சனி, 19 மார்ச், 2011

"மெய் தழுவும் பொய் "துருவமிருசேர பருவமழைக்கும்
மருவும் விரதத்து மறுத்த மது
சருகுமிலைத்தேட சன்னதி பாழ்
மானுட மேனியான் சரணம்

வேறுடல் தேடிய பயணத் துவக்கம்
மனமதில் மணந்த மாற்றிய வடு
சதிரலைத் தேடும் சகதியி லிழுக்கும்
சிதிலமடை சமர்ப்பணம்

மெய் யுரைத்தான் பொய் யுரைக்க
மெய் தழுவும் பொய் யொன்று
வினை யறுக்க நடந்தேறும் நனி
நாடக மினிதே தொடக்கம்....

கலியுகம் : அன்பு நண்பர்களுக்கு நான் தற்சமயம் ஊரில் இருப்பதால் பதிவுலகிற்கு சரியாக வரமுடிவதில்லை மன்னிக்கவும்...

வியாழன், 17 மார்ச், 2011

வாழ்த்தலாம் வாங்க ...

மழலைபோல் மனம்படைப்பின் மாறும் இப்பூவுலகு
எங்க வீட்டு வாண்டு அஞ்சநாதேவிக்கு இன்று பிறந்தநாள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துச் சொல்ல வாங்க .....

வெள்ளி, 11 மார்ச், 2011

ஆன்ம குடில்......சருகாது மருகாது இருகாது இணைவதிரு
விரகமிங்கு கனத்திருக்க அனலலர் புனல்
நாற்றம் மருவி நாசி யுலர்த்தும்
ஊசி துளைத்த மாசினியின் உருக்குள்

சுனை யுருகும் கனத்து உருக்கும்
கார் செருவி மணந்து மரைதிருகும்
மார்தழுவி தொழுதுண்டு நேரெழும்
கழு கண்ட குழுவாகி உருத்தொடுக்கும்

அரிதென்று அலுக்காது பிழைத் திருக்கும்
பிறை என்றும் பிரிவில்லா உணர்வொன்றி
உருவளர்த்து உன்னுள்ளில் மறையரையமர்த்தி
கருவென்ரும் காதலென்றும் காத்தருளும்

இருமன பந்தத்தில் விளையும் சொந்தம்

கலியுகம் : வணக்கம் நண்பர்களே சமயம் இல்லா காரணத்தால் "ஆன்ம குடில்" மீளாக உங்கள் பார்வைக்கு .... விரைவில் வருவேன் உங்களைக்கான ... ( 0091 - 82206 00571 )

செவ்வாய், 1 மார்ச், 2011

"தூர்வனக் கொல்லி"


நெடுங்கதிரோன் வானத்துறக்கம்
வாரணன் தோரண மிரட்டலினியே
சூதன விரிப்பில் தாரண மறிப்பில்
மாண்ட யந்திரத்தது கேளும்

கோரணித்தாழ் கோவணத்தாளும்
மாரணத்தால் தூர்வனக்கொல்லி
காரணத்தான் காணச்செவிடு
பாழ்த்துறை பளிங்கென

சாலக்கோர்வை வானத்து வியர்வை
மானத்தறிந்து முடியோன் கோர
முப்படை சூழும் மடியோன் முடியோன்
கைப்பிடி யடக்கம் காண்.

நாணேற்றியோர் நல்லம்பு நகைக்க
கானக மறியா கடுந்தவ சூரன்
மாளுமன்றே மறித்தெழா சுனைக்குள்
வீழ்ந்தவன் வேரற்றோன்.

தமிழ்க் கதிர் கூழுக்கலைவோன்
குரும்மினி பிறப்பான் நாவுக்கிறையோன்
நனைவதறிது தாவமறந்து தனிமையில்
தகிக்க தகனமாகும் உனதுலகு.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி