திங்கள், 8 நவம்பர், 2010

தவம்


கானகம் காணா
கடுந்தவம்

காலையும் மாலையும்
காட்சி பிழம்பாய்

வீழ்ச்சிகள் எல்லாம்
விடை பெறத்தான்

சூழ்நிலை வித்திட்ட
விதியல்ல

தென்றல் வீசமறந்த
கீற்று குடிசையிலே

தள்ளாடும் வயதினிலும்
தனித்துழைக்கும்
இரு மனம்

காத்திருக்கும்
கண்மணிக்கு
சோறுபடைக்க
கடுந்தவம்
கண்டேன் அவர்
கண்களில்............

18 கருத்துகள்:

Chitra சொன்னது…

உணர்வுகளை அருமையாக படம் பிடித்து காட்டும் கவிதை!

LK சொன்னது…

உணர்வுகளின் தவம் ...

எஸ்.கே சொன்னது…

உணர்ச்சிமிக்க கவிதை!

gunalakshmi சொன்னது…

simply superb.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///தள்ளாடும் வயதினிலும்
தனித்துழைக்கும்
இரு மனம்///

நெகிழ்வு!

தேவன் மாயம் சொன்னது…

உணர்வுள்ள வரிகள்!! மிக அருமை!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நல்லாருக்கு.கவிதை படைக்கையில் உணர்வுபூர்வமா என்ன வருதோ அதை அப்ப்ப்டியே எழுதிடுங்க...எதுகை மோனை,வார்த்தை ஜாலம் வேணூம்னு ரொம்ப யோசிச்சு மெனக்கெட வேணாம்.

இண்ட்லியில் ஏன் இணக்கலை.நான் இணைத்தேன் ஆனால் அது ஆஙகில இடுகையில் இணைகிறது ஏன்?

வெறும்பய சொன்னது…

உணர்வுள்ள வரிகள்!!

அன்புடன் மலிக்கா சொன்னது…

அருமையான உணர்வுக் கவிதை..

philosophy prabhakaran சொன்னது…

// இண்ட்லியில் ஏன் இணக்கலை.நான் இணைத்தேன் ஆனால் அது ஆஙகில இடுகையில் இணைகிறது ஏன்? //

ஏனெனில் இவர் இன்ட்லியின் ஆங்கில ஓட்டுப்பட்டையை வைத்திருக்கிறார்... தமிழுக்கென தனி ஓட்டுப்பட்டை இருக்கிறது... அதை இணைக்க வேண்டும்...

Siva சொன்னது…

your vision is spread over all worth able areas ,its excellent.Real thoughts never dead by means of your lyric poem...be in try your best.

சிவா சொன்னது…

உணர்வுப் பூர்வமான வரிகள்!!!

நிலாமதி சொன்னது…

உண்மை . அவர் இதயம் பேசும் கதை . அழகாய் இருக்கிறது.

vanathy சொன்னது…

very nice kavithai!

தமிழ்க் காதலன். சொன்னது…

அன்பு நண்பரே.. வணக்கம். இந்த கவிதை என் மனம் பிசைகிறது. உங்கள் சிந்தனை என்னைக் கவர்கிறது. அருமை. அருமை. நல்ல கவிதை.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது

ஹேமா சொன்னது…

பாசம்..எங்களின் பாச உணர்வு வரிகளில் !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பின்னீட்டீங்க

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி