சனி, 11 டிசம்பர், 2010

புதிய உறவுகள் .............


அந்தி மாலைப் பொழுது
பசு சுவைக்க புற்கட்டுகள்
சுமந்து வரும்
கன்னியரின் கொலுசு ஓசை....!
அன்னநடையுடன்....
கனித்தமிழ் பாடலுடன்...
காதலனை தேடியதுவே....!!

கடல் நீரும் நாமெனவே
கரை சேரும் காலம் வரும்
கரையாதே கண்மணியே...!
பொற்காலம் அவள் காண
கவி படி அழைத்தானோ....?!

பொய்யுரைத்து அழைத்தானோ...?!
போர்க் கோலம் அழைத்ததுவோ...?!
மெய்யான அவளழகில்...
மெய்சிலிர்த்து போனானே...!
பெய்யாத மழை தருணம்
மேற்கூரை சாட்சி சொல்ல
மெய்யிழந்து போனாளே...!!
நேற்று வரை கன்னியவள்.
தனையிழந்து நிர்கதியாய்......

வருவான் என்ற நம்பிக்கை
காற்றாக பறந்ததுவே...அவன்
காதலனோ...? கள்வனோ...?
சாதியத்தின் சூட்சமமோ...?
சிறுபாலகனாய் ஞாபகமிஙகு
கலங்கிய கண்ணுடனே
புதியதாய் பெண்ணொருத்தி
வீட்டினுள்ளே......

"அக்கா".... என்றேன்
மறுவார்த்தையில்லை அவளிடத்தே.
காலை விழித்தவுடன்
அம்மையும் அப்பனும்
புறம் செல்ல புறப்பட
வழிமறித்து நானுமென்றேன்.

"சாதிக்க போறோமடா"
"சாதியை துரத்த" இந்த பயணமென்றார்.
அக்காளின் துணையாக
வீட்டிலே விட்டுவிட்டார்.

ஒலிபெருக்கி பாட்டிசைக்க....
அக்காளை காணவில்லை.
தோட்டத்து வாசலிலே
அழுகுரல் கேட்க....
அறியாத பருவமதில்
அதிர்ந்து போன நான்
அவள் தோள் பற்றி
தெருக்கூத்து கட்டியகாரனாய்
கேளிக்கை வசனம் பேசி
அக்காளை சிரிக்க வைத்தேன்.

எனக்காக சிரித்தாளோ...?!
எதற்காக சிரித்தாளோ...?!
அவள் சிரிப்பில்....
இரவு வரும் நேரமிங்கு.
அம்மை அப்பனும் வரவில்லையே
எத்திக்கு அலைகிறாரோ...?!
என்ன அங்கு சூழ்நிலையோ...?!
சின்னம்மா துணையுடனே
உறங்கி போன ஞாபகம்.

மூன்று நாட்கள் ஓடினவே...
முடியாமல் அவள் சிரிக்க.
ரெட்டை மாட்டு வண்டி
ஒன்று வாசலிலே வந்து நிற்க
காயப்பட்ட காதலனும்
அம்மை அப்பனுடன் வந்திறங்க....
"கண்ணா"...! எனக் கதறிவிட்டாள்
கதறிபோய் அவனும் அழ....

தாய் தந்தை பாதமதில்
இரு சாதி சங்கமத்தில்
"பெண்சாதி" கரம்பிடித்து
அவரிருவர் பணிந்து விழ
புரியாத புதிரானேன் நான்.............!!


எனை வழிநடத்தும் என் தாய் தந்தைக்கு வணக்கம் அவர்கள் பாதம் சரணடைந்து சமர்பிக்கும் எனது நூறாவது பதிவு
டிஸ்கி : உண்மையான வரிகளை தொடுக்க உதவிய அன்புத் தோழர் தமிழ்க்காதலன் அவர்கட்க்கு வணக்கத்துடன் கூடிய மனமார்ந்த நன்றிகள்

49 கருத்துகள்:

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கம்..

பாரத்... பாரதி... சொன்னது…

நாங்க தான் first , யாரங்கே வடையை ராஜ மரியாதையுடன் எடுத்து வாருங்கள்..

பாரத்... பாரதி... சொன்னது…

அருமையான கவிதை தினேஷ்.

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
விரைவில் ஆயிரம், பல்லாயிரம் படைக்க வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... சொன்னது…

அப்பா மற்றும் அம்மாவுக்கு எம் வந்தனங்கள்.

பாரத்... பாரதி... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ்க் காதலன். சொன்னது…

பெற்றோரை வணங்கும் பெருந்தகையே..... வணக்கம். உங்கள் கவிதையின் ஆழம் அழகு... சாதிகளில் சந்தி சிரிக்கும் நாடு நமது நாடு. இங்கே காதலனெல்லாம்..... கள்வனாய்.... கொலைகாரனாய் மாற்றப் படும்...கொடுமை நின்ற பாடில்லை. கள்ளக் காதலுக்கு இருக்கும் ஆதரவு கூட.... நல்லக் காதலுக்கு இல்ல நண்பா....
உங்கலின் 100 வது பதிவுக்கு தமிழ்க்காதலனின் வாழ்த்துக்கள். நீங்கள் எழுத்துலகில் ஒரு சகாப்தமாய் மிளிர வாழ்த்துகிறேன்.

RVS சொன்னது…

மென்மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துகிறேன்.
தாய் தந்தையரை வணங்கி பதிவு போட்ட விதம் என்னை மிகவும் ஈர்த்தது. நன்றி. ;-)

வினோ சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே...

ArunprashA சொன்னது…

சாதிக்க போறோமடா"
"சாதியை துரத்த"

உண்மையான வசனங்கள். வாழ்த்துக்கள் நண்பரே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சாரி நண்பா கொஞ்சம் லேட்டாயிடுச்சு, டெம்ப்ளேட் கமென்ட் போடுறதுல இஷ்டம் இல்ல, அதான் லேட்....!

வெறும்பய சொன்னது…

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஒரு உணர்ச்சி பூர்வமான கதையவே சொல்லிட்ட மாம்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

அந்நியன் 2 சொன்னது…

தாய் தந்தையோரை போற்றி !
அதை உம் பதிவில் ஏற்றி !
நெகிழ வைக்கும் உமது நேசம் !
இதுவல்லவா அன்பு மகனின் பாசம் !

சான்றோர் போற்றிட !
ஈன்றோர் உமை வாழ்த்திட !
தித்திக்கும் இந்நாளில் நீ
நூறு என்ன ஆயிரமும் கடப்பாய் !

அன்புடன் அறியாத நட்புடன், உமை வாழ்த்தும் நண்பன் நான்.
மற்றவருக்கு அந்நியனான்.

.

சங்கவி சொன்னது…

வணக்கம்...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

பெற்றோரை நேசிக்கும், பூசிக்கும் எவருமே வாழ்க்கையில் தோற்றதில்லை.
உங்களுக்கு என் வாழ்த்துகள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

நூறுக்கு வாழ்த்துகள்!

வைகை சொன்னது…

பங்கு வாழ்த்துக்கள்!! கலக்குங்க!!

பிரஷா சொன்னது…

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

பெற்றோரின் ஆசியுடன் எண்கள் அன்பும் வாழ்த்தும்,உனக்கான பிரார்த்தனையும் என்றும் உண்டு தினேஷ்! நூறுக்கு வாழ்த்து. உன் ஆயிரமாவது பதிவிற்கு காத்திருப்போம் !

ஹேமா சொன்னது…

தினேஸ்...உங்கள் அன்புப் பெற்றோரே போதும் உங்களை ஆசீர்வதிக்க.மங்களகரமான அம்மையப்பன்.நானும் அவர்களிடம் ஆசீர்வாதம் கேட்டபடி வணங்கிக்கொள்கிறேன் !

தங்கம்பழனி சொன்னது…

கவிதை முத்துக்கள்.. கண்டுஎடுக்கப்பட்டது.. தங்கள் வலைப்பூவில்..என்றும் வசந்தம் வீசட்டும்..! தங்கள் வாழ்க்கையிலும் வலைப்பூவிலும்..!நன்றி! வாழ்த்துக்கள்..!

Ananthi சொன்னது…

அருமையான கவிதை கண்டே
அன்னையும் தான் பெருமை கொண்டார்..
அவர் அகம் மகிழ
ஆயிரமாயிரம் கவி படைக்க
அன்பான வாழ்த்துக்கள்..!


உங்கள் நூறாவது பதிவில்
அருமையான கவிதையுடன் பகிர்வு.. நன்றி :)

karthikkumar சொன்னது…

வருவான் என்ற நம்பிக்கை
காற்றாக பறந்ததுவே...அவன்
காதலனோ...? கள்வனோ...?
சாதியத்தின் சூட்சமமோ...?
சிறுபாலகனாய் ஞாபகமிஙகு
கலங்கிய கண்ணுடனே
புதியதாய் பெண்ணொருத்தி
வீட்டினுள்ளே......///
சூப்பர் பங்கு

karthikkumar சொன்னது…

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

karthikkumar சொன்னது…

தொடருங்க 100 ஆயிரமாகனும்

karthikkumar சொன்னது…

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
பெற்றோரை நேசிக்கும், பூசிக்கும் எவருமே வாழ்க்கையில் தோற்றதில்லை.
உங்களுக்கு என் வாழ்த்துகள்///

அதேதான் பங்கு

சங்கவி சொன்னது…

..தாய் தந்தை பாதமதில்
இரு சாதி சங்கமத்தில்
"பெண்சாதி" கரம்பிடித்து
அவரிருவர் பணிந்து விழ
புரியாத புதிரானேன் நான்.............!!

மெய் மறந்தேன் இவ்வரிகளை படித்து...

Chitra சொன்னது…

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், தினேஷ்! ரொம்ப சந்தோஷமாக இருக்குதுங்க . அப்பா, அம்மா படங்கள் போட்டு அசத்திட்டீங்க! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

கோமாளி செல்வா சொன்னது…

//பொய்யுரைத்து அழைத்தானோ...?!
போர்க் கோலம் அழைத்ததுவோ...?!
மெய்யான அவளழகில்...
மெய்சிலிர்த்து போனானே...!
///

செம செம ..!!

கோமாளி செல்வா சொன்னது…

//"சாதிக்க போறோமடா"
"சாதியை துரத்த" இந்த பயணமென்றார்.
அக்காளின் துணையாக
வீட்டிலே விட்டுவிட்டார்.
//

இந்த வரிகள் ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..!!
கவிதை சொல்லும் கருதும் அருமை .. அதே சமயம் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா .. அப்பா அம்மா படம் போட்டு கலக்கிட்டீங்க .!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இன்னும் லட்சம் ஹிட் பதிவுகளை தொட வாழ்த்துக்கள்

சே.குமார் சொன்னது…

பெற்றோரை வணங்கும் பெருந்தகையே...
மென்மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

தினேஷ் நீங்க ஒங்க அம்மா ஜாடை.சரிதானே?

உங்கள் கவிதைகளில் நான் ரசிப்பது லயத்தைத்தான்.

எதிரே உட்கார்ந்து பாடுவது போல ஒரு நெருக்கத்தத் தரும் உணர்வு தனித்வமானது.

ஏமாற்றமுற்ற அபலைப் பெண்ணின் குரல் இந்த இடத்தில் அதை மறுபடியும் நிரூபிக்கிறது.

vanathy சொன்னது…

வாவ்! 100வது பதிவு கலக்கிட்டீங்க.

ருத்ரன் சொன்னது…

சிறகுகள் இல்லையடா எனக்கு, இருந்திருந்தாள் பறந்து வந்திருப்பேனடா உன்னிடத்தில் உன்னை பாராட்ட......... உன் 100 வது படைப்புக்கு என் அன்பான வாழ்த்துக்கல்................ நீ மென்மேலும் படைப்பதற்க்கு என் அதிகாரமான ஆசிகள்...............

சாய் சொன்னது…

100 Wow.

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

DREAMER சொன்னது…

படு அமர்க்களமான நூறாவது பதிவு..! மிகவும் அருமை..!
உங்கள் பெற்றோர்களின் புகைப்படம் பகிர்ந்தமைக்கும் நன்றி! இது போன்ற பகிர்வுகளும் பதிவுகளும் நம்மை ஒரே குடும்பமாக காட்டுகிறது.

நட்புடன் இணைந்திருப்போம்! நன்றி வணக்கம்!

-
DREAMER

நீச்சல்காரன் சொன்னது…

நல்ல கவிதை. நெகிழ்ச்சியாக....
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.சாரி ஃபார் லேட்.

அம்மா அப்பா ஃபோட்டோவை போட்டது நல்ல ஐடியா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>கன்னியரின் கொளுசோசை..

கொலுசு ஓசை என்பதே சரி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

"சாதிக்க போறோமடா"
"சாதியை துரத்த" இந்த பயணமென்றார்.


சூப்பர் லைன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>தெருக்கூத்து கெட்டியகாரனாய்
கேளிக்கை வசனம் பேசி
அக்காளை சிரிக்க வைத்தேன்.

கட்டியக்காரன் என்பதே சரி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீங்க வந்த புதுசுல இருந்ததை விட இப்போ வேகமும் ,குவாலிட்டியும் கூடிடுச்சு

சத்ரியன் சொன்னது…

தினேஷ்,

ஒரு பெருங்கதையை சிறு கவிதை ஒன்றில் வடித்து விட்டீர்கள்.

100 க்கு வாழ்த்துகள்.

ஆதிரா சொன்னது…

//தாய் தந்தை பாதமதில்
இரு சாதி சங்கமத்தில்
"பெண்சாதி" கரம்பிடித்து
அவரிருவர் பணிந்து விழ
புரியாத புதிரானேன் நான்....//

ஆதிரா பக்கங்களில் தங்கள் பதிவைப் பார்த்துவிட்டு பதறி அடித்து ஓடி வருகிறேன் நண்பரே.. அதற்குள் 46 பேர் வாழ்த்துச் சொல்லிச் சென்று விட்டனர்.

கலி காலத்தில் ஏதேதோ நடக்கும் என்று கேட்டிருக்கிறென். அதுவும் பதிவுலகில் கேட்கவேண்டாம என்பர். ஆனால் இப்படி தாய் தந்தையரை வணங்கி பதிவு போடும் உண்ணதமும் நடக்கும் என்பதை இங்கு வந்து பார்த்தவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆம் நண்பரே இது களி காலம்.

தங்களது 200 வது பதிவுக்கு கண்டிப்பாக நான் தான் முதல் வாழ்த்துச் சொல்லுவோம். விரைவில் 200 வது பதிவு போட வாழ்த்துக்கள்.

Kalidoss சொன்னது…

தினேஷ் குமார் அவர்களுக்கு வணக்கம்.உங்கள் பெற்றோருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.பல நூறு பதிவுகளை மென் மேலும் பதிக்க என் வாழ்த்துக்கள் ..இன்றுதான் மும்பை வந்தேன் ..சிறிதே நாள் கடந்த வாழ்த்து.வாருங்கள் வலைப்பக்கம் உங்களுக்காக மற்றுமோர் பதிவு ..என்றும் அன்புடன்

பெயரில்லா சொன்னது…

Will you be pre occupied utilizing updating shortcuts?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி