வெள்ளி, 14 டிசம்பர், 2012

பொருத்தமிலா திருத்தம்....?


அகில மளந்து அடைக்களம் சுட்டி
விளங்கிட தானே வியூகம் கொடுத்தான்
மலர்ந்திட மாலை தொடுக்கும் தனியே
மணந்திடும் தோகை மயில்

அகில மடங்கி துகளுமாகித் தீரா
சகலமு மாயையின் கூரே நிழலும்
பகுதியைக் கண்டவன் கொண்டதிது கூறும்
மிகுதியில் வீழா காண் ........

மலரொன்று மனம்கொண்டு தினம் உன்னை
தரிசிக்க விடைசொல்ல விளைவோடு விதியே
பயணிக்க சரமொன்றில் வரமேந்தி நகையா
தணியும் கனிவாய் உனது 

மனமறியா மணக்கும் மாரணம் துணையேறி
துகிலுடுத்த தகிக்கும் மதியனோ ஆழ்ந்து
அமைதியாய் முடங்க கதியேற்ற மடங்கிய
சூழலின் விதிப்படி வழி

குருதி சிரிக்குதடி இந்த கூறுக்கெட்ட
மாக்களை நினைத்து சிதறும் கோரத்திலும்
செந்நிறமே எங்கிலும் படர்நிறம் பார்த்து
சாதியறிந்து கூறேன் நா...........

கோண வடிவிலான் கோர முகத்தான் 
கோடி கொடுத்தே கோவில் அமைத்தான்
கோளத்தில் நாளும் கணித்தான் கோர்வையாய்
கொல்லத் துணித்தான் மாயை.....

வியாழன், 22 நவம்பர், 2012

விடியல் விளையேன் ......!



விழியே வழியே விடியல் விளையேன் 
விதையாய் மடியேன் விழுதாய் மறந்தே 
மதியே மலர்வாய் விதியணிச் சூதனமே
சொற்படியாய் மாறும் உனது 

சுரமாய் அருள்வாய் வரமே யாவர்க்கும் 
மனமே மகிழு சுடர்விடும் மருந்தாய் 
இயலு மினிதே இணைத்திடு உயர்வாய் 
அழைத்திடும் ஆணவ மடங்கும் 

எதிரும் புரியா ததிரும் நிலையே
நிகழால் வகுத்திட நிழலும் நிறையாய்
சூடும் பிறைமதி மறையா திருக்கும்
கவனித்தாளு மனமே உலகு


சகலமும் சமமானதோ சகதியில் புழுவானதும்

மனமது தூவளிலே தினமேந்தும் தாகத்திலோ
அலைமகள் தரைத்தட்ட தொடுவானம் மழைக்கொட்ட
மனமெல்லம் சினம்நீங்கி சுவையானதே.......

புதன், 3 அக்டோபர், 2012

தனியே தகிக்கும் தணல் ......!

அன்றள்ளும் மலர்போல நின்றெங்கும் வாழி
இளவட்ட முகம்கொண்ட இன்னோர்க்கு தாயே
நிறங்கண்டு நிலைப்பாடா நியதியை கூறும்
நிகரென்றும் பாராமல் கொடும்.......!

கடனூர் கொடும்பாவை தடகளனூர் தவசி
கண்டனூர் கொண்ட திங்கள நாதன்
செல்லுமிடம் மெல்லும் யாவும் நிலைக்கடல்
தாண்டியத் தெப்பத்துள் அடகு.........!

வீற்றுமிட மளித்தான் யாற்றும் பணிகள் 
யாவுமென் கதியே நாவுமென் சதியே 
கனவிடும் காரியன் நிகழ்விட தாரிகன் 
புகலிட மேவியன் தாழ்......!

முடிவுடை வடிவுடையா விடிவுடையே
தடைவிதித் தஞ்சம்புகா எஞ்சுவ தஞ்சும் 
நாளையரின் வாகைப்பாடும் தாகமே 
தனியே தகிக்கும் தணல் ......!

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

கற்பதம் ........!


நிலவிற் நிழலாட நானின்றி தள்ளாட
நீரில் நிறமற்று யாதும் நினைப்பாட 
நீதானோ கள்ளிக் கனவானே எந்தன்
நினைவா ளுமினி நிசம் 

விடமா றிடையே றியதா இளகும்
மனமே சகலமும் நாளேந்தும் சூதனம்
மாறிய கார்ய விருட்ச மகிழும்
சடமே நிலையா நீ

நெஞ்சம் கனத்தெழ வஞ்சம் நகைத்து
வாகை சூடிட வல்லவன் தேகத்தில்
நஞ்சுருக்கும் வேடதாரி தேரினில் பாவை
மயிலும் படியளந் தானே

நீர்பதம் சேருமிட நாற்றமிகை யாற்றும்
விருபதம் தாருமிட தோற்றமிகை யாற்றும்
துருபதம் வீழுமிட மாற்றமிகை யாற்றும்
கற்பதம் யாற்றும் உலகு

புதன், 11 ஜூலை, 2012

விடிவா...? முடிவா...?


விடிக இருளே விடிவா முடிவா 
இளகிடச் சொல்லிடு வல்லவன் தேரினில்
சார்வ தாள்வதும் சாரத்தி லாழ்வதும் 
கூடில்லா சூழும் சுமை..

இனிதும் இயல்பாய் கனிந்து விடிய
இனமெனும் சூழலி னாட்சி கரையறுக்க
ஈரத் துளிகள் இமையோடு வாட
உணர்வ தறியா கனல்....


கபடநாடி காலத்தே காணு மியந்திரச்
சங்கத் திலாடு மகமே யுணர்வாய்
கனவிடிய காலைக் கதிரு மெதிரே
தருண முதிர்க்கும் மலர்....

முற்று வதறிந்தே கற்றெதிர் தீண்டும்
சுடுங்காற் றினிலாட விட்டாய் இயலா
இனமானேன் தள்ளாடி தப்பிப் பிழைக்க
தானே மருந்தா னேன் ..


வெள்ளி, 15 ஜூன், 2012

ஆள்வதறியேன்.........?

                              
நாறுமது சாரமெண்ணிய வாரமுதிர்த் தாகம்
நலமதிர நஞ்சிலே காலமங்கிய தேகம்
மிஞ்சியத் தாளமிசைக்க நாளுவதங்கே
கெடுவங்காட் டினிலாடிய சடமே

படியளந்தான் பரியமர்ந்தே பழியாவும் பாடித்
தனிலமர்த்த பயமேந்து மனதறியா தூவலெங்கும்
அகங்காட்டும் அழகாட்டு சித்தமென சுத்தமென்
சன்னதியி லாடும் மயிலே

சல்லடைத் தப்பியே தரலோகம் தஞ்சம்புக
தள்ளாடி தயைநாடி பொல்லாத போக்கனுக்குள்
சென்றாடும் சங்கமலர் வந்தனம் சிந்திய
கலஞ்சிய மாள்வத றியேன்................!

வியாழன், 3 மே, 2012

தவழுதென் மனம்....!




தவழுதென் மனம் தாய்மையேந்தி 
தத்தித் தவழ்ந்து மழலை பேசி 
மழைச்சாரல் காற்றுடன் நீர்த்து 
பொங்குதென் உள்ளம் 

சொல்லிடர் சுருக்கங்கள் நீங்கி
மெல்லிய தாகம் என்னுள் சூழ
அகத்தே நீ உதைக்க புறத்தேக்
காணாத பேரின்ப வரம் 

கனவாகி உள்ளில் கருவாகி உன்னில்
உருக்கொண்டேன் தாயே யான்
உலகறிய சுகமான சுமையாய்
நாற்பது வார தவத்தில்

எனை மீட்டெடுத்த தெய்வமே 
ஆரத்தழுவி எம்மை அள்ளிக்கொள் 
அகம் காத்து புறம் வெல்லப் 
புயலாய் மாற்று என்னை

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சொல்லது தூவும் பிழை ...!





காற்றிலாடும் சுடரே சுயம்பவன் 
நேர்த்தியாய் நின்னலைப் படைத்துவக்கிய 
தவத்திற னாற்றுவன தோற்ற தற்க்கினை
யாற்றும் யாவுமென் சிதையே

உயிர் மெய்க் கலவையாய் ஆயுதமேந்தி
வல்லிய திடைக்காக்க மெல்லிய தாகம்
சிந்திய சிதறலெங்கும் விருட்சமாய்
நிழற் தர தொடர்ந்தே 

இருகியப் பாறை கற்கண்டாய் உருகி
நற்க்கொண்டாய் நாவியல் சாற்றும் 
முதற்கண்டோர் போற்றி நின்னை 
சரணடைய வீழ்த்தும் தடாகம்

நீரன்றி வேர்த்து தூர்த்து மாயும் 
சல்லடை சகிதம் அம்பு துளைக்க
நில்லாது பாயும் வல்லது மேனியிற்
சொல்லது தூவும் பிழை....! 





சனி, 21 ஏப்ரல், 2012

என்னவள் கரம் பிடித்த நாளின்று

விரைந்து தான் செல்கின்றது பரந்து
விரிந்த உலகில் நிமிடங்களை வெறுமனே
விட்டுவிட்டால் கிட்டுவதில்லை திரும்ப
ஓராண்டுகள் முடிவின் துவக்கம் 

வசந்தம் வீச வாலிபங்கள் வயதணியும் 
வாடாமலரன்றி நீடும் நிகழ்மாற்றம்
சாடுவன அனைத்தும் நம்மில் சாரமாய்
ஏற்றம் காணுவது அறிது

பாடும் பாவையன்றா என்னை அவணியில் 
மணமாலையுடன் தேடி நின்றாய் சூடும் 
நேரமறிந்து ஆட்டுவித்தான் காட்டிவைக்க
கரம் பிடித்த நாளின்று 

காரணிகள் நமையாண்டும் மாறத
மனம் கொண்டோம் மண்ணவளும்
மகிழக் கண்டேன் என் மன்னவளே
உள்ளில் இல்லம் கொண்டவளே......

எனையாளும் பூவிழியே பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...

திங்கள், 9 ஏப்ரல், 2012

உதிரும் சருகெனும் மாயவலை...!



என்னை யெவ்விடத்து சுற்றவிட்டு
            எங்கங்கே தகிக்கவிட்டு தேடுகிறாய்
ஏதேதோ பிதற்றங்க சந்தருகும்
           ஏலனத்தால் மாண்ட தெருவிதி
சற்றுமெதிர் நோக்கா சந்தித்த
            சாரம் சிந்திக்க நேரமற்று மேலேற
சிக்கிய பிடிதனிற் பயணம்
            சிகைக்கோதும் விரலதுமறியா

சிதையுமது சதையுமென சாரல்
             சாதகமாறிய சூதன விரிப்பில்
பாதகனாண்டவை பகுதியும்
             மிகையல்லா தகுதியும் தானே
தரைப் புரண்டோட தொலைவில்
             உதிரும் சருகெனும் மாயவலை
வீசியதாரோ வினைத்தவன்
             சூடுமிழை தொடுத்தவன் யாரோ


புதன், 4 ஏப்ரல், 2012

துளியும் துகளும்


கண்ணே கருணைகள் புதைபட்டு கலங்கிட
காரியம் முடிசூட முன்னவனும் பின்னவனும்
கிழக்கும் மேற்க்குமாக எல்லைகள் அற்று
கீரிய சடலமாய் திணறுகிறேன்


துளியும் துகளும் சுடரால் அகல
வலியும் வனப்பும் பாகம் பகைபட
சுவையும் சுனைநீர் அவையறியா
கண்டோர் காணும் உலகு ...



குணக்குட்டி யெதையொட்டி வனவட்டக்
குரலோனே நிலைத்தொட்டு நிகரென்ன
கூவி குறையடுக்கி நிறைக் காணக்
கூடலில் ஆழும் நதியே.....

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஓவியமாய் தீட்டி வச்சாங்க......!

அத்தனையும் படிச்சான் 
அங்கெங்கும் அலைந்தான் 
ஆள்பதற்க்கு மட்டும் திரையில்
ஆட்டம் போட்டவரை பிடித்தான்

இடிச்சப்புளி உலக்கயிலே
இளஞ்சிவப்பா இளிக்குதையா
ஈசன் கட்டுவான் இல்லாமல்
ஈட்டெடுக்கலாம் நாளை

உசிரக் குடிக்கான் மறுக்கா 
உரக்கம் தெளியவே யில்லை
ஊதிக் கொக்கரிக்க நாதியுமில்ல
ஊலைநரிக் கூட்டம் போட

எட்டி பார்க்குது எங்ககிட்ட
எட்டனா தான் எஞ்சி நிக்குது
ஏட்டையும் மாத்திபுட்டான்
ஏணியையும் தட்டிவிட்டான் 

ஐந்தும் அவர்கட்கே என்றால்

ஒட்டு துணிக்கேது வழி விரல்
ஒட்டிய மையை துடைக்க
ஓட்டாண்டி ஆக்கிவிட்டாங்க
ஓவியமாய் தீட்டி வச்சாங்க
 
ஔ..........................................

திங்கள், 5 மார்ச், 2012

பூவணி மாலையும் புன்னிய தேடலும் ...!


பச்சைத் தாவனி கட்டுவா யென்று 
பட்டதும் சுடலையில் பாவம் தீராய்
பல்லதுப் படாமல் மெல்லுவாயெனி
பசித்துறங்க பழகு

பார்த்ததும் பகுந்து விட்டாய் வேர்த்தது
பானைக்குல் பதுக்கி வைத்தாய் நீர்த்தது
பாவையின் விழிகளன்றோ அறியாப் 
பாவியாய் பல்லுருவில்

புசித்தது புகட்டி விட்டாய் எங்கோ
புயாலாய் கிளம்பிவிட்டாய் அங்கோர்
புலியென பரனை சுரண்டக் கண்டே
புல்லாய் மாற்றம் என்ன

பூவணி மாலையும் புன்னிய தேடலும் 
பூர்ணச் சந்திரனாய் புன்னகை தவழ 
பூவுலகு பசித்தும் புசித்துறங்கா நீதி 
பூரணத்துவம் காணா விடியல் 

திங்கள், 27 பிப்ரவரி, 2012

நாளும் வாழ்வான்..................!

அற்றதும் தொடர்ந்துன்னில் ஆற்றா 
கடமைகள் புதையுண்ட நிலை காண
உற்றதன் துணைக் கொண்டு புதையல்
தேடப் பயணத்தை துவக்கு

புறம் காணா மறைத்து வைக்க
அகக்கோலின் அடியளந்து ஆழ்ந்துழ 
எட்டாப் படியும் கிட்டாக் கனியும்
அருகே அவணியில் காண்

சுடச் சுட சூடும் தணியும்
தனியாத் தாகம் தஞ்சம் புக
எஞ்சும் ஏகாந்த நிலையில் நீரூற்று
அணுகிப் பருகா இன்பம்

இவைதானோ இலைத் தழைக்கூடு 
இன்னோர் பிறவியெடுப்பினும் இயல்
சாடுவன நிவர்த்திசெய் இன்னலாயினும்
நல்லெண்ணம் கொண்டான் .....

நாளும் வாழ்வான்..................!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

நீ வருவாய் என...!


ஆழ்ந்த உறக்கம் இரவின் உச்சத்திலே
மெல்ல மெல்லிய கரம் பிடித்து 
என்னை அவளருகே அழைத்து செல்ல
உள்ளில் உணரா தவிப்பு 

மழலையாய் கூடே ஒன்றும் புரியாமல்
பற்றிய கரத்தின் பிடியில் பயணிக்க
சொல்லாமல் உணர்த்தி என்னை விட்டு 
செல்ல பிரமிப்பின் உச்சத்திலே

உனக்காக காத்திருக்கோம் வா வா
எங்கள் கண்ணே உயிரில் கலந்து
உள்ளில் உணர்வாய் என்னில் உணர்த்தி 
உருவளர்க்கும் செல்லமே ......

நீ வருவாய் என விழித்திருக்கும்
இரு விழிகளின் தாண்டவ தகிப்பு
நீளும் பாதைகளில் இனி மூவராய்
பயணத்தை துவக்க வாராய் ....

எங்கள் செல்வமே நீ வாராய்....!

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஏதுமில்லையெனில் ...!


நின்னை நினைத்துவிடின் என்னில்
நியாங்கள் முளைத்துவிடும் உள்ளில்
உனதுரு வளர்க்க மனக் கோட்டையில்
கருவரை யமைத்தேன்

மல்லிகை சரம் தொடுக்க வாசம்
உள்ளில் உணர்வதாரோ கல்லில்
காட்சி தந்து கலையாய் ஆட்சி
செய்ய ஆட்கொள்வாய்

சொல்லில் உதிர்ப்பதெல்லாம் உலகை
நொடிதனில் கடப்பதென்ன மெல்லிய
மனம் படைத்து குணத்துடன் கூட்டி
நிறை யளந்தாய் எங்கும்

சரீர குறிப்பறிந்து சார்ந்தவை
சகிதமென அருகினிலமைக்க அங்கு
தேர்ந்தவை அடைத்துவிட ஆறடி
நிலம் கொடுத்தாய் அதனிலும்..........

அவதியப்பா எங்கும் அமைதியின்
சூழலில்லை சூத்திரம் வகுத்தமைத்து
இன்னோர்க்கு சொத்து இருக்கையில்
ஏதுமில்லையென உணர்த்து

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கிறுக்கனின் கிறுக்கல்




சின்னஞ்சிறு விடியல் சில்லென்று குளியல்
மெல்ல நடக்கையில் துள்ளும் இளங்கதிர்
செல்லும் இடமெல்லாம் சொல்லும் 
வார்த்தை வெல்லப் பிறந்தேன்


புற்களைத் தொட்டுத்தவழும் அதிகாலைப்
பனித்துளி சொல்லும் சேதிக் கேளேன்
கண்மணி விடியல் நம்மை பிரிக்க
உன்னில் ஈரமாய் உறைவேன்


பாதம் பதியச் சிதறும் மண்துகள்
வின்னவன் உதிர்க்கும் மழைத்தூரலில்
மனம் மயங்கி பின்னிப் பினைந்து 
உள்ளில் ஈர்க்கும் உவமை


உள்ளவன் கண்டதும் கொண்டதும் 
மன்னவன் சூட மலர்மனமேந்தும்
இன்னலின் காரணி இனிமையாய் 
இதழருந்தும் மருந்தே 

செவ்வாய், 24 ஜனவரி, 2012

யார் உனைத்தாங்க...?


இடையிடையே மெல்லும் வார்த்தைகள்
தவறுதென் வழிகளிலே தடையுடைய 
தவமெதற்க்கு ஆயுத்தப்படுத்து அகமுள்ள
அறியதோர் உந்தன் கூர்வாளை 

தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்
திருந்த பயணிக்கையில் விருட்சங்கள் 
நிழல்தர மறுப்பதென்ன நினைத் தொடர
நிலைப்பதென் தனிமையே

தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு 

இன்னும் புதைக்கிறாய் ஏனோ வதைகிறாய்
ஆழ்வதும் தாழ்வதும் தானே உந்தன்
தனித்துவமென்றால் யார் உனைத்தாங்க 
பாரினில் வேந்தனாய் பயணப்படு ...!

புதன், 18 ஜனவரி, 2012

தேடி சூடிய மாலை ...


கோரத் தாண்டவ மேனியிர்த் தங்க
கொடுரமாய் நிந்தன் தாளமேன்
கோணத் திரிவாய் உடைவாள் தாழ்த்தி
கொல்லி தேடிய நிலையே

கோவணன் பாடியும் சாடிய மிகுதி
கொண்டான் காக்க வந்தோன் - மணந்தக்
கோடி உற்றது மற்று உடனது
கொல்லத் தேடிய நிலையே

கோலடிப்பட்டு நாளடித் தாண்டி
கொவ்வைப் படர்ந்து தலைத் தூக்க
கோபக் கனைகள் எனைத் தாக்க
கொன்றதும் சூடிய மாலை....

வெள்ளி, 13 ஜனவரி, 2012

பச்சை சேலை கட்டும் தாயே...!






அன்னமாய் வழிநடத்தி வண்ணமாய்
சிலை வடித்து எண்ணமாய் நிழலுடுத்தி
பச்சை சேலை கட்டும் தாயே
உயிரிருக்கும் உடல் செழிக்க

வெட்டவெளி தவமிருக்கும் அம்மா
நீ தத்தெடுத்த பிள்ளை எல்லாம்
கட்டுச்சுமை தாக்கமல்லா உச்சி
சுட உழைப்புமிலா

பிழையுணரா பழி சுமக்கும் சுவை
அறியா சூடுமிழை நிறம் மினுக்க
காடும் கடத்தி கட்டிட உச்சத்திலே
பொங்குதம்மா எங்கும்

அரிதாரமின்றி தானே அவதாரமாய்
அவையுணர்த்தி நாட்காட்டிய நிலை
மாற நினை வேண்டி தவமிருக்கும்
ஏர்பிடிக் கரங்களின் கண்ணீராய்

செவ்வாய், 3 ஜனவரி, 2012

தோழனாய் தொடுவானம் வரை....!

கருவேளந் நிழலினிலே காற்றும் 
கடமை யுணர்த்தி காட்சி மாற்றி
ஆட்சி செய்ய மனக்கோவில் குடியேறி
மறந்தங்கே பறந்த நினைவு

பறைசாற்றும் பச்சைமர ஊஞ்சல் கயிறு
உறுதியாய் உனைத்தாங்க அதனினும் 
மறையாய் மறைவாய் உள்ளில் சுமக்க
கள்ளமிலா மெழுகின் சுடராய் 
கை விரல் பற்றிய தோழனாய்
தொடுவானம் வரை வழித்துணையாய்
வாள்பிடித்து உந்தன் இன்னல்கள்
விரட்டி விடியல் காண 

கருவிழி நீர் வடிக்க அந்நீர் 
ஆனந்தத்தின் உச்சியே என்றுரைப்பாய்
எனக்கு தோழியே காலம் கடை
விதிக்க வாழ்வின் தேடலில்
நல்கரம் நீ பிடிக்க எண்ணிய 
விதையனைத்தும் துளிர்க்க என்னை
மீறிய தாக்கம் உந்தன் பாதவழியே
கரைகின்றன காலச் சுவடுகள் 

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி