புதன், 1 டிசம்பர், 2010

வதம் வரும் வதைக்க............


ரணங்கள் ஆறவில்லை
எங்கள் மனங்களிலே
ரணங்களை ரசித்து
ருசித்தவனல்லவோ நீ

ராட்சத வம்சம் நீயோ
வதம் ஒன்று வரும்
உன் வரவில் வைத்துக்கொள்
உயிர் மட்டும் இருக்கும்

உன் உடம்பெல்லாம் சிதையும்
உன் உயிர் மட்டும் இருக்கும்
கருவறையில் சிசு தின்ற
ராட்சதன் அல்லவோ நீ

ஷத்ரிய வம்சமடா
நாங்கள் மடையனே
வதம் செய்ய வந்துள்ளோம்
உன் உடல் கொய்து

உடலட்ற உயிராக்குவோம்
உன்னை வதம் செய்ய
வந்துள்ளோம் மனிதன்
மாற்றிய மானிதனாய்....

உன் படை சூழ்ந்தாலும்
பிடிக்க முடியா இடம் எனக்கு
மேலுல்லவன் கொடுத்துள்ளான்
உன் உயிர் வாழும் உலகில்

உன் உடல் வாழ சாத்தியமில்லை
பிஞ்சுகளின் நெஞ்சம் துளைத்த
அணுகுண்டு உன்னை துளைக்க
மாட்டேன் என்றது ஏனோ ....

அவை நீ விலைக்கு வாங்கியவையோ
குண்டுகள் வீசி கூண்டோடு
உன்னை அழிக்க நான் என்ன
மானிடம் அறியா நீயாடா சூட்சமா

பட்டறையில் பதப்பட்ட
கரங்கள் இங்கு குண்டு துளைக்கா
நெஞ்சம் படைத்து ஆயுதம்
வடிக்கிறது உயிர் கொல்லா

ஆயுதம் உன் உயிர் கொண்ட
உதிரி உடல் கண்டு
பாடம் புகட்டும் பாவிகளை
ருசிக்க வாராயோ இறைவா

இறைவா நீ படைக்கா
நீதி நீ வரவில்லையெனில்
படைக்கப்படும் உன்
படைப்புகளை மீறி

இனியாவது யோசி
நான் கடவுள் இல்லையென்று
கடவுளே...............

17 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கடைசி வரி நச்னு இருக்கு ...

Chitra சொன்னது…

ஆக்ரோஷமான கவிதை.

வினோ சொன்னது…

வரிகள் அருமை தினேஷ்...

தமிழ்க் காதலன். சொன்னது…

அருமை நண்பா, இந்த வேகம் எனக்கும் உண்டு. நம் போல் இன்னும் இருக்கும் தமிழருக்கும் குமுரிக் கொண்டிருக்கும் இரத்தம் பீறிடும் போது அவன் உடல் சிதிலமடையும். சந்தேகமில்லை. ஒரு இனத்தின் அழிவுக்கு.... அன்னைத் தமிழின் இழிவுக்கு வழி வகுத்தவன் நிச்சயம் கேவலமான மரணத்தை அடைவான். தமிழின் ஒரு சொல் கொல்லும். ஒரு சொல் வெல்லும். என் சொல்லும், தமிழும் வெல்லும். நாளைய சரித்திரம் இதை உண்மை என உணரும்.

எஸ்.கே சொன்னது…

உணர்ச்சிபூர்வமான கவிதை!

vanathy சொன்னது…

super! keep it up.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தினேஷ் கவிதை வேகமா கோபமா இருக்கு.அடிக்கடி வதம் என்ற வார்த்தையை பயன்படுத்தறீங்க..அதை தவிர்க்கவும்.கவிதையை முடிந்தவரை சுருக்கவும்

karthikkumar சொன்னது…

வரிகள் அனைத்தும் நச்

நாகராஜசோழன் MA சொன்னது…

உணர்வுப் பூர்வமான கவிதை தினேஷ்!

logu.. சொன்னது…

agga...

arumaiyana kavithai.
uyirgal pirinthalum unarvugal karaivathillai...

வெறும்பய சொன்னது…

வரிகள் அருமை

மனோ சாமிநாதன் சொன்னது…

உணர்ச்சிப்பூர்வமான‍ ஆக்ரோஷமான கவிதை! நன்றாக உள்ளது!!

பாரத்... பாரதி... சொன்னது…

வாழ்த்துக்கள் தினேஷ், ஒரு இனத்தின் வீரம் உங்கள் கவிதையில் தெறிக்கிறது. ஆக்ரோஷமான கவிதை..

பாரத்... பாரதி... சொன்னது…

//அடிக்கடி வதம் என்ற வார்த்தையை பயன்படுத்தறீங்க..அதை தவிர்க்கவும்.//

பாரத்... பாரதி... சொன்னது…

ராட்சத வம்சம் நீயோ
ஷத்ரிய வம்சமடா
நாங்கள்...

மடையனே
உன் தலைக்கொய்து
உயிரற்ற உடலாக்குவோம்..

இளங்கன்று...
அல்ல அல்ல
எங்கள் இன இளங்கன்று
கூட பயமறியாது.

அறிவாய் நீ
இதை விரைவில்...

தற்போதைய
அதிகார போதை
உனக்கு தெளியும்
முன்...

அறிவாய் நீ
இதை விரைவில்...

...........enthisai.......... சொன்னது…

"உன் உடல் வாழ சாத்தியமில்லை
பிஞ்சுகளின் நெஞ்சம் துளைத்த
அணுகுண்டு உன்னை துளைக்க
மாட்டேன் என்றது ஏனோ"
excellent

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உன் கவிதைகளில் மெருகு கூடியிருக்கிறது நண்பா..! ஆக்ரோஷம்..தெறிக்கிறது...!

////இனியாவது யோசி
நான் கடவுள் இல்லையென்று
கடவுளே............... ////

அல்டிமேட் வரிகள்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி