ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நெஞ்சம் வெடிக்கிறது 18+

ராவணனை பழிதீர்த்த
ஏக பத்தினி விரதா
ராமா உன்னை 
கரம்கொண்டு வணங்க 
மறுக்கிறேன் மனதார

சுயநலத்தால் போரிட்டீர்கள்
சூழ்ச்சிகள் பல செய்து
சுடுகாடாய் அன்று
என் தமிழ் மனம் வாழும்
இலங்கை தீவு........

இன்றும் தனியவில்லை 
நீரிருவர் செய்த
சூழ்ச்சியின் 
சூறையாடல் மனம்
குமுறுகிறேன் தமிழ் 
காக்க கடவுள் யாரும்
இல்லையோ நின்
மேல் போர்தொடுக்க

தன்னை எதிர்க்க 
எவரும் இல்லையென்று 
தரணி யால்கிராயோ
தமிழை வதைத்து 
இந்த பிஞ்சு உள்ளங்கள் 
என்ன குற்றம் 
செய்தன உனக்கு
பாரடா பார் 
உடல் தின்று 
பசி தீர்த்தவனல்லவோ
நீ ....... 

ஆஞ்சநேயரே 
பெரும் தவறு 
செய்து விட்டீர் 
சுயநலவாதி
ராமனுக்கு உதவி 
இனியாவது
பிறவிபலனை தேடிக்கொள்
என்மக்களை காத்து 

ஏய் ஆதிக்க அரசாங்கமே 
இனியாவது திருந்துங்கள் 
என் நெஞ்சு வெடிக்கிறது
இந்த பிஞ்சு நெஞ்சங்களின்
சுடுகாடுகளில்....... 
சீர்திருத்த வாதிகள்
சினம் கொண்டு 
எழுந்தால் இப்புவி
தாங்காது புரிந்து 
புறப்படுங்கள்.............. 

தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு அடியேனின் தாழ்பணிந்த வணக்கம். நான் ஸ்ரீராமரையும், ராவணனையும் இங்கே எழுதிள்ளேன் அவர்களை இழுத்ததால் அவர்கள் தொடுத்த போர் இன்றும் முடிவுறவில்லையே என்பது தான் எனது ஆதங்கம் இந்திய அரசாங்கம் இன்றும் எதிரியாக(அகதிகளாக)த்தான் பார்க்கிறது (அதாவது ராமரின் பார்வையில் இலங்கை தமிழர்கள்) இலங்கை தமிழர்களை.சிங்களப் பார்வையில்(ராவணனின் பார்வை) அடிமாடுகளாய் தமிழ் இனம். நடப்பவை எல்லாம் உங்களுக்கே அறியும். இச்சிறு நெஞ்சங்களின் மரணங்கள் நெஞ்சை கதறச் செய்தன ஆத்திரம் கொண்டால் முறையிடவேண்டிய இடமல்லவா இது ராமனும் ராவணனும் ஆதியில் ஏற்படுத்திய தம் இருவரின் சுயநலத்திற்காக சூறையாடிய தமிழ் இனம் இன்றும் மாள்கிறது இலங்கையிலே.............. 

பயிர் விதைத்தவன் பகைக்கொள்ளலாமா 
பரனையில் முளைத்திருந்த 
மூன்று நெற்பயிர்கள்.............

நான் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை காலம் கடத்தும் காலக்
கடவுளை நம்புபவன் 
கருவில் செய்த குற்றம் தான் என்னவோ 
கருவரையில் சிதைக்கப்பட........... 

குமுறுகிறது நெஞ்சம் ...........

சனி, 30 அக்டோபர், 2010

அசைபோடும் நினைவுகளும் தட்டிகேட்கின்றன தவறை

அன்றோர் அறியா
வயதில் 
சுட்டியாய் சுற்றோரின்
உள்ளங்களில்
அரிதாரம் பூசிஅரங்கேறிய 
கட்டபொம்மன் 
நினைவில்லை முதல்மேடை
என் நினைவுக்கு
அறியா வயதள்ளவா 


சிரிதோர் காலம் முன் 
முதியவர் ஒருவர்
கட்டபொம்மா
என்று எனை யழைத்தபோது 
சற்றும் யோசிக்காமல் 
திரும்பிய முகம் 
முறுக்கு மீசையுடன் 


முகம் மலர்ந்த 
முதியவர் கட்டபொம்மா 
என்று கட்டியனைத்தார் 
அவர் தழுவலில் 
அசைபோட்டேன் அன்று 
அவையில் அரங்கேறிய 
அரிதாரம் பூசி நா 
உரைத்த வீர வசனங்களை

அன்ருரைத்த வசனங்கள் 
மனதில் கீதாச் சாரமாக 
பதிந்துவிட்டதோ என்னவோ 
போகும் இடமெல்லாம் 
தட்டி கேட்கின்றேன்
தவறு செய்யும் 
ஆதிக்க மேலதிகாரிகளை
இன்றும் இனியும் 
தொடரும்.................


டிஸ்கி 1: முதற்படம் வீரபாண்டிய கட்டபொம்மன் கூகிள்ல சுட்டது ........
டிஸ்கி 2: இரண்டாவது படம் பயபடாதிங்க நான்தேன்    

கிறுக்கல்

வலிகளின் வாசம் 
வாழ்க்கை நெறிகளில் 
வீசுதடி

விடிதலின் சுவாசம்
உன் விழியோரம் 
பேசுதடி

நனைகின்ற கேசம் 
நதியும் நகைப்பின்றி 
நனையுதடி


வியாழன், 28 அக்டோபர், 2010

என் பார்வையில் கேணிவனம்

என்ன அப்படி பார்க்கறீங்க நண்பர் ஹரீஷ்ன் கேணிவனம் பதிவில் நான் இட்ட பின்னூட்டங்கள் தான் இவை பதிவு போட சமயமில்லாததால் இதுவும் என் வரிகள்தானே என்று பதிந்துவிட்டேன் தப்பா நினைக்காதிங்க ஹரீஷ் http://hareeshnarayan.blogspot.com

மழை நனைக்க
மறந்ததென்ரோ
மனம் நிறைத்து
நனைத்தீரோ
கண்களை
கடை வரியில்..........


இமை விழித்து
இடுக்கைகளை தேட
இடை இடையே
மனம் விரும்பிய
வனம் வந்து
சேர்ந்தேன் ........

பயனப்பட்டவர்களுக்கு
பயணிக்கும் பாதை
பழகிப்போனதாய்
அமையும்
வடுகளின்
வலிகள்,,,,,,,,,,,,,,,

வெண்ணிலவும்
இருளில் இருளியதோ
கண்ணிமைக்கும்
நேரத்தில் 
கருங்குழி என்றானதோ
கருவிழி மயக்கத்தில்
கனவும்

கரையேறலாம்........

வீசிய தென்றலும்
அவள் சுவாசிக்க
பாதை மாறி
பாதாளம் அடைந்ததோ
பசிக்கு ருசிக்க
தயிர் சாதம்
ருசிககாமல் ஒதுக்கிய
பீட்ரோட் பொரியல்
நின் தொடர் ரசிக்க
வாய்த்ததல்ல
தமிழினை ருசிக்க
ஒருகணம் என்றாலும்
தமிழ் மணம்
மாறாமல் கனத்து
உரைத்த குரலில்
தமிழ் மூத்தோர்கள்
மறையவில்லை 
இன்றும் உன் 

எழுத்துக்களில்....

வர்ணம் தீட்டி
அறிய பலதகவல் தேடி
வாக்கியங்கள் கோர்த்து
மனமெல்லாம் ஆக்ரமித்து
இமை வியக்காமல் 
நின் தொடர் சுவாசமாய்
என்னும் எண்ண மெலாம்
கேணிவனம்...........

வில்.........

திங்கள், 25 அக்டோபர், 2010

புரியா புலம்பல்

புரியாமல் புலம்புகிறேன்
பூப்போல புவி சிரிக்க 

கரையாமல் கலைகிறேனே
காற்றோடே ஆசைகளை 

நிகழ்கால நினைவலையில் 
நீந்துகின்ற நீரோடை

தடையில்லா கரம் கொடுக்க 
தாழாத வரம் வேண்டி 

மழையன்றோ மனம் வெல்லும் 
மாறாத திடம் வேண்டி 

வரியொன்றை நீ வாசிக்க 
வாழ்வெல்லாம் கவியாவேன்..............

கரம் பிடிக்க 
காத்து நிற்கும்
கானல் நானானேன் ............

வெள்ளி, 22 அக்டோபர், 2010

தவிப்பு

உறங்கா விழி படைத்து
நினை பாலூட்டி உறங்க வைத்து
நின் விழி நோக்கிய
அன்னையன்ரோ

தடை பல தகர்த்து
நினை தரணியில்
தவழ வைத்த தந்தையன்ரோ

தன் மக்கள் கற்ப்பினும்
தான் கற்ற கல்விதனை
நினக்கு புகட்டிய ஆசானன்ரோ

நீ செல்லும் பாதையின்
முற்களை அகற்றிய
நின் பாச சகோதரனல்லோ

தன் மடிதனில் நினை யமர்த்தி
நின் செவிதனில் தோடனிந்த
தாய் மாமனன்ரோ

நினை சுற்றி விளையாடும்
நின் பக்கத்து வீட்டு
தோழிகலன்ரோ

தாய் தந்தை
அமைத்திட நின்
வாழ்வு கசக்குமென்று

நின் விருப்பத்தை
விருதாக்கியவர்கள்
அவர்கலன்ரோ

சிறிதும் சிந்திக்காது
அவர்கள்
சிந்தனையெல்லாம்
உனை நினைத்து

சிறு நெருப்பிற்க் கிறையாகி
சிதரவைத்ததேனோ
அவர்களை.........

அறிந்துகொள்ளவும்


பழைய சோற்றை யாரும் விரும்பவில்லை என்று நினைக்கிறேன் இதோ உங்கள் பார்வைக்குப் பழையச் சோறு.............

செவ்வாய், 19 அக்டோபர், 2010

பசியில் ருசித்தது

தினந்தோறும் உன்
நினைவு..............

நிலையில்லா கனவொன்றும்
கண்டேன்............

தலைவாழை இலைக்கண்டு
தரையெல்லாம் பளிங்குபோல
விழித்திரிந்த விழிகலன்றோ
பச்சரிசி பொங்கலிட்டு
பரவியிருந்த பொறியல்கள்
படு ஜோராய் மின்னியனவே
தலை தூக்கிய வெண்டை குழம்பு
நா ருசிக்க தூண்டியதும்
கனவை கலைந்ததேனோ

காரிருள் மறைத்த
ருசி ரசிக்க கொடுத்திருந்து
ருசிக்க இருந்த பழையச்சோறு
அமுதுக்கும் அப்பால்..............
பாமரனின் பசியில் ............

திங்கள், 18 அக்டோபர், 2010

விண்ணைத்தொட

பணம் பரவலாய்
பாச வலைத் தேட ............

குணம் தோண்டிய
குழிகலன்றோ....................

மனம் மாறினது
மாலையிட தானோ.........

கணம் யாசிக்கும்
முனிவரல்லவே...........

தினம் போதிக்கும்
ஆசானும் யோசிக்க................

நகைப்புக்கூட
நதிகளாய் இன்று
யோசிக்க...............

விதி வழிவிட
விதிமுறை இன்று
வீதியில்....................

விடை தருமோ
விண்ணைத்தொட.........

விரும்பியதென்னவோ
நட்பின் நம்பிக்கை
நாடகமில்லாமல்..........

சனி, 16 அக்டோபர், 2010

தொடரும்முன்

தரணியில் இன்றும்
தானே உழைக்கும் சிறுகரங்கள்

திகட்டவில்லை அவர்க்கு
தீக்குச்சி பட்டறைகள்

துயரங்கள் துனிச்சலாக
தூய்மையான வாழ்விழந்து

தென்றல் வீசாதோ
தேன்மழை பொழியாதோ

தை பிறக்குமோ

தொட்டு தொடரும்முன் வாழ்வில்
தோள் கொடுக்கும் சூழல்
தோற்கவில்லை இவர்கள் .................

தோள்கொடுப்போம்
அவர்களுக்கு கல்வி வழியில்
அரசாங்கம் திருந்தாது
அரசியல் மாறும்வரை
தூர் வாரும் ஏரியிலும்
கொள்ளை............
துணிந்து நிற்கும்
நெஞ்சங்களும் கொலை.....
தனித்தே நிற்பினும்
தற்கொலையாக
மாறும் நிலை
துணிந்த கரங்கள்
சேர்வோம் என்றும்.......


வெள்ளி, 15 அக்டோபர், 2010

மனமார்ந்த வணக்கங்கள்

(என்ன அப்படி பாக்கரிங்க
அட நான்தாங்க
ஏதோ இந்த வருஷமாவது
பொண்ணு கிடைக்குதான்னு பார்ப்போம்)
அப்பா மனசு
ரொம்ப சந்தோஷமா
இருக்கு
எனை வாழ்த்திய
அணைத்து
நெஞ்சங்களுக்கும்
என் இதயம்
கனிந்த
வணக்கங்கள் ............

புதன், 13 அக்டோபர், 2010

என் சுயவரி

முற்களாய் நாபகம்
என் முகவரி........

சொற்களாய் மாறியதேன்
என் சுயவரி........

கற்களாய் கிடந்த
என்னை........

கடத்திச் சென்றது
யாரோ.........

கலியுகம் படைத்ததேனோ
மானுட பாசத்தால்....

கனவிலும் காதல்
இல்லை...........

நினைவிலோ
காதலர்களைக் கண்டால்
கவி பாட தோன்றும்..........

நிழலிலோ காதல்
கூடுகள் கொண்ட
தனிமரம்............

காலம் கடத்தியிருக்கும்
என்னை ஆம்..........

நாளைய மறுதினம்
நான் உதித்ததினம்.........

நிஜத்திலோ தாய்மடி
தேடும் கனவுகள்..........

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நாதி

நதி நனையவில்லை
நாதியில்லாமல்

நிதி வெகுமதியாக
நீதீயின் கைகளில்

நுணுக்கமாக யோசித்தாலும்
நூர்ப்பதில்லை நூல்(ள்)

நெறிமுறைகள்
நேர்த்திக் கடனாக

நைந்து நூலாகிறது

நொண்டி யாக்கப்பட்ட
நோய்ப்பட்ட வாழ்வுகள்

நௌ.............
சித்ராக்கா Now.............

வெள்ளி, 8 அக்டோபர், 2010

நிகழ் சுமக்க

மலர நினைக்கும்
மொட்டு

தவழ நினைக்கும்
மழலை

கூவ நினைக்கும்
குயில்

படற நினைக்கும்
கொடிமுல்லை

பாட நினைக்கும்
பாடல்

காண நினைக்கும்
ஆவல்

மறக்க நினைக்கும்
காதல்

நம்மில்
எத்துனையோ...........

நிறம் மாறாமல்
சுமக்கும்
நினைவுகள்,,,,,,,,,,,,,,,,

நிகழ் சுமக்க
மறுப்பதுண்டோ?????

செவ்வாய், 5 அக்டோபர், 2010

நித்திரையில் கண்ட கனவானேன்

சித்திரை நிலவாக
நின் முகம் காண?

வைகாசி திங்களில்
உதித்தவளோ நீ

ஆனி அடிதார்ப் போல்
நெஞ்சில் பதிந்தாய்

ஆடி யின் பிம்பமாக
நள்ளிரவில் நீ

ஆவணி யில் வீசிய
நின் தாவணிக் காற்று

புரட்டாசி திங்களில்
உதித்த நான்

ஐப்பசி தீபவொளியில்
புன்னகை பூத்தது

கார்த்திகை அகலொளியில்
தேவதையாய் நீ

மார்கழி பூக்கள்
மலர வெட்கப்பட்டன

தை பிறந்தும் நின்
விழி வழி மறிக்க

மாசி மகமாக
மனமெல்லாம் கடலலைகள்

பங்குனி உத்திரத்தன்று
நித்திரையில் கண்ட கனவானேன்

திங்கள், 4 அக்டோபர், 2010

இயற்றிய தவறு

ப சிக்கு பலியானது
பா லைவன பறவைகள்

பி ழைக்கு தொழிலானது
பீ டத்தில் யாகம்

பு விக்கு எருவானது
பூக்களின் சருகுகள்

பெ ற்ற கடனானது
பே ச்சிலே ஏளனம்

பை ய புசிக்க எண்ணியது

பொ றுக்குமா இனியும்
போ ர்க்களம் தூண்டிய பசி.............

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி