புதன், 19 நவம்பர், 2014

மணிகண்டன் மாலை ....!

வானதிர வாரான் வனப்புலி வாகனம்மேல்
                    தானதிரு தாயுமான வன்புதல்வன் பூலோக
நாதனவன் தானறிந்த நாடகமாய் காணவே
                    பாதபலன் தீர்ப்பவனே பாகமென வேர்பின்னி
தேகநலன் காப்பவனே தேடநில வானவனே
                     தாகமெழில் கூட்டிட தன்னைக் கலவுவான்
ஏக்கத்தை சொல்லில் சிதறுவான் போக்கிலே
                     நோக்குக எங்கும் உலவுவான் காத்திருக்க

கார்த்திகை கோலமே காணவழி தோறுமே
                      நேர்த்தியை ஓதுமே நேயர்வழி தேறுமே
சார்த்திய போதுமே சாந்தமுனை ஆளுமே
                     வார்த்தையுள் காணவே கோர்த்த வடிவமே
பார்பெரும் கோடியை கொண்ட குடியாகி
                     யார்தருவா ரென்றெண்ண மாயை உருவமே
கார்தருதே நீர்பொழிவை நான்ஒ டித்திருமே 
                    தேர்கொணர் வானேயுன் மையச் சொரூபம்

காட்டுவழி பாதையிலே கால்கடத்தி வர்றோமே
                    காட்டும் வழிவாழ்வி லேகாணும் காலத்தே
கோட்டை யினைநாடி என்னைதேக்க ஆதாரக்
                    கூட்டை விடமாயம் உள்ளதெரு சேதமாய்
நாட்டில் நடவுதே நான்கெட்ட கேடுமங்கு
                    காட்டில் உலவுவ வீனங்கு வாஎங்கும்
சட்டம் பெரும்பாகம் சூழ்ச்சியிலே மாயுது
                   பட்டம் உருள்வதை கண்டேனும் தீர்க்கவா

                        

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


சாமியே சரணம் ஐயப்பா
நல்லதொரு பக்திச் சுவைக்கவி(தை)
வாழ்த்துக்கள் நண்பா,,,,

அரசன் சே சொன்னது…

அயல் நாட்டில் இருந்து அழகிய கவிதை மணிகண்டனுக்கு ,, நன்று அண்ணே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கார்த்திகை கோலமே காணவழி தோறுமே
நேர்த்தியை ஓதுமே நேயர்வழி தேறுமே
சார்த்திய போதுமே சாந்தமுனை ஆளுமே


அழகான ஆக்கம்.

ஊமைக்கனவுகள். சொன்னது…

அய்யா,
தாங்கள் எழுதியதா?
அருமை!!
நாங்களல்லவா தங்களிடம் தமிழ் கற்க வரவேண்டும்.!
விருத்தப்பாக்களெல்லாம் இப்படி கலக்கும் உங்களுக்கென் உளப்பூர்வமான வாழ்த்துகள்!!!!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி