பெண் நகைத்ததால் - இரவு
விண் வியக்கும் வீதியுலா
விடியற்பொழுதோ நின்
மணவிழா......
கண்ணாளன் கைப்பிடித்து
கரையேற துடங்கும் விழா
என் நினைவு வேண்டாம்
இனி உனக்கு......
கருவேலம் முள்ளிருக்கும்
காட்டு வழியல்ல - நின்
கைபிடித்தவன் காட்டும் வழி
பாதையில் முள்ளிருக்குமாயின்
வழியில் தைத்த முள்
நினை வழிமறிக்க போவதில்லை
முள்ளிற் பாதம் பட்டாலும்
சொல்லிற்க் காளாகாதே.....
பாதையை சீர்ப்படுத்தி - நின்
துணையின் கரம்பிடித்து
தொலை தூரம் பயணிக்க
என் அன்பு மகளே.........
டிஸ்கி 1 : சமயம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு மீள்பதிவு நண்பர்களே
டிஸ்கி 2 : ஒரு தந்தையின் ஏக்கங்களை சந்தித்தேன் அவர் மனநிலையில் இருந்து நான் எழுதிய வரிகள் இவை.......
12 கருத்துகள்:
//முள்ளிற் பாதம் பட்டாலும்
சொல்லிற்க் காளாகாதே.....//
இந்த வரிகளில் கவிதை சிறப்பாக தெரிகிறது ....
வழியில் தைத்த முள்
நினை வழிமறிக்க போவதில்லை
முள்ளிற் பாதம் பட்டாலும்
சொல்லிற்க் காளாகாதே.....
.....அருமைங்க. சிறப்பு.
தந்தையின் தவிப்பும்,தங்க மகளின் எதிர் காலம் பற்றிய கவலையும் ..
அருமை வாழ்த்துக்கள்...
திருமணம் ஆகா விட்டால் என்ன?
ஒவ்வொரு ஆணும் தகப்பன்தான்.
அருமைங்க.
உணர்வுகளை நல்லாவே வெளிப்படுத்தி இருக்கீங்க.
அக்கறையுள்ள ஒரு அப்பாவின் மனம் அப்படியே !
மீள்பதிவா...? இருந்துவிட்டு போகட்டும்... எனக்கு இப்போதுதான் முதல்முறையாக படிக்கும் வாய்ப்பு கிட்டியது... கவிதை நெஞ்சைத் தொடுகிறது...
உணர்வுபூர்வமான கவிதைங்க!!!
தந்தையின் நிலை பற்றி அழகா சொல்லியிருக்கீங்க!
நல்லா இருக்குங்க மீள்பதிவு.
அற்புதம்!
அருமைங்க....
//தொலை தூரம் பயணிக்க//
பயண தூரத்தின் வேதனை , புரிகிறது..
கருத்துரையிடுக