ஞாயிறு, 26 டிசம்பர், 2010

"பச்சைக்கிளி உன் காவலம்மா"


பச்சைக்கிளி உன் காவலம்மா
பச்சைப் பிள்ளையாய் நானுமம்மா
எட்டி உதைப்பாய் நெஞ்சினிலே
அடைந்தேன் ஆனந்தம் நானுமம்மா........ (பச்சைக்கிளி)

பந்தல் கால் வீட்டு வாசலிலே
பள்ளிக்கூடம் நான் போகையிலே
பட்டுப்புடவை தேவதையாய்
அக்காள் வந்தால் வாசலிலே............. (பச்சைக்கிளி)

ஏட்டுப் படிக்கும் வேலையிலே
எட்டி நகர்ந்தால் நாணத்திலே
கொட்டுமுழக்கம் காதினிலே
தனியாய் சிரித்தாள் தனிமையிலே........ (பச்சைக்கிளி)

மல்லிகைத் தோட்டம் பாரடியோ
என் மாமன் இவன்தான் கூறடியோ
புத்தியுரைத்ததே எமக்குள்ளும்
உன் புன்னகை பேசும் புதிரினிலே......... (பச்சைக்கிளி)

சக்தி இழந்தவன் நானன்று
உன் சங்கதி காக்கும் தூணம்மா
பட்டப் படிப்பு முடித்துவிட்டேன்
பட்டுத்தான் வேலை பிடித்துவிட்டேன்...... (பச்சைக்கிளி)

இரும்பான மனமெல்லாம் இளகிடவே
கரும்பாக நானிருக்க கலக்கமென்ன
சொட்டும் வியர்வைத் துளிகளெல்லாம்
உனக்காய் உதிர்ப்பேன் பிறந்தவளே........ (பச்சைக்கிளி)

உன்னைச் சுமக்கும் உசுரினிலே
கண்ணில் சுமப்பேன் உசுரையும் நான்
மாமா என்றழைப்பாயோ - உன்
தாய் மாமன்தானடி மரிகொழுந்தே......... (பச்சைக்கிளி)

பச்சைக்கிளி உன் காவலம்மா
பச்சைப் பிள்ளையாய் நானுமம்மா
எட்டி உதைப்பாய் நெஞ்சினிலே
அடைந்தேன் ஆனந்தம் நானுமம்மா

21 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

மல்லிகைத் தோட்டம் பாரடியோ
என் மாமன் இவன்தான் கூறடியோ//இது என்ன நம்ம கதை போல... :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள் தினேஷ், இந்தக்கவிதை அடுத்தக்கட்டதிற்கு உம்மை அழைத்துச் செல்கிறது. பாடலில் நல்ல தாள லயம் இருக்கிறது!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போட்டோவும் அருமை!

ArunprashA சொன்னது…

இரும்பான மனமெல்லாம் இளகிடவே
கரும்பாக நானிருக்க கலக்கமென்ன
சொட்டும் வியர்வைத் துளிகளெல்லாம்
உனக்காய் உதிர்ப்பேன் பிறந்தவளே

Nice words.

வைகை சொன்னது…

வாழ்த்துக்கள் பங்கு! வித்தியாசமான களம்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை + போட்டோ அருமை!

Unknown சொன்னது…

கலக்கல்

அன்புடன் நான் சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க... பாராட்டுக்கள்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//உன்னைச் சுமக்கும் உசுரினிலே
கண்ணில் சுமப்பேன் உசுரையும் நான்
மாமா என்றழைப்பாயோ - உன்
தாய் மாமன்தானடி மரிகொழுந்தே..//

அழகான வரிகள்...

Unknown சொன்னது…

பிரமாதம் தம்பி ...

ஹேமா சொன்னது…

தினேஸ்...அழகான தாலாட்டு !

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மென்மையான மேன்மையான உங்கள் மனது தொன்மையான தமிழில்.

அருமை தினேஷ்.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

பதிவு நல்ல இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துகள்

Philosophy Prabhakaran சொன்னது…

இணைத்திருக்கும் புகைப்படம் ரொம்பவும் பொருத்தமாக இருக்கிறது...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சினிமாவுக்கு பாட்டு எழுத போகலாம் போல இருக்கே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டி வி ,சினிமா என அடுத்த கட்டத்துக்கு போக வாழ்த்துக்கள்

Meena சொன்னது…

ரொம்ப நல்ல மாமா

செல்வா சொன்னது…

தாளலயம் நல்லா இருக்கு அண்ணா ..

DREAMER சொன்னது…

பாடலும், வார்த்தைப்பிரயோகமும், தாளக்கட்டும் அருமை..! நான் கூறியதை ஏற்று எழுதியதற்கு மிக்க நன்றி..! உங்களுக்குள் ஒரு பாடலாசிரிய(ரும்) இருக்கிறார்.

வாழ்த்துக்கள் நண்பரே..!

-
DREAMER

Thoduvanam சொன்னது…

தாலாட்டுகின்ற வரிகள்.தாய் மாமன் பெருமை.ரொம்ப நல்லாருக்குங்க..

Chitra சொன்னது…

அபாரம்....!!! ரசித்து வாசித்தேன். படமும், வெகு பொருத்தம்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி