சனி, 23 ஜூலை, 2011

சல்லடைக் களம்....!


சத்திரமே சன்னதி சம்மதமே சங்கதி
சுட்டிருக்கும் சுடலையில் பட்டிருக்கும்
வயலையின் வக்ர சப்த சுத்தம்
சுடர்விட படரா முல்லை

என்னுருவே கண்ணில் மெய்படவே
கந்தருள் காரியம் தேடி என்தனில்
மாறுடம் வேண்டி தானுடல் மாயை
மாலைச் சூடும் மனமே

புத்தன் புதிதென்பார் சப்தம்
சதி என்பார் மொத்தம் முதல்
என்பார் சல்லடை களமென்பார்
சரீர சன்னதி சுகமாமே ......

ஞாயிறு, 17 ஜூலை, 2011

கரும்பாக இனிக்குதையா ....தெற்கே கெடிலம் நதி ஆடிவர
வடக்கே தென்பெண்ணை பாடிவர
கரும்பாக இனிக்குதையா எந்தன்
தாய் மண்ணின் நினைவலைகள்

ஊரை சுற்றி சுற்றி வீற்றிருக்கார்
அம்மை அப்பன் காட்சியாக - சாட்சி
கைலாசநாதரும் பூலோகநாதரும்
திருகண்டேஸ்வரருமாக மத்தியிலே

அவரைப்பற்றிச் சொல்லனும்னா
அறிந்தவை சில அறியாத பொக்கிஷங்கள்
பல உண்டு அவர் திருநாமம்
உச்சரிக்க பலனுண்டு
திருமாணிக்குழி ஆலயம்

கரும்புக்கு பேர்ச்சொல்லும் சக்கரையாய்
நாவினிக்கும் நெல்லிக்குப்பம் தானுங்க
கிழக்கால கடலூரு மேற்கால பண்ரூட்டி
பலாப்பழம் தானுங்க

தாமஸ் பாரிக் கட்டிவச்சான்
கிழக்கிந்திய சாராய வடிப்பகம்
பல்லாயிரம் உசுருக்கு வாழ்வளிக்கு
நானும் பிழைத்தவன் தான்

சாதிச்சண்ட பலவுண்டு சங்கதியெல்லாம்
நடந்திருக்கு சப்தமில்லா ஊருமது
இப்போ சண்டையில்லாம அடங்கிருக்கு
ஊரு சனம் திருந்திருக்கு

பால்யத்து இனிமைகள் கண் முன்னே
ஆறேழு நண்பர்கள் கூடி ஆங்காங்கே
அலைந்ததென்ன வயக்காட்டில் ஓடியாடி
விளையாண்ட காலமது

விடியும்வரை கூத்துபார்த்து பாட்டி
மடியில் உறங்கியக் காலம் கேளா
கிடைத்த சுகம் இனி கிட்டுமோ
இங்கே அயல் நாட்டினிலே

கலியுகம் : அண்ணன் மனசு சே.குமார் அவர்களின் அழைப்பை ஏற்று தொடர் பதிவாக எங்கள் ஊரின் வாசம் ..... அடுத்ததாக நம்ம கவுண்டர் பன்னிக்குட்டி ராமசாமி அவர்களை அழைக்கிறேன் இப்பதிவை தொடர ....

சனி, 16 ஜூலை, 2011

அவன் பிடித் தவழ்ந்திரு...........


எண்ணங்களில்லா வண்ணங்கள் கொட்டும்
கண்னங்கள் சிவக்க கரைந்தோடும் எனது
நின்னிலா இம்மண்ணிலா வன்னருக்க
பிழைத்திரு பகைத்திரு

பால்யத்து விதையுண்டு கனத்திரு
காலனை மிதியமர்த்தி மதியமர்ந்து
வீருகொல்லடா மாசில்லா மருக்கொழுந்தே
மாற்றமெனும் வீ(வி)தி சமை

அதோ வர்றான் இங்கே வர்றான்
அஞ்சாத அரக்கன் கண்ணயரும் நாழிகைதான்
கண்ணே கரையமர்த்தேன் காராணம்
கேளாய் மறையமர்த்தி

மாற்றுரு வேந்தே கரம் நழுவ
காத்திரா கடல் நடுவே வீற்றிரு
ஹரி என்பான் அவனிக்காப்பான்
அவன் பிடித் தவழ்ந்திரு

அலைகடலாய் வாரியுன்னை
வழியமர்த்தி பிழைதிருத்தும்
பிதாவானவன் எண்ணமெலாம்
உன் நினைவே மறை

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி