வெள்ளி, 5 நவம்பர், 2010

உமையவளின் குரல் இங்கேகோவில் திருட்டு - கேள்வியின் நாயகன்

உலகைக்காக்கும்
உமையவளே
உன்னால்
உன் நகையை
காத்துக்கொள்ள
முடியவில்லையே !!
-சாய்-
http://tamizhkirukkan.blogspot.com/2010/10/blog-post_31.html
நண்பர் சாய் அவர்களின் கேள்வி உலகாளும் உமையவளிடம்
dineshkumar said...நண்பரே உமையவளின் குரல் இங்கே

உனைக் காக்க
உலகை
சுழட்டுகிறேன்
பம்பரத்தின்
சாட்டையாய்
என் சிலை
அணியும்
நகை காக்க
மாட்டாயோ
மானிடா
நான் என்
சிலையனியும்
நகை காப்பதா
என்னை
கரம் தொழும்
நின் உலகை
காப்பதா
நீயே
பதில் சொல்???????........

6 கருத்துகள்:

philosophy prabhakaran சொன்னது…

உமையவளின் சிலையும் நகைகளும் உலகில் இல்லாமல் செவ்வாய் கிரகத்திலா இருக்கிறது :)

எஸ்.கே சொன்னது…

கவிதை இரண்டும் நன்றாக உள்ளன!

சாய் சொன்னது…

//(சாய் என்மேல் கோபம்லாம் இல்லையே //

இதுலே என்ன நண்பரே - உங்கள் வரிகள் அருமை.

நான் வெளியூர் சென்று இருந்ததால் உடனே தமிழில் போட முடியவில்லை

பாரத்... பாரதி... சொன்னது…

கலி யுகம் அல்லவா? அதான்

தமிழ்க் காதலன். சொன்னது…

அன்பு தினேஷ்குமார், வணக்கம். நட்பு நாடும் நல்மனம் ரசிக்க முடிகிறது. உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்கிறது. உங்களுக்குள் நல்ல கவித்துவம் இருக்கிறது. அதை மேன்மேலும் மெருகேற்றுங்கள் நண்பரே.
# உமையவளின் குரலாய் உங்கள் கேட்க முடிகிறது. அருமை. நல்ல சிந்தனை.
ஒரு சின்னத் திருத்தம்... "சுயட்டுகிறேன்" என்பதை "சுழட்டுகிறேன்" என மாற்றிக் கொள்ளவும். "சாட்டியாய்" என்பதை "சாட்டையாய்" என மாற்றவும். தவறாக எண்ண வேண்டாம். மொழி மீதான காதல். உங்களை மெருகேற்ற வேண்டும் என்கிற தாகம். அதான். நன்றி.

பெயரில்லா சொன்னது…

I most definitely accept as true with every thing you contain mentioned. Basically, Simply put i read through your other blogposts and I believe that you're utterly most suitable. Congratulations are in order in this web page.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி