சனி, 11 டிசம்பர், 2010

நிம்மதியின்றி ........

மனம் கனக்கிறது
சுட்டிக்காட்டத் தவறை
தடம்புரளும் பாதை
மனம் ஏற்க மறுக்கிறது
நான் ஊதியம் பெரும்
தொழில் கூடமாயிற்றே

தவறான முறையை
பணியில் மேற்கொண்டால்
பரிதவிப்பது யாரடா
உயரதிகாரி நீ உந்தன்
தவறை எதிர்த்து கேள்வி
தொடுக்கிறேன் வேள்வியாக

வேலைவிட்டு தூக்குவாய்
வேறென்ன செய்வாய் நீ
விபரீதமான விளையாட்டு
விடைகூற முடியா உனக்கு
வினையாகும் தொழில் நமக்கு
விளையாட்டை நிறுத்து

குளிர்சாதன அறையிலே
குளிர்காயும் உமக்கு
அறிந்திருக்க வாய்ப்பில்லை
வியர்வையின் துளிகள்
போராடும் உள்ளமிங்கு
பொறுப்புடனே கேட்கிறேன்
மறுப்பேதும் சொல்லாமல் - சொல்

ஊதியம் உழைப்பிற்கா -அல்ல
பிழைப்பு ஊதியத்திற்கா
எனக்கும் இழப்பில்லை
உனக்கும் இழப்பில்லை
தொழிற்கூடம் ஏற்கவிருக்கும்
பெருந்தோல்வியை எண்ணி
என் மனம் மட்டும் ஏனோ
நிம்மதியின்றி அலைகிறது

டிஸ்கி : என்ன மக்காஸ் மேல பாக்குறிங்க அதுவும் நம்ம பொழப்புதான் சரி சரி மறக்காமா வோட்டு போடுங்க நண்பர்களே

17 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

vadai

karthikkumar சொன்னது…

ஊதியம் உழைப்பிற்க்கா -அல்ல
பிழைப்பு ஊதியத்திற்க்கா///
கலக்கீட்டீங்க பங்கு அருமையான வரிகள்

karthikkumar சொன்னது…

உங்க கடைல எப்போதும் கவிதைதானா?

தினேஷ்குமார் சொன்னது…

karthikkumar said...
உங்க கடைல எப்போதும் கவிதைதானா?

என்ன பங்கு செய்யுறது நம்ம பொழப்பு இழப்ப சந்திக்கும் போதெல்லாம் சிந்திக்குதே மனது

பனித்துளி சங்கர் சொன்னது…

////ஊதியம் உழைப்பிற்க்கா -அல்ல
பிழைப்பு ஊதியத்திற்க்கா///


சிந்திக்கவேண்டிய வருத்தம் கலந்த வார்த்தைகள்தான் . பகிர்வுக்கு நன்றி

வைகை சொன்னது…

என்ன பங்கு பொங்கிட்டிக!!!! ஆனாலும் நாயந்தான்!!

அன்பரசன் சொன்னது…

//dineshkumar said...

karthikkumar said...
உங்க கடைல எப்போதும் கவிதைதானா?

என்ன பங்கு செய்யுறது நம்ம பொழப்பு இழப்ப சந்திக்கும் போதெல்லாம் சிந்திக்குதே மனது//

:)

Chitra சொன்னது…

ஊதியம் உழைப்பிற்க்கா -அல்ல
பிழைப்பு ஊதியத்திற்க்கா


....ம்ம்ம்ம்...... யோசிக்க வைக்கும் கேள்விதான்.

ம.தி.சுதா சொன்னது…

////வேலைவிட்டு தூக்குவாய்
வேறென்ன செய்வாய் நீ////

துணிந்தவனக்கு..

அந்த வசனத்தை நினைவு படத்தியமைக்கு மிக்க நன்றி...

Thoduvanam சொன்னது…

நண்பர் தினேஷ்குமார் அவர்களுக்கு தங்களின் மன உளைச்சல் புரிகிறது.பக்குவமாய் எடுத்து இயம்பி வீரத்தை விட விவேகமாய் நடப்பதே சிறந்தது.தங்களின் ஆதங்கம் கண்டு எனக்குத் தோன்றியதை ஒரு பகிர்வாய் இட எண்ணுகிறேன் ..

Unknown சொன்னது…

துவக்க வரிகளில் சிறு குழப்பம். நல்கவிதை.

Philosophy Prabhakaran சொன்னது…

விரக்தியில விளைந்த கவிதை போலும்...

பெயரில்லா சொன்னது…

ஊதியம் உழைப்பிற்க்கா -அல்ல
பிழைப்பு ஊதியத்திற்க்கா


....ம்ம்ம்ம்...... யோசிக்க வைக்கும் கேள்வி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

ஊதியம் உழைப்பிற்க்கா -அல்ல
பிழைப்பு ஊதியத்திற்க்கா
அருமையான வரிகள்........

'பரிவை' சே.குமார் சொன்னது…

விரக்தியில் விளைந்த கவிதை !?

Unknown சொன்னது…

//வேலைவிட்டு தூக்குவாய்
வேறென்ன செய்வாய் நீ//
நல்ல வரிகள் தினேஷ்.
துணிந்தவனின் மனத்தினை வெளிப்படுகிறது..

ஹேமா சொன்னது…

ம்ம்...நொந்துபோய் எழுதியிருக்கீங்க தினேஸ்.சொல்ல ஏதுமில்லை.
எல்லாமே சொல்லியிருக்கீங்க நீங்களே !

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி