செவ்வாய், 3 ஜனவரி, 2012

தோழனாய் தொடுவானம் வரை....!

கருவேளந் நிழலினிலே காற்றும் 
கடமை யுணர்த்தி காட்சி மாற்றி
ஆட்சி செய்ய மனக்கோவில் குடியேறி
மறந்தங்கே பறந்த நினைவு

பறைசாற்றும் பச்சைமர ஊஞ்சல் கயிறு
உறுதியாய் உனைத்தாங்க அதனினும் 
மறையாய் மறைவாய் உள்ளில் சுமக்க
கள்ளமிலா மெழுகின் சுடராய் 
கை விரல் பற்றிய தோழனாய்
தொடுவானம் வரை வழித்துணையாய்
வாள்பிடித்து உந்தன் இன்னல்கள்
விரட்டி விடியல் காண 

கருவிழி நீர் வடிக்க அந்நீர் 
ஆனந்தத்தின் உச்சியே என்றுரைப்பாய்
எனக்கு தோழியே காலம் கடை
விதிக்க வாழ்வின் தேடலில்
நல்கரம் நீ பிடிக்க எண்ணிய 
விதையனைத்தும் துளிர்க்க என்னை
மீறிய தாக்கம் உந்தன் பாதவழியே
கரைகின்றன காலச் சுவடுகள் 

11 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

/கருவிழி நீர் வடிக்க அந்நீர்
ஆனந்தத்தின் உச்சியே என்றுரைப்பாய்
எனக்கு தோழியே காலம் கடை
விதிக்க வாழ்வின் தேடலில்//

அழகான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நண்பர்களே உங்களுக்காக :

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

Kalidoss Murugaiya சொன்னது…

மிகவும் அருமை.வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

துணையை பற்றிய கவிதைன்னு நினைக்கிறேன் அழகு...!!!

நிலாமதி சொன்னது…

மிகவும் அழகாய் வந்திருக்கிறது படங்களுடன். பாராடுக்கள்.
இப்போ முன்பு போல
நேரமில்லை தொடர்பு கொள்ள மன்னிக்கவும்

FOOD NELLAI சொன்னது…

தோழமைக் கவிதை சூப்பர்.

Meena சொன்னது…

தோழன் தோழனாய் மட்டும் . நன்று.

Ramani சொன்னது…

அருமையான படைப்பு
தாங்கள் இன்று சென்னைப் பித்தன் அவர்களால்
வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள்ளதற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்கள் கவிப்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்

சென்னை பித்தன் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

ஹேமா சொன்னது…

அழகான உணர்வோடு காதல் கவியொன்று.தொடுவானம்வரை கூட வர வாழ்த்துகள் தினேஷ் !

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி