செவ்வாய், 28 டிசம்பர், 2010

பறிபோகும் விளைநிலங்கள்
விண்ணவனின் எண்ணமெல்லாம்
கதிரவனின் துணைக்கொண்டு
நீர்த்துளியாய் சேகரித்து
நிலைக் கொண்டு ஓரிடத்தில்
காற்றுக்கு ஆணையிட்டு
மழைத்துளியாய்....!

பச்சை கம்பளம் போர்த்தி
விளைநிலம் செழிக்க
நேர்த்தியாய் அருள்புரியும்
இயற்கை அன்னை இன்று
சிறை பட்டாளோ...!
சிலையானாளோ...!?

அடுக்கடுக்காய் விளையும் பயிர்
'நன்னீரும்' மாறி வர....
'கண்ணீரால்' மூழ்கினவோ...!
ஆசைகொண்டு நேசம் விற்கும்
பாசமற்ற மானிடா, - உன்
அடுத்த வேலை சோறு பொங்க
அடுப்பெரிந்து பயன் என்ன...?
ஆடி மாச காற்றுக்கூட
திசை மாறிப்போன நிலை
கருவறுத்த பாவமெங்கும்
பட்டினியால் வயிறு...
பற்றி எரியும் காலம் இதோ...?!


விலைபேசி முடித்தாயோ....
விளைவித்த தாயவளை...!
அன்னமிட்ட தாயவளின்
அவல நிலை பாடுகிறேன்.

பாதகனே நிறுத்தி விடு
பணம் திண்ண போராயோ...?
பிணம் புதைக்க...
இடம் தேடி அலைவாயோ...?
மனதோடு பேசியவனே
மக்களோடு பேசு.
அவல நிலைகள் புரியும்.


அரசாங்க ஊழியரே....!!
ஊதியமே பெறவில்லையோ...!
ஊமையான உம் கரங்கள்...
விளை நிலத்தின் தரம் மாற்றி
விலை பேசி விற்றீரோ...?!
உம் கரம் அழுகி போகாதோ....?

கூறுபோடும் மானிடா...!
குறுக்கு புத்தி ஏனடா...?
எள்ளின் குணம் அறிவாயோ...!
ஏட்டில் தான் படித்தாயோ....?!
ஏழைக்கேத்த எள்ளுருண்டை
சொல்லும் கதை அறிவாயோ..?!
விளைவிக்கும் நிலமன்றோ..!
நம் தாய்க்கு நிகரன்றோ...!
உன் தாயின் அழுகுரல் தான்
கேட்டறிந்தால் நலமுனக்கு.

பொருள் சேர்க்க துணிந்தாயோ..
தனிப்பிணமாய் நீ செல்ல...?!
தரணி ஆள ஆசையுண்டு...
தனிமையாகும் உன் வாழ்வு.
உண்டு வாழும் உலகினிலே
உனக்கொரு நெல் கிடைக்காதே.

கணக்காக பணம் சேர்த்து
பத்திரமாய் பதுக்கி வைத்து
பணம் உண்டு வாழ்வாயோ
பிணம் உண்டு வாழ்வாயோ
மானிடா நீயே பதில் ...!

கலியுகம் : வாய்விட்டு கேட்டாதான் சோறு கைமேல கொடுத்தாதான் ஓட்டு என்று போய்கிட்டு இருக்கு நம் உலகம் இன்று. இந்நிலை இங்கேயும் இருந்தால் பகுத்தறிவில்லா மக்கள் எங்கே??? நண்பர்களே மாறனும் இது நகைச்சுவை அல்ல ....

25 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

////அடுக்கடுக்காய் விளையும் பயிர்
'நன்னீரும்' மாறி வர....
'கண்ணீரால்' மூழ்கினவோ...!////

வருணனின் விஸ்தரிப்பில்
களனிகளும் பாவிகளோ...

வினோ சொன்னது…

/ ஆசைகொண்டு நேசம் விற்கும்
பாசமற்ற மானிடா /

எல்லாமே இப்படி தான் ஆகி போச்சு தினேஷ்...

வெறும்பய சொன்னது…

கணக்காக பணம் சேர்த்து
பத்திரமாய் பதுக்கி வைத்து
பணம் உண்டு வாழ்வாயோ
பிணம் உண்டு வாழ்வாயோ
மானிடா நீயே பதில் ...!

//

பதில்கள் இருக்குமா என்பதே சந்தேகம் தான்..

ஜோதிஜி சொன்னது…

வாய்விட்டு கேட்டாதான் சோறு கைமேல கொடுத்தாதான் ஓட்டு என்று போய்கிட்டு இருக்கு


சும்மா போனா எப்படி தவறிருந்தால் தண்டனைக் கொடுங்கள் ............


ரொம்பவே ரசித்தேன் தேன்.

Meena சொன்னது…

//மனதோடு பேசியவனே
மக்களோடு பேசு.
அவல நிலைகள் புரியும்.//
உலகம் இப்படியிருக்க நாமெல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்

வைகை சொன்னது…

என்ன திட்னாலும் ஒரெக்காது பங்கு!

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் தளம் விரிவடைகிறது.அதற்கான பாராட்டுக்கள் முதலில் தினேஷ்.

இது குறித்து நாம் விரிவான விரைவான் முடிவுகளை எட்டாது போனால் வரும் சந்ததிக்கு நாம் இன்று பார்க்கிற பல விஷயங்கள் இருக்காது.

Jupiter Family சொன்னது…

سنة جديدة سعيدة!
السنة الجديدة 2011 احتفالات الألعاب النارية في جميع انحاء العالم
http://fireworks2011.blogspot.com/
عرض على موقع يوتيوب
http://youtu.be/QlQ3b0TfiFM

Happy New Year!!
New Year's 2011 Fireworks Celebrations Around the World
http://fireworks2011.blogspot.com/
Demo on YouTube
http://youtu.be/QlQ3b0TfiFM

ஆமினா சொன்னது…

இன்றைய நிலையை சொல்லும் கவிதை

மிகவும் ரசித்தேன்

சுசி சொன்னது…

பதில் சொல்லுவாங்க.. செயல் இருக்காது.

karthikkumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
karthikkumar சொன்னது…

கவிதை அருமை பங்கு. விளை நிலங்கள் கான்க்ரீட் காடுகளாக மாறிகொண்டிருக்கின்றன... இந்த நிலை மாற வேண்டும்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///விலைபேசி முடித்தாயோ....
விளைவித்த தாயவளை...!
அன்னமிட்ட தாயவளின்
அவல நிலை பாடுகிறேன்//

உள்ள நிலையைச் சொல்லும்...
உணர்வின் வெளிப்பாடு...
பகிர்வுக்கு நன்றி.. :)

சங்கவி சொன்னது…

//கணக்காக பணம் சேர்த்து
பத்திரமாய் பதுக்கி வைத்து
பணம் உண்டு வாழ்வாயோ
பிணம் உண்டு வாழ்வாயோ
மானிடா நீயே பதில் ...!//

Correct...

சே.குமார் சொன்னது…

உள்ள நிலையைச் சொல்லும்...
உணர்வின் வெளிப்பாடு...

சாய் சொன்னது…

கலக்கல் தினேஷ் குமார். நானும் என் ப்ளோகில் மழை, நிலம் பற்றி எழுதி இருக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் ஆழம்.

Kalidoss சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை.

DREAMER சொன்னது…

உண்மையை உரக்ககூறும் ஆழமான கவிதை..! மிக நன்று..!

-
DREAMER

சிவகுமாரன் சொன்னது…

//பணம் உண்டு வாழ்வாயோ
பிணம் உண்டு வாழ்வாயோ//
...
முகத்தில் அறையும் வரிகள்.
விவசாயம் செய்ய ஆளில்லாத போது விளைநிலங்கள் இருந்தென்ன ?
இன்று எந்த விவசாயின் மகனும் விவசாயம் செய்ய விழைவதில்லை. அதனால் ஏதும் விளைவதில்லை.

ஆனந்தி.. சொன்னது…

உங்கள் ஆதங்கத்தை அருமையாய் கவிதையில் வடிச்சிருக்கிங்க சகோ...பெருமூச்சு மட்டும் தான் நம் பதிலாய் இருக்க முடியும்..:(( அப்புறம் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

கவிதை காதலன் சொன்னது…

அந்த படங்களோட சேர்த்துப்பார்க்கும் போது, கவிதையோட வீரியம் போட்டு தாக்குது

அரசன் சொன்னது…

ஆதங்க வரிகள் ... தவறு செய்யும் மூடர்களுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி உங்கள் வரிகள் ...
இந்நிலை மாறவில்லை என்றால் பின் யாவருக்கும் உணவில்லை என்று உணரும் வரை தொடர்ந்து போராடுவோம்...
படங்களும் அருமை ... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் முத்தான பணி....

Kalidoss சொன்னது…

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கோமாளி செல்வா சொன்னது…

//ஆசைகொண்டு நேசம் விற்கும்
பாசமற்ற மானிடா, - உன்
அடுத்த வேலை சோறு பொங்க
அடுப்பெரிந்து பயன் என்ன...?///

//விலைபேசி முடித்தாயோ....
விளைவித்த தாயவளை...!
அன்னமிட்ட தாயவளின்
அவல நிலை பாடுகிறேன்.
///

//ஏழைக்கேத்த எள்ளுருண்டை
சொல்லும் கதை அறிவாயோ..?!
விளைவிக்கும் நிலமன்றோ..!
நம் தாய்க்கு நிகரன்றோ...!//

வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க அண்ணா ..
உண்மைலேயே கலக்கல் .!

ருத்ரன் சொன்னது…

தினேஷ் அருமையான கவிதைடா, நல்லா இருக்கு, விளைநிலங்களை பற்றி உன்னோட ஆதங்கம் கவிதையில அருமையான வரிகள கொண்டு எழுதியிருக்கடா, என்னோட ஆதங்கமும் இதுவே.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி