சனி, 29 நவம்பர், 2014

யார் இவனோ ...?


எத்தனை கால் யார் இவனோ 
அத்தனை ஆளுபவன் மகனோ
சித்தனை போல் சத்தம்இலா
சுத்தனை மேலுடுப்பான்

தத்துவமே தனித்துவமாய் சிந்தை
புகுவனமாய் என்றும் புதுயுகமாய்
நித்திரை நீந்தி பொழுதடைவான்
சத்திரமே சமய சித்திரமே

புத்தி புதுவான் பக்தன் புகழ்வான்
சக்தி எனுவான் சடமுறைவான்
நிலை யுணர்வான் தனையுழல்வான்
சிலை யெனுவான் தனியே

தத்தளிப்பான் தானே முத்தெடுப்பான்
கனிய கவர்ந்திடுவான் கானலிலே
தாகம் தீர்வான் காணும் மயிலேறி
கனவடைப்பான் காக்க 

காலமெனும் தேரிலேறி பார்சுற்றி
ஊர்சுற்றி உலகளப்பான் நொடியில்
உடனிருப்பான் மயமெனும் மாயை
மடியில் தவழும் மனமோ..


வியாழன், 27 நவம்பர், 2014

மகாகவி பாரதியின் 132 வது பிறந்தநாள் விழா போட்டி


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை  நடத்தும்” கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை மற்றும் வரலாற்று கட்டுரை  போட்டிகளின் விவரங்களைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.  தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கவிதை போட்டி:

  1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
  2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (உ.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
  3. 20  வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
  4. கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல்,  தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
  5. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
  6. உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.

கட்டுரைப் போட்டி:

  1. காமராசரை முதலமைச்சராக பெறாத தமிழ்நாடு…
  2. என் வாழ்வில் பெண் என்பவள். . .
  3. உலகியலில் தமிழர் நாகரீகம் ஓங்கியது எங்ஙனம்..?
  4. எனது பார்வையில் தொல்காப்பிய தமிழ்…
  5. உலகக்கலைகளும், பாரதக் கலைகளும்.(ஓர் ஒப்பீடு)
  6. தமிழகத்தில் அகத்தியலில் ஆணும், புறத்தியலில் பெண்ணும்.
  7. போபர்ஸ் முதல் அலைக்கற்றை வரை
விதிமுறைகள்: 3 முதல் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
தமிழ்க்குடில் வழங்கிய தலைப்புகள் அல்லாது தங்களுக்கு விருப்பமான தலைப்பிலும் கட்டுரை எழுதலாம்.

சிறப்பு கட்டுரைப்போட்டி – பெண்களுக்கு மட்டும்

*** பெண்கள் மட்டும் பங்குகொள்ள வேண்டும்.***
தமிழ்க்குடில் வழங்கியிருக்கும் தலைப்புகளில் தங்கள் சிந்தனையில் 3 பக்கங்களுக்குக் குறையாது கட்டுரை வடித்து அனுப்பவும்.

  1. தாய்மை
  2. பெண்மை
  3. நான் படைக்க விரும்பும் சமூகம்
  4. உயிரியல் பரிணாமத்தில் பெண்பாலினத்தின் பங்கு.
  5. வயல் வெளியிலிருந்து வான்வெளி நோக்கி..(பெண்கள்)
  6. பெண் விரும்பும் ஆணின் பரிணாமம் - காதலன், கணவன், மகன்…?
  7. பாரதி தேடிய புதுமைப்பெண்ணாய் நான்
குறிப்பு: கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்பு கட்டுரைகள் தமிழ்க்குடிலின் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வரலாற்று கட்டுரைப்போட்டி:

தென்னிந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு தொடர்புடைய தமிழனின் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகமெங்கும் அறியச்செய்யும்  எண்ணத்தில் இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் ஒரு புதிய முயற்சி.

தாங்கள் வாழும் பகுதி அல்லது தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் கிடைக்கக்கூடிய அரிய தகவல்கள், அடையாளச்சின்னங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை இணைத்து புகைப்படத்துடன் கூடிய கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

சங்ககாலம், மூவேந்தர் காலம் மற்றும் அதற்குப்பின்னான காலங்களில் செவிவழிச்செய்தி, கதைகள் மற்றும் வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகள் சார்ந்த, ஏதேனும் ஒரு களத்தை எடுத்துக்கொண்டு இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை அதற்கான சான்றுகளுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முக்கியக்குறிப்பு: தாங்கள் திரட்டியனுப்புகிற தகவல்கள் ஏற்கனவே வெளிக்கொணரப்பட்ட தகவலாகவோ, இணையத்தில் கிடைக்கக்கூடிய தகவலாகவோ இருக்கும்பட்சத்தில் பரிசுக்கு தகுதியற்றதாக கருதப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

      படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 05.12.14  
படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும் 

போட்டியின் முடிவு பாரதியின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும்.

பரிசு விவரங்கள்:
  1. 1.   வரலாற்று கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு:               ரூ.3000/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்                             
மூன்றாவது பரிசு:        தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

பரிசுத்தொகை என்பதை உங்கள் உழைப்பிற்கான எங்களுடைய சிறு அன்பளிப்பாக மட்டுமே கருதவேண்டுகிறோம்.  தங்களுடைய உழைப்பிற்கும், அறிவாற்றலுக்கும் முன்னால் இந்த பரிசுத்தொகை ஈடாகாது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். ஆயினும், மறைந்துகிடக்கும் நம் வரலாறுகள் நம் மக்களிடையே சென்றடையவேண்டும் என்ற ஆர்வத்திலும், அக்கரையிலும் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். இந்த முயற்சியில் உங்கள் அனைவரது முழு ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் மட்டுமே நம் வரலாறுகளை மீட்டெடுக்கமுடியும்  என்கிற நம்பிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். நம் சமூகத்திற்கு நாம் செய்கிற சேவை என்கிற தார்மீக பொறுப்பின் அடிப்படையில்
வரலாற்று ஆய்வாளர்களும், வல்லுநர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேற்கிறோம்.

  1. 2.   கவிதைப்போட்டி:

முதல் பரிசு:          ரூ.1000/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு          
                          மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
  1. 3.   கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு:          ரூ.1000/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு                                   
                          மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

  1. 4.   பெண்கள் சிறப்புக்கட்டுரை
முதல் பரிசு:          ரூ.1500/-  மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு                                  
                    மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

என்னதான் நான் செய்வது ? இயற்கை...!


கொட்டி கொடுத்தாலும் கோணலென்றான் என்னையே
                  கட்டிக் கொடுத்தாலும் கானலென்றான் உண்மையே
என்னதான் நான்செய்ய நாடெங்கும் பஞ்சமாம்
                  தன்னைதான் திட்டினான்வா னம்பார்க்கும் பூமியே
என்னைப்பார் ஏலனமாய் ஏர்க்களப்பை காலமாய்
                   சன்னிதியின் மூளையிலே சார்த்திவைத்த கோணமே
கொண்டதெல்லாம் கொட்டிவைக்க கோவணத் தாண்டி,யான்
                   கண்டதெல்லாம் பூட்டிதைத்த கோலம்தான் கொண்டவன்

கொட்டும் மழையெட்டி கோட்டைக்குள் கோலமிட
                  சொட்டும் மேனியெங்கும் சோலைசுனை போலே
தட்டிதட்டி பார்த்தே தனக்குமென ஆர்ப்பரிப்பில்
                  குட்டிகுட்டி  கள்ளம் குடைக்குள் அமர்ந்தஉன்னில்
வஞ்சனையை வார்பாக்கி  வாகைசூட வேதினம்
                   பஞ்சனையை தேடி பவணிவரும்  பாதகனாய்
நெஞ்சினிலும் மிச்சமில்லை நாடெங்கும் தத்தளிக்க
                   தஞ்சமெனும் வாக்குமெல்ல தங்கிகொண்ட துள்ளே

கொடுத்தவனும் போண்டி கொணர்ந்தவனும் ஆண்டி
                  எடுத்தவனை தாண்டி எழுந்தவன் கொண்டானே 
கோடுமென தென்றகோரிக் கையைதாண்டி கோளமே
                  தோடுடைதாரி தோகை தொலைவில் விரித்தானே
கட்டிடத்தை கொண்டுவின் மேகம் தொடுவானா
                 கிட்டிடும் தண்ணீரை கொட்டிடும் கோரநிலை
எட்டிட என்னையேன் ஏச்சுதிந்த மேனியெல்லாம்
                 பட்டிட பாவசுமை ஏறிதெல்லாம் என் மேனியாம்


இப்படி அப்படி பேசிபேசி கொல்லுறான்
               எப்படி பாருங்களேன் சொற்ப்படி வாசல்
சுகப்படி தேடல் அதில்இடையே மோதல்
               அகப்படி ஏனோ அவனவன் வாழ்வதில்லை
வீனோ வியப்பதும் தானோ புலம்பலில்
               நீனோ நிறைப்பதும் மேலே குறைப்பதும்
என்றானாய் இன்னிலை காலம் கழிப்பது
               வென்றாலும் இல்லை விடியட்டும் என்றாகும்......



ஞாயிறு, 23 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி....

 அனைவருக்கும் வணக்கம் என் மீது கொண்ட அன்பால் அண்ணன் மனசு குமார்  அவர்கள் கனவில் வந்த காந்தி தொடுத்த கேள்விகளுக்கு தானும் பதிலெழுதி தன்னையும் எழுத அழைத்திருந்தார் கால ஓட்டம் சமயம் சரிவர கிட்டுவதில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் ஆடு மாடு வேண்டுமானாலும் மேய்த்து விடலாம் இந்த மனிதர்களை மேய்ப்பது பெரும் வேலை அய்யா அதுவும் பாகிஸ்தானி, பஞ்சாப் சிங் முதல் கொண்டு அனைத்திந்தியா எனும் போது தலை கொஞ்சம் சுத்தும் தான் முன்னூறு நானூறு பேர்களை மேய்க்கவே இப்படி புலம்புறேன் என்றால் சரிவாங்க நேரா காந்தி தாத்தா கேட்ட கேள்விக்குள்ள போவோம் ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா.....
1. மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?
         மறுபிறவி 
மனம் திருந்துமா விருந்தும் அருந்துமா 
நிறைந்த மரணமும் அறிந்த தருணத்தே
அடைபட்ட கூண்டினை திறக்கும் சாவியாய்
பாவியின் ஆவி கிடக்கட்டும் பரிதாபம்
ஏனென்ற நிலை மாற நாளையென் பிறப்பு
உதிக்கட்டும் ஆதவன் கதிர் விழுமிடத்தே

(அண்ணல் : அய்யா குமாரு எங்கய்யா இருக்க முதல் கேள்வியிலே மூச்சு முட்டுதுய்யா )

2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்..?
             நான் ஆட்சியாள வேண்டுமா
சாட்சிகள் தூண்டிய காட்சியடி அன்பின்
ஆட்சியை கொணர  தேர்வெழுதி பன்பின்
பாலனாய் பணிவின் குணங்கொடடி தேரோட்ட
பாராட்டு வேண்டாம் பணியை தொடர்வேன்
முழுமதியே சாதிக்கும் ஆசையை ஆளனும்
பிள்ளை அவனில் சாதியின் வாசமேன்
வீசனும் சொல்லேன் களைந்தெரிவேன் 
அரசாலும் ஏட்டிலே நாட்டிலே பஞ்சம்
யாரங்கு தஞ்சம் தவிப்புக்கே எங்கும்
முதலான உரிமம் அழைப்புக்கு தயங்காதே
இதுவென் ஆட்சி இளவல்களே என்கட்சி

(அண்ணல் :  புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாம தெளிஞ்ச மாதிரியும் இருக்கு தம்பி )

3. இதற்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?
அயலுக்கும் புயலாவேன் கனல்கக்கும் தீயாய்
சுழலுக்குள் சூரையாடவே சூத்திரங்கள் தேர்வாய்
கொண்ட சாத்தியமாகும் வாழ்வின்வழி அமைய
மக்களும் புயலாகுவர் அயலானை வெல்ல
(அண்ண்ல் : ம்ம்ம்ம்)

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
மதியாத பிள்ளைக்கு புதிதாக தண்டனை
தனியேதான் தவியேன் தனக்கு தான்துணை
என்றாகி போகுமென் ஆட்சியில் அஞ்சுவர்
முதியோரை தவிப்பில் விட அருஞ்சுவர்
அரணாக பெற்ற பிள்ளைகளே அமைவர்

(அண்ணல் : சரிதான் )

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
காட்சியெனும் கூண்டை கண்முன் கொடுத்து
சாட்சியில்லை எனும் பேதத்தை உடைப்பேன்
மக்கள் சாட்சியெனும் சொல்லே மனமெல்லாம்
உதயமாகும் மகேசனும் சாட்சியாவன் 

(அண்ணல் : ஆகா ஆகா )

6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?
மக்களே தீர்ப்பர் நீதிக்குக் வேலியாய்
அவரே அமைப்பர் அகங்காரம் கொண்டால்
ஆணவம் ஒழிப்பேன் அதிலெது வேண்டுமோ
அவரவர் விருப்பம் அனைவர்க்கும்
(அண்ணல் : எலே நீ என்ன தான் சொல்ல வர்ற எதோ சொல்ற புரிஞ்சா சரி )

7. விஞ்ஞானிகளுக்கு என்று ஏதும் இருக்கின்றதா?
இருக்கு இருக்கு 
அங்கொன்றும் இங்கொன்றும் வேண்டாம்
ஆதி பரமசிவன் போலே நெற்றிக்கண்
திறக்க வழிசெய்வேன் தலைக்கணம் அல்ல
என்தேவா புத்திக்குள் புதைந்ததை உருக்கொணரவே
கருவாக்கம் காரியம் உனக்கறியும் 

(அண்ணல் : அடேய் அடேய் என்னடா சொல்ற )

8. இதை - உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?
சமம் என்பதை புதைத்துவிட்டு மனதில்
இவன் உண்டதும் கண்டது இனியவன் 
உண்பதும் அவ்வழி கொண்டதென ஆகும்
சாசனம் தன்னை தான் ஆளும் வழியெங்கும்

(அண்ணல் : இவன் இங்க இருக்க வேண்டியவனே இல்லை )
9. மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக?
பதுமையை போலிங்கு யாருமில்லை
பதுங்குவதும் பாய்வதும் தேவையில்லை
பலவகையானவர் பக்குவமாகி இனமெனும்
சாதியை களைந்துவிட்டேன்

(அண்ணல் : நல்லாத் தான்யே பேசுர நடைமுறைக்கு ஆகுமா)

10. எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டும்? -  என இறைவன் கேட்டால்..?
அதிகாலை மலர்களாய் பிறந்து 
மனதினை கவர்ந்து மாலையாய் 
மகேசன் மனதிலமர்ந்து மாலையில்
இறப்பென்ப தறியாது துறக்கனும் உயிர்

(அண்ணல் : ஏதோ நான் கேட்ட கேள்விக்கு எனக்கே புரியாம பதிலை சொல்லிட்ட இவிங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் )

அனைவருக்கும் திரும்ப ஒரு முறை வணக்கம் வச்சுட்டேன் ஏதோ மனசுல பட்டதை கொட்டிட்டேன் எல்லாம் உங்கள் வசமே உலகு வேலைபளு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது ஏதேனும் தவறுகள் இருப்பின் அடியேனை மன்னிக்கவும் என்றும் உங்கள் அபிமான


 மோ.தினேஷ்குமார்

புதன், 19 நவம்பர், 2014

மணிகண்டன் மாலை ....!

வானதிர வாரான் வனப்புலி வாகனம்மேல்
                    தானதிரு தாயுமான வன்புதல்வன் பூலோக
நாதனவன் தானறிந்த நாடகமாய் காணவே
                    பாதபலன் தீர்ப்பவனே பாகமென வேர்பின்னி
தேகநலன் காப்பவனே தேடநில வானவனே
                     தாகமெழில் கூட்டிட தன்னைக் கலவுவான்
ஏக்கத்தை சொல்லில் சிதறுவான் போக்கிலே
                     நோக்குக எங்கும் உலவுவான் காத்திருக்க

கார்த்திகை கோலமே காணவழி தோறுமே
                      நேர்த்தியை ஓதுமே நேயர்வழி தேறுமே
சார்த்திய போதுமே சாந்தமுனை ஆளுமே
                     வார்த்தையுள் காணவே கோர்த்த வடிவமே
பார்பெரும் கோடியை கொண்ட குடியாகி
                     யார்தருவா ரென்றெண்ண மாயை உருவமே
கார்தருதே நீர்பொழிவை நான்ஒ டித்திருமே 
                    தேர்கொணர் வானேயுன் மையச் சொரூபம்

காட்டுவழி பாதையிலே கால்கடத்தி வர்றோமே
                    காட்டும் வழிவாழ்வி லேகாணும் காலத்தே
கோட்டை யினைநாடி என்னைதேக்க ஆதாரக்
                    கூட்டை விடமாயம் உள்ளதெரு சேதமாய்
நாட்டில் நடவுதே நான்கெட்ட கேடுமங்கு
                    காட்டில் உலவுவ வீனங்கு வாஎங்கும்
சட்டம் பெரும்பாகம் சூழ்ச்சியிலே மாயுது
                   பட்டம் உருள்வதை கண்டேனும் தீர்க்கவா





                        

செவ்வாய், 18 நவம்பர், 2014

மிஞ்சி உடன்வருவார் இன்னும் உலகிலே...!

சிக்கி தவித்தேனே சுக்கும் திணித்தேனே
சொக்கி கவிழ்ந்தேனே திக்கும் மறந்தேனே
வக்கில் இழந்தேனே மக்கும் உடல்தானே
சக்கை பிரிந்தென்ன சுள்ளியாய் மாற்றி

அஞ்சிட வேண்டாம் அரளியை அள்ளியேன்
கொஞ்சிட வேண்டும் கழனி(யை)யே கற்பகத்தேர்
கஞ்சி கடந்தருவார் காலத்தை கோளத்தில்
மிஞ்சி உடன்வருவார் இன்னும் உலகிலே

அல்லியே ஆற்றும் அகமெல்லாம் கடந்ததை
சொல்லியே சாற்று சிலையணிய மாலையை
கல்லில் கடைந்தவன் காதல் கலந்துலாவ
நல்லினமாய் தேற்றிடும் நாதம் அறிவாய்

எள்ளிலே எண்ணம் எழுத்தெழ தன்னையும்
அள்ளியே கண்ணம் கழுத்திணை உள்ளதை
கொள்ளுவாய்  மெல்ல கடவுவான் வண்ணமே
அள்ளுவாய் எண்ணம் புயலென கல்லும்

அற்றதும் ஆடியென் அர்த்தப்படி ஆகுக
உற்றதும் ஊரும் உரியதென ஆகுக
கற்றததன் நாளும் கடத்துவன் ஆகுக
பெற்றதன் பாக்யம் நடந்துவன் தாங்குக....

சனி, 15 நவம்பர், 2014

மயக்குகிறாய் என்னை ....!


மயக்குகிறாய் என்னை மழைக்குள் நயமாய்
இயக்குகிறாய் ஏர்பூட்டி தன்னை உழுதாளும்
எண்ணம் விதையாகி வண்ணம் உருவாகும்
கண்ணன் உதித்தான் காண்

கடலை கடந்தோட காணும் அலைபோல்
விடலை படர்ந்தாட சூழ்ந்த மனம்போல்
இளகும் இளம்பாகி னிக்கும் இனம்போல்
விளகும் இருளே சுயம் 

மிளிரும் குணமே மனதுன் துணையே
துளிரும் இளமே இனதுன் கணையே
கடவும் உளிலே கருத்தும் இணையேன்
நடவும் தெளிவாய் கட

என்றும் உனதான கண்ணன் குழலூத
கன்றும் உறவாட கண்ணம் இழைத்து
பிறந்த புதுபாலன் அண்ணல் உயர்வாய்
திறந்த மனதோடு எண்




வெள்ளி, 7 நவம்பர், 2014

கணைதனில் உள்ளக்கரு அள்ளும்...!


அர்த்தமாய் உருமாறி உமையாள்தன் இடமேறி
        தக்கநிலை கொடுத்தனவோ சொக்கன் சொக்கியே
சுயமிழந்தான் உற்றதொழில் தனை மறந்தே
        நித்தமெழில் செழித்தெழவே தடை தகர்த்ததரி
பித்தனாகி சித்தனாகி சுத்தமெனும் சுடர்கொணர
        அந்தமாகி அணுபந்த மாகிசந்த மியற்றுமால்
திருவென்ற உருவொன்றாய் அருகிட அருளும்
        அவணியே அவனுரு கொள்வானுள் குடியாம்

சிங்கமொடு காட்டிலே தங்குமறை கூடாய்
        திங்குமரு புல்லினம் தாங்குமருள் மேனியே
நிற்கதுணை வேண்டியே உடுத்தும் உடையாய்
        யாருனை தீண்டுவாரே தூணாகிடும் அரண்
அண்டுவா ரில்லாத தொண்டு தானில்லை
        விண்டதாகம் மொண்டு தானருக தூண்டும்
நிலைகொள்ள நிம்மதி தனைக் கொள்ளும்
        விரதவியா பாரமாய் திரித்தது வெல்லும்

தரித்ததை சொல்லும் தகனமே அல்லல்
        பகலுமே கொள்ளும் பசித்த மயக்கம்
விரித்ததை வெல்ல வினைதான் செல்ல
        கணைதனி லுள்ள கருத்தினை அள்ளும்
கழற்றினி வேடம் களைத்த உருபோதும்
        களம்நிறை கொண்ட கயவனாய் உள்ளில்
கலைச்செல்ல காலம் நடத்தும் விளையாகு
        அரங்கேற்றம் காண விரைவான் அங்கு

அர்த்தநாரி யாமவன் சொல்லும் அர்த்தங்கேள்
        உனையுற்று நோக்கவே எங்கும் காணுவாய்
தினமரிந்த மந்திரம் திரியங்கும் எந்திரம்
        நகலிலா திருநகையு மாயுரு காணுவாய்
பகையிலே திகழுமகம் கொண்டதற மனதே
        கொணர்வாய் பாக்யநாத பக்கம் காணுவாய்
தாங்கிய தேகமினி வேண்டாவிடு வாக்யம் 
        தங்குமேட்டி லேயிரும் திவ்யம் காணுவாய்

புதன், 5 நவம்பர், 2014

வேண்டுவன தந்துவிட்டால் ...!

யதார்தமாய் கரையொதுங்கி பழக வேண்டும்
          நிவர்த்தியாய் நீர்த்தளும்ப ரகசியம் வேண்டும்
சுதாரித்து சுகமதுவை தேக்கவே வேண்டும்
          பதார்த்தமே பலவகையாம் பசிக்கருசி வேண்டும்
நிதானித்து பெறும்பலவும் சேர்ப்பினில் வேண்டும் 
          பணதாகம் பிணக்கதுவும் தீர்க்கவே வேண்டும்
பகல்கனவு பயிலுமிரவும் பக்கமென வேண்டும்
          பசித்திருக்க பாக்யமாய் பிரசாதம் வேண்டும்

பணிவோடு உன்பாதம் சரணடைய வேண்டும் 
          கனிவோடு காக்கையும் இனமாக வேண்டும்
கற்றாரை போற்றியெங்கும் பார்பழக வேண்டும்
          உற்றாராய் உணர்வறிந்து தானெரிய வேண்டும்
நிகரேதும் சொல்லாது தனியனாக வேண்டும் 
          கடலாடும் காட்சிநிறை ஆட்சியே வேண்டும்
உடன்பட்டே உருமரணம் உண்டாக வேண்டும் 
          கடன்பட்ட கார்யமாய் கரையொதுங்க வேண்டும் 

படுத்துறங்க பலகாலம் நித்திரை வேண்டும்
          உடுத்திறங்க உடைதாங்கி காப்புகள் வேண்டும்
நடுவரங்கம் சலித்துறங்கா காட்சியே வேண்டும்
          தடுவனவும் நடுவனவும் தழைத்தெழ வேண்டும்
கரம்தொட்டு சிரம்தொட்டு மழைத்தூற வேண்டும்
          கருநாக குடைக்குள்ளேன் காரணம் வேண்டும்
பயிராகி வயிறாரும் உணவாகிட வேண்டும்
          இல்லார்க்கும் எடுத்திரைக்கும் உரிமை வேண்டும்

வேண்டுவன தந்துவிட்டால் உனைதான் யாரும் 
          தீண்டாத சிற்பமென சொற்ப்பமாய் மொய்ப்பர்
வேண்டாத சொல்லில்லை உன்னை நோக்கிவர
          உன்மெய்யும் சேர்ந்ததுவே கொண்டாடும் உயர்
திண்டாட்டம் வேண்டாவே செல்லாதிரு கணக்காய்
          மெல்லோட்டம் போட்டிடு வல்லிய திருவாய்
தென்றலென தொட்டுப்போக உத்தரவிடு வரிய
          வந்தவனாய் சொல்லிவிடு வயக்காடு பொழிக்க
          


செவ்வாய், 4 நவம்பர், 2014

நிச்சயவுயிர் கூடு ...!


நேற்று பிறந்தது போலே நடவதை
காற்று கவர்ந்தது நேரே கனமுடன்
ஆற்றை கடப்பது பாழே நிவர்த்தியின்
தோற்றம் எதுவென தேடு

சோற்றுப் பசியாம் பானைக்கு காற்றே
இடம்புகுந்து வட்டம் போடுது சேற்று
சகதியில் கதிர் மடிந்து எனையுற்று
நோக்குதே கடிந்து பசிக்கு ஒடிந்து

கொல்லிடம் கோருது புல்லிடம் பாரடி
தேவி வறண்டோட வாதம் திறப்புக்கு
கரை புரண்டோட தேக்கம் திறந்திருக்கு
நீதி கொலையாளி ஆனேனாம் நான்

பச்சை வயக்காடு நிச்சயவுயிர் கூடாய்
மனதில் குடியேற மக்கள் திசைமாறும்
மாற்று வழிதேடும் வாட்டும் பசிபோக்க
சேற்றி லுழுவார்கு காணிக்கை நீயாயிரு

பொருத்து புகழ்பாடு பச்சிளம் கூட்டில்
புகுத்து பழம்பாட்டை பூக்கும் புதுயுகமே
காக்கும் வழியனைத்தும் உன் சாமர்த்யம்
உத்தமர் தன்வாழ்வின் ஊற்றே உணர்...


ஞாயிறு, 2 நவம்பர், 2014

கவலை தீராயோ கடலே...!


அதிகாரம் ஆண்ட கடல்கொண்ட தேசம்
சதிகாரன் தூண்ட விழுங்கிய மீனவர்
தேகம் புரியா பிழையாய் விளையுதே
சோகம் தினம்தினம் திக்குமாறி

கண்டதைக் கொள்ள கயவனாய் அல்ல
அடுப்பெரிய வீட்டில் துடுப்பெடுத்த ஓட்டம்
தள்ளாட்டம் போடும் அலைகளோடு கூடி
அடைகாக்க எண்ணா அநியாயம் அங்கும்

தடைச் சொல்லுவா ரேனோ கடலள்ளும்
கொள்ளையர் தானோ கடமைசிகை கோதி
கதிகாரணம் சொல்லடா அண்டைதேச மென்னடா
அங்கும் வழிக்குபங்கு பிண்டமாய் செல்லுதா

ஆண்டவன் போலின்று ஆயுதம் தாங்கவே
பொல்லாது போகும் பொழிக்கும் மழையே
சிவந்தது காணும் துணுக்குமினி வேண்டா
பொருக்குமுன் பேராபத்தை பேசித்தீர்

போர்காணா வேங்கை உறங்கமாய் உள்ளே
அவரவர்க்கும் நேர்காண வேண்டாம் விதியே
சதியின்கதி மாற்றிக்கொள் கோவணம் மிஞ்சும்
அகிலமே அஞ்சும் அரசாண்ட வம்சம் 


சனி, 1 நவம்பர், 2014

கயவனாம் உள்ளம்...!


கயவனாம் உள்ளம் நினைவது யாவும்
நடவது போலே திரித்து நிகழ்வாய்
நிறைத்து நிலை கொள்ள அழகுதான்
ஆகினும் மெல்ல கனவுகள் காக்கும்

சன்னதி பொய்யென சங்கதி சொல்லும்
சரங்கோர்த்து சம்பவம் கொள்ள சகலம்
உடையா ருணரும் சுடரை புவனமாய்
சித்தரிக்கும் சத்திரமாய் மனம்

இருக்கு மிடம்விட்டு இல்லாத இடம்தேடி
ஈர்க்கும் அவனை செயலிடம் மெய்க்கும் 
மகிமை பொருந்திய தேடலே தாகம்
தரையிறங்க தேகம் நிலையதுவோ 

என்னில் எதுவோ இயற்றும் இனிமையென்
உள்ளில் மெதுவாய் கழற்றும் தனிமையென்
கண்ணில் உருவாய் உயிர்க்கும் கருமேகம்
எண்ணி லடங்கா உதிர்க்கும் துளியே

சாரல் நனைத்த சகிதம் கனவோடு
காண்ப கடந்தாடும் காயம் சமமாகும்
வேகம் பிடிபடா தேகம் நதியாடும்
சொந்தவனம் தேடும் மனம் 



நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி