வெள்ளி, 10 டிசம்பர், 2010

தமிழுக்கு கவி ....................


கனியாத உள்ளமெல்லாம்
கனிய வைக்க கவிபடைத்தாய்
பெண்ணடிமை விலங்கொடித்து
அச்சமிலா விடியல் கண்டாய்

சாதி ஒழிய சாட்டைதனை
கரம்பிடித்து சமத்துவம் புகட்டினாயோ
அச்சமில்லை என்றுரைத்து
காட்டாற்று கவி சமைத்து

வெள்ளையனை வெளியேற்ற
வேள்விபல கண்டவரே
தமிழ் பாலூட்டி தரணியெங்கும்
தமிழ் வளர்த்த மீசையாரே

நின் கவிபாடும் உலகெங்கும்
தமிழ் உரிமை போராளியே
உம் பாதங்களை பின்பற்றி
பயணிக்கும் உள்ளமிங்கு

தமிழ் கடவுளான உம்மை
சிரம் தாழ்த்தி கரமுயர்த்தி
வணங்குகிறேன் தினமும்மை
மகா கவியே அருள்புரிவாயோ

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் பிறந்த தினமான இன்று தமிழ் கடவுளாக அவரை வணங்குவோம்

26 கருத்துகள்:

தமிழ்க்காதலன் சொன்னது…

தமிழின் மேல் தணியா தாகம் கொண்ட தோழா... உம்முடைய மொழிப் பற்று இந்த தமிழர்களுக்கு ஒரு முன் மாதிரியாகட்டும்... ஒருவன் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கட்டும். ஆனால் சொந்த மொழியை பேசட்டும்.. எழுதட்டும்... நம் மொழி வளர நாம் செய்யும் பெரும் தொண்டு இது... மிக்க நன்றி.... அடியேனின் வணக்கமான வாழ்த்துக்கள் தமிழ் தீ பாரதிக்கு.....

மோகன்ஜி சொன்னது…

பாரதியை நினைக்காமல் நாளேதும் கடப்பதில்லை.பாரதியை எண்ணும் போதெல்லாம் கவிதையைப் பிறப்பானன்றோ!எதை அவன் பிறந்த நாளென்பீர்?
உன் கவிதை அருமை தினேஷ்!

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃதமிழ் கடவுளான உம்மை
சிரம் தாழ்த்தி கரமுயர்த்தி
வணங்குகிறேன் தினமும்மை
மகா கவியே அருள்புரிவாயோஃஃஃஃஃ

நாமும் தான் சகோதரா...

எனக்குத் தன் சுடு சோறு

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா சொன்னது…

ஐயோ.. என் இணைய இணைப்பு என் சோற்றை பறித்து விட்டதே...

வினோ சொன்னது…

அய்யா அருமையான கவிதை...

Chitra சொன்னது…

தமிழ் கவிக்கு, அருமையான கவிதையே சமர்ப்பணம். வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

நல்கவிதை. பாரதியை வணங்குவோம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

எத்தனை மலர்கள் இந்த பாரதியின் நந்தவனத்திலே அசைகின்றன!

மறக்காது அவன் தமிழுக்குத் தந்த கொடையும் அவனைக் கொண்டாடக் கிளம்பியபடி இருக்கும் கவிதைகளின் பெருக்கும்.

Unknown சொன்னது…

அருமையான கவிதை! :-)

Aathira mullai சொன்னது…

//சுதந்திரப் பயிர் செழிக்க நிதம் நிதம் உரமிட்டான்
கனி குலுங்கும் வேளையிலே காணாது சென்று விட்டான்//

அவன் புகழ் பாடலில் அகம் மகிழ்ந்து.. நல்ல கவி படைத்த இந்தக் கவிக்கு என் சிறப்பு வந்தனம்..

karthikkumar சொன்னது…

தமிழ் கடவுளான உம்மை
சிரம் தாழ்த்தி கரமுயர்த்தி
வணங்குகிறேன் தினமும்மை
மகா கவியே அருள்புரிவாயோ//
சிரம் தாழ்த்தி வணகுகிறேன்

vinu சொன்னது…

presenttu pottaachu pottachu

என்னோட சார்பாவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் ப்ளாக்கில் சொல்லிக்குறேன்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான கவிதை...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

RVS சொன்னது…

தமிழுக்கு கவித்தமிழ் சமைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்!! ;-)
மேலும் மோகன்ஜி பின்னூட்டத்தை வழிமொழிகிறேன். ;-)

sakthi சொன்னது…

மகா கவிக்கு என் வந்தனம்

தமிழ் அமுதன் சொன்னது…

தமிழ் கடவுள் பாரதி ...! உண்மைதான்...!

அருமையான கவிதை..!

மாணவன் சொன்னது…

//தமிழ் கடவுளான உம்மை
சிரம் தாழ்த்தி கரமுயர்த்தி
வணங்குகிறேன் தினமும்மை
மகா கவியே அருள்புரிவாயோ//

வணங்குகிறேன் தமிழ்க் கடவுள் பாரதியை...

அருமையான வரிகள்...

தொடரட்டும் உங்கள் பணி

arasan சொன்னது…

நல்லா இருக்குங்க..

வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

கவிதை அருமை. சூப்பர்.

சிவகுமாரன் சொன்னது…

என்ன ஆச்சர்யம். நானும் தொழுதிருக்கிறேன் என் பதிவில் பாரதியை. நல்ல கவிதைக்கு நன்றி

மிருணா சொன்னது…

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

இளங்கோ சொன்னது…

மகா கவிக்கு, கவிதையாக ஒரு மாலை.
ரசித்தேன். நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமை அருமை வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

தமிழ் கடவுளுக்கு எம் வணக்கங்கள்.
துவண்டு கிடந்த தமிழகத்தை, தமிழ் ஊற்றி , எழுப்பியவனல்லவா?

Unknown சொன்னது…

//நின் கவிபாடும் உலகெங்கும்தமிழ் உரிமை போராளியே உம் பாதங்களை பின்பற்றிபயணிக்கும் உள்ளமிங்கு
தமிழ் கடவுளான உம்மைசிரம் தாழ்த்தி கரமுயர்த்திவணங்குகிறேன் //

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி