ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சொல்லது தூவும் பிழை ...!

காற்றிலாடும் சுடரே சுயம்பவன் 
நேர்த்தியாய் நின்னலைப் படைத்துவக்கிய 
தவத்திற னாற்றுவன தோற்ற தற்க்கினை
யாற்றும் யாவுமென் சிதையே

உயிர் மெய்க் கலவையாய் ஆயுதமேந்தி
வல்லிய திடைக்காக்க மெல்லிய தாகம்
சிந்திய சிதறலெங்கும் விருட்சமாய்
நிழற் தர தொடர்ந்தே 

இருகியப் பாறை கற்கண்டாய் உருகி
நற்க்கொண்டாய் நாவியல் சாற்றும் 
முதற்கண்டோர் போற்றி நின்னை 
சரணடைய வீழ்த்தும் தடாகம்

நீரன்றி வேர்த்து தூர்த்து மாயும் 
சல்லடை சகிதம் அம்பு துளைக்க
நில்லாது பாயும் வல்லது மேனியிற்
சொல்லது தூவும் பிழை....! 

5 கருத்துகள்:

மனசாட்சி™ சொன்னது…

//இருகியப் பாறை கற்கண்டாய் உருகி
நற்க்கொண்டாய் நாவியல் சாற்றும்
முதற்கண்டோர் போற்றி நின்னை
சரணடைய வீழ்த்தும் தடாகம்//

சொல்லது தூவும் பிழை....தான்.

ஐயா, புலவரே நீர் வாழ்க உமது படைப்புக்கும் வாழ்த்துக்கள்

சே. குமார் சொன்னது…

தினேஷ்...

//நீரன்றி வேர்த்து தூர்த்து மாயும்
சல்லடை சகிதம் அம்பு துளைக்க
நில்லாது பாயும் வல்லது மேனியிற்
சொல்லது தூவும் பிழை....!//

வார்த்தைகள் வரிக்கு வரி விளையாடியிருக்கின்றன...

இப்படி எழத எப்படி முடிகிறது உங்களால்...

அருமை... அருமை...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நீரன்றி வேர்த்து தூர்த்து மாயும்
சல்லடை சகிதம் அம்பு துளைக்க
நில்லாது பாயும் வல்லது மேனியிற்
சொல்லது தூவும் பிழை....!


சிறப்பான பார்வை.. பாராட்டுக்கள்..

சத்ரியன் சொன்னது…

//இருகியப் பாறை கற்கண்டாய் உருகி
நற்க்கொண்டாய் நாவியல் சாற்றும்
முதற்கண்டோர் போற்றி நின்னை
சரணடைய வீழ்த்தும் தடாகம்//

பாவி மனுசா என்னவொரு சொற்பிரயோகம்!

Swapna 2v சொன்னது…

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி