புதன், 22 டிசம்பர், 2010

மயான ஆட்சியா..?"


அடிமையாக நாம் இங்கு இல்லை
அரசியல் சாக்கடை புழுக்களா...?!
அன்றைய அரசன் இங்கே
ஆதிக்கம் செய்ததில்லை.

ஆண்டவன் போல நின்று
அநீதிகளை விரட்டினான்.
அந்நியரின் ஆளுமையை
நேர்கொண்டு எதிர்த்தவன்

மன்னரோடு மக்கள் அன்று
கரம் கோர்த்த காலமது.
"மன்னராட்சியில் அன்று மக்களாண்டனர்"
"மக்களாட்சியோ இன்று மயான ஆட்சியா ..?"

அறியாமல் செய்வதுதான் தவறாகுமா..?
தவறை அறிந்தே செய்பவன் தான்
நம் தலைவனாகிறான்...!!
தலையில் தூக்கி ஆடுகிறோம்..!!

தஞ்சம்புக வந்தவனெல்லாம்
வம்சாவழியாக நம்மை ஆள்கிறான்.
சாதி மத பேரைச்சொல்லி
நம்மை பிரித்து கூறு போடுறான்.

டிஸ்கி : தமிழ்த்தென்றல் பதிவில் நண்பர் தமிழ்க்காதலன் எழுதிய அடிமை இந்தியா 2010 எனும் பதிவை படித்து உருவான எம் வரிகள் இது நண்பர்களே

டிஸ்கி 1 : வணக்கம் நண்பர்களே தமிழ்மணத்தில் தேர்தல்ல நிக்க சொன்னாங்க என் ஆதரவா வதம் , கொய்யபட்ட ரோசாவே , உயிர் மட்டும் பேசுதடி இவங்க மூவரும் கவிதை, கலாச்சாரம் ,பெண்கள் பிரச்சனைகள் என்ற தொகுதிகள்ல நிக்கறாங்க உங்கள நம்பி உங்கள் பொன்னான வாக்குகளை தங்கள் பொற்கரங்களால் தமிழ்மணத்தில் அளித்து எமக்கு ஆதரவு தர கோருகிறேன் ( அடப்பாவி உட்ரா போதும் அரசியல் வாதிமாதிரியே பேசுறானே இவன நம்பலாமா )

25 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

கவிதை நடையில் ஆதங்கத்தை கேள்விக் கனைகலாகத் தொடுத்திருக்கும் விதம் சிறப்பு . அருமை பகிர்வுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பட்டைய கெளப்பிட்ட மக்கா....தூள்....ஆக்ரோஷம் வார்த்தைகளில் விளையாடுகிறது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீங்க ரொம்ப கோபக்காரரோ?

karthikkumar சொன்னது…

கோபம் மிக்க வரிகள் பங்கு நல்லா இருக்கு

Arun Prasath சொன்னது…

அனல் தெறிக்குது

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உண்மை .
அருமை .

சிவகுமாரன் சொன்னது…

கை கொடுங்க சார்,

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார் நிஜமான கோவம் சார்......... இப்ப கூட மன்னர் ஆட்ச்சிதான் நடக்குது

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல கோபம்...

Unknown சொன்னது…

அனைவரையும் செட்றடைய வேண்டிய வரிகள்

Unknown சொன்னது…

அனைவரையும் சென்றடைய வேண்டிய வரிகள்

செல்வா சொன்னது…

//"மன்னராட்சி அன்று மக்களாட்சிதான்.
மக்களாட்சி இன்று மயான ஆட்சியா..?"
//

இது நல்லா இருக்கு ..!!

செல்வா சொன்னது…

//தஞ்சம்புக வந்தவனெல்லாம் வம்சாவழியாக நம்மை ஆள்கிறான். சாதி மத பேரைச்சொல்லி நம்மை பிரித்து கூறு போடுறான்.///

செல்வா சொன்னது…

////உங்கள் பொன்னான வாக்குகளை தங்கள் பொற்கரங்களால் தமிழ்மணத்தில் அளித்து எமக்கு ஆதரவு தர கோருகிறேன்///

ஹி ஹி ஹி .. நல்ல அரசியல் ..!

Unknown சொன்னது…

முதல் பாராட்டு, படம் பொருத்தமாக தெரிவு செய்தற்காக..

Unknown சொன்னது…

//தஞ்சம்புக வந்தவனெல்லாம் வம்சாவழியாக நம்மை ஆள்கிறான்//
ரசித்த வரிகள்..

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

வதம் என்றால் தினேஷ்...
தினேஷ் என்றால் வதம்

Unknown சொன்னது…

//"மன்னராட்சி அன்று மக்களாட்சிதான்.
இன்று மயான ஆட்சியா..?"//

அழகான சொல்லாடல்கள், ஆனால் பொருளில் கொஞ்சம் இடறுகிறது.

தமிழ்க்காதலன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தமிழ்க்காதலன் சொன்னது…

என் இனிய அன்பு நண்பருக்கு, உங்களின் அன்புக்கு மிக்க நன்றிகள். நமது தேசத்தை சரி செய்ய வேண்டிய கடமை நம்ம ஒவ்வொருத்தருக்கும் இருக்கு. நான் என்னோட பங்கை செய்கிறேன். நீங்க உங்கள் பங்கை செய்யுங்கள். இப்படி எல்லாரும் கடமையை செஞ்சா நம்ம நாடு தானா சரியாகும்... சிந்திப்போம். சேர்ந்து செயல்படுவோம்.

Unknown சொன்னது…

பாராட்டுக்கள் ...

சென்னை பித்தன் சொன்னது…

ரௌத்திரம் பழகுகிறீர்களோ?
நன்று.

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு

பெயரில்லா சொன்னது…

படம் பயங்கரம்

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி