செவ்வாய், 24 ஜனவரி, 2012

யார் உனைத்தாங்க...?


இடையிடையே மெல்லும் வார்த்தைகள்
தவறுதென் வழிகளிலே தடையுடைய 
தவமெதற்க்கு ஆயுத்தப்படுத்து அகமுள்ள
அறியதோர் உந்தன் கூர்வாளை 

தினமறிவேன் திசைத்தவறேன் திருத்தங்கள்
திருந்த பயணிக்கையில் விருட்சங்கள் 
நிழல்தர மறுப்பதென்ன நினைத் தொடர
நிலைப்பதென் தனிமையே

தலையாட தன்னோடே அசைப்போடும்
அகிலமெலாம் அரை நொடியில்
சுற்றிவரும் சிந்தனையின் ஆற்றல்
எவர்த்தருவார் இங்கு 

இன்னும் புதைக்கிறாய் ஏனோ வதைகிறாய்
ஆழ்வதும் தாழ்வதும் தானே உந்தன்
தனித்துவமென்றால் யார் உனைத்தாங்க 
பாரினில் வேந்தனாய் பயணப்படு ...!

புதன், 18 ஜனவரி, 2012

தேடி சூடிய மாலை ...


கோரத் தாண்டவ மேனியிர்த் தங்க
கொடுரமாய் நிந்தன் தாளமேன்
கோணத் திரிவாய் உடைவாள் தாழ்த்தி
கொல்லி தேடிய நிலையே

கோவணன் பாடியும் சாடிய மிகுதி
கொண்டான் காக்க வந்தோன் - மணந்தக்
கோடி உற்றது மற்று உடனது
கொல்லத் தேடிய நிலையே

கோலடிப்பட்டு நாளடித் தாண்டி
கொவ்வைப் படர்ந்து தலைத் தூக்க
கோபக் கனைகள் எனைத் தாக்க
கொன்றதும் சூடிய மாலை....

வெள்ளி, 13 ஜனவரி, 2012

பச்சை சேலை கட்டும் தாயே...!






அன்னமாய் வழிநடத்தி வண்ணமாய்
சிலை வடித்து எண்ணமாய் நிழலுடுத்தி
பச்சை சேலை கட்டும் தாயே
உயிரிருக்கும் உடல் செழிக்க

வெட்டவெளி தவமிருக்கும் அம்மா
நீ தத்தெடுத்த பிள்ளை எல்லாம்
கட்டுச்சுமை தாக்கமல்லா உச்சி
சுட உழைப்புமிலா

பிழையுணரா பழி சுமக்கும் சுவை
அறியா சூடுமிழை நிறம் மினுக்க
காடும் கடத்தி கட்டிட உச்சத்திலே
பொங்குதம்மா எங்கும்

அரிதாரமின்றி தானே அவதாரமாய்
அவையுணர்த்தி நாட்காட்டிய நிலை
மாற நினை வேண்டி தவமிருக்கும்
ஏர்பிடிக் கரங்களின் கண்ணீராய்

செவ்வாய், 3 ஜனவரி, 2012

தோழனாய் தொடுவானம் வரை....!

கருவேளந் நிழலினிலே காற்றும் 
கடமை யுணர்த்தி காட்சி மாற்றி
ஆட்சி செய்ய மனக்கோவில் குடியேறி
மறந்தங்கே பறந்த நினைவு

பறைசாற்றும் பச்சைமர ஊஞ்சல் கயிறு
உறுதியாய் உனைத்தாங்க அதனினும் 
மறையாய் மறைவாய் உள்ளில் சுமக்க
கள்ளமிலா மெழுகின் சுடராய் 
கை விரல் பற்றிய தோழனாய்
தொடுவானம் வரை வழித்துணையாய்
வாள்பிடித்து உந்தன் இன்னல்கள்
விரட்டி விடியல் காண 

கருவிழி நீர் வடிக்க அந்நீர் 
ஆனந்தத்தின் உச்சியே என்றுரைப்பாய்
எனக்கு தோழியே காலம் கடை
விதிக்க வாழ்வின் தேடலில்
நல்கரம் நீ பிடிக்க எண்ணிய 
விதையனைத்தும் துளிர்க்க என்னை
மீறிய தாக்கம் உந்தன் பாதவழியே
கரைகின்றன காலச் சுவடுகள் 

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி