலகத்தில் உயர்தலைவரின் வருகையை எதிர் நோக்கி காத்திருந்தோம். அவரும் நேரம் நெருங்கி கொண்டிருக்கையில் வந்துவிட்டார் அலுவலக அறையில் உள்ளார் அனைவருக்கும் உள்ளே அனுமதியில்லை என்று ஒரு சிலர் மட்டும் செல்லலாம் என்றனர் என் உறவினர் அவர் மட்டும் உள்ளே சென்று மாணவர்கள் பதிக்கப்பட்ட விதத்தினைக் கூறி அனைவரும் உயர் தலைவரிடம் பேச CONFERENCE ஹாலில் அனுமதிக்கப்பட்டோம்.
அவரிடம் கல்வித்துறை அமைச்சரின் அதிகாரக் கடிதம் கொடுக்கப்பட்டது கடிதத்தை படித்த மனிதர் கோபம் கலந்தகுரளில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கு இதுவரை எங்களுக்கு இந்த சம்பவத்தின் செய்தி கிடைக்கவில்லை அனால் நீங்கள் கல்வித்துறை அமைச்சரிடம் சென்று வந்துள்ளீர்கள் பதிக்கப்பட்ட நீங்கள் முதலில் உதவிக்கு எங்களிடமில்லையா வரவேண்டும் என்றார் அச்சமயம் நான் எழுந்து நின்று மாணவர்களாகிய நாங்கள் இங்கு வந்ததையும் கல்லூரி முதல்வரின் மிரட்டலையும் விரிவாக விவரித்தேன்......
அவர் யோசிக்க தயாரானார் பின் கல்லூரியில் நடந்தவற்றை வினவினார் நானும் என் சகமாணவ நண்பர்கள் சிலரும் நடந்தவற்றை கூறினோம் கடுங்கோபத்துடன் அவர் கண்கள் பக்க சுவரை நோக்கின............

கடும் கோபம்
கொண்டவரோ.....
விடை கிடைக்குமோ
இவரிடம்.....
விளைவுகள் தான்
நேருமோ........

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி