திங்கள், 27 ஜூன், 2011

எங்கே நீ?...எங்கே நீ?...


எங்கும் நிலவுவதில்லை,- நீ
ஏன் இங்கு உலவுவதுமில்லை..?
காலத்தின் வேகத்தில்
உன்னை மறந்தாயோ..?
கலங்கும் கண்ணினுள்
கருவிழியும் தேடிட...!
எங்கு போனாயோ..?
என்ன ஆனாயோ...?
உண்மை அறிந்தாயோ...?!

உன்னை தேடும் பாதையில்
பாதகங்கள் ஏராளமாய்...
விருட்சமாகி உள்ளன.
யார் வளர்த்ததோ..? நிழலில்லாத
விருட்சமாய் விண்ணையும்
தொடும் போல வியக்கிறேன்..!!
பாதைகள் மாறியே பலதூரம்
பயணித்தும் உன்னையறியாமல்...

என்னை மறந்து மரணிக்கிறேன்..
நெடுந்தூர பயணத்தின் முடிவில்...!
அமைதியில்லா விடியலில்
அடங்கிப்போன சரிரத்தில்
அமைதியாக பிரியும்
உயிர் மட்டுமே அறியும் போல...!
அமைதியின் விடியலை.

ஞாயிறு, 26 ஜூன், 2011

கவிச்சோலை கவிதைப்போட்டிநண்பர் எல் . கே அவர்கள் கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம் சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை எழுத விடுத்த போட்டி அழைப்பை ஏற்று அடியேனின் வரிகளும் அவையில் பங்கேற்று எமக்கு பெரும் மகிழ்சியை அள்ளிக்கொடுத்துள்ளன

முத்தொள்ளாயிரம் பாடல்
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

இவை அடியேனின் வரிகள்
வீரம் நிறைந்திட்ட போர்ப்படை வீழ்ச்சிகளற்று
தேர்ச்சிகள் பெற்றோன் வீழ்வதாமெதிர்
படைகளன்ரென எண்ணமது கொண்ட
வெண்குடை தாங்கிய தேர்தனைக் கண்டதும்
நிகழ்தனில் அத்தேர்தனை
தரைத்தாழவீழ்த்தி வெண்குடைதனை
பற்றிதம் கால்களால் மிதித்தழித்து
வெற்றிவீருகொண்டு பிளிறும் யானை
தன்னவனைக் காக்கும் எண்ணமத்தில்
சித்திரை முழுநிலவுக் கொண்ட
தோற்றம் கண்டு வெண்குடை தாங்கியொரு
போர்ப் படை வருவதென எண்ணி
வெண்ணிலவை வீழ்த்த வானுயர
துதிக்கையை உயர்த்தி வீருகொண்டதொரு
சேர மன்னனின் யானை ............

விளக்கம்
தங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது. அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும், நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது என்பதாம் இச்செய்யுளின் பொருள்.

வியாழன், 23 ஜூன், 2011

கண்ணிருண்டு கனவுகண்டேன் ....


கண்ணிருண்டு கனவுகண்டேன்
செவி யுணரா ஓசைக்கேட்டேன்
பழியுனர்த்தும் பாஷாணம் கொண்டு
பரியமர்ந்து வாரான் கண்ணே

பட்ட விதை துளிர்க்க எண்ணி
பாதை மாறும் பச்சிளம் கன்று
சட்டை பையில் சாட்சிக் கொன்று
விசிறி நடக்கு விதியாமிங்கு

மதியுண்டோன் வினைத்து விற்க்க
பழியெல்லாம் விதியின் படியில்
சுண்ணாம்பு சேருமிடம் சாருண்ட
மாருமிடம் எவரறியோம் ...

வெள்ளி, 17 ஜூன், 2011

மா மாயை ....!
நாழிகைகள் நரகத்துள் பயணிக்க
தாண்டவமாடும் தேகமது தகனமாகி
நாற்றிசையும் சுட்டெரிக்கும் வட்டறியா
மரணமடி வினவுதங்கே...?

கள்ளுண்டு கலனும் தளும்ப நீருண்ட
நாருமது மாற்றமிலா வேருமது
சுருண்டு கடையேனும் நர்த்தனமிலா
அர்த்த சண்டன கண்டம்

தீருமது வேள்வியிலா சாரமதில்
நீலகண்ட நிலைக்கள்ளான் நினைவுறுத்தி
நாளுமது நகையாலும் சூலத்தின் சூழ்ச்சி
கண்டான் நாவாலும் சிறக்க

சித்தமங்கே சரித்து வாரோன்
ஏற்றமெல்லா சமர்த்துவானேன்
சித்திரம் கண்டதோர் கானகம்
மீண்டுயிர்த்து செழிக்கும்.

சனி, 11 ஜூன், 2011

மனம் மலரிலடங்கி மாயாதோ...!


பாதை வழிகளின் கூடே வலிகளின்
சங்கமம் இடைவிடா தாக்கம் ஏக்கமாய்
இருளியதோ என்னில் ஏனோ மாற்றம்
இருப்பிலடங்கா நெருப்பாய் தகிப்பு

அனுதினமும் அலைகடலில் ஆழ்ந்து
மடிகின்ற ஆயிரம் கனவுகள் எங்கோ
நினைவுகள் படை சூழ போர்களம்
காணும் புரியா புதிராய்

மனம் மலரிலடங்கி மாயாதோ
மண் சுமக்க மடியேந்தும் சுயம்
கண்டிராத ரணம் கோர்வையாகி - உடல்
சுற்றும் போர்வையானதேன்

நன்னின் யாதோ அகமலர்ச் சூடின்
சுகமலர் பிரிந்தே இணைவை நாடி
மாயை மிரட்டும் காரண விருட்சம்
கரை சேர்க்குமோ என்னில் ....!

கனவுகள் கூடி......


அந்திமத் தென்றலோடு
ஆத்தங்கரை அமைதியில்
உடனுடை குடியேறி
என்னுள் கலந்தவளே
நின் அழகை ரசிக்க
நாணத்தால் மேகத்துள்
மறைவதென்ன வெண்ணிலவே......

நடைபோடும் மனமே நாணக்
கோலமிடும் பாதவிரலே
பனித்தூவும் இரவில் உடன்
விழித்திருக்கும் நிலவே
அன்ன விழி பேசும்
வியப்பில் விடியல் காண
மறுக்குதம்மா கனவுகள் கூடி.......

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி