புதன், 5 நவம்பர், 2014

வேண்டுவன தந்துவிட்டால் ...!

யதார்தமாய் கரையொதுங்கி பழக வேண்டும்
          நிவர்த்தியாய் நீர்த்தளும்ப ரகசியம் வேண்டும்
சுதாரித்து சுகமதுவை தேக்கவே வேண்டும்
          பதார்த்தமே பலவகையாம் பசிக்கருசி வேண்டும்
நிதானித்து பெறும்பலவும் சேர்ப்பினில் வேண்டும் 
          பணதாகம் பிணக்கதுவும் தீர்க்கவே வேண்டும்
பகல்கனவு பயிலுமிரவும் பக்கமென வேண்டும்
          பசித்திருக்க பாக்யமாய் பிரசாதம் வேண்டும்

பணிவோடு உன்பாதம் சரணடைய வேண்டும் 
          கனிவோடு காக்கையும் இனமாக வேண்டும்
கற்றாரை போற்றியெங்கும் பார்பழக வேண்டும்
          உற்றாராய் உணர்வறிந்து தானெரிய வேண்டும்
நிகரேதும் சொல்லாது தனியனாக வேண்டும் 
          கடலாடும் காட்சிநிறை ஆட்சியே வேண்டும்
உடன்பட்டே உருமரணம் உண்டாக வேண்டும் 
          கடன்பட்ட கார்யமாய் கரையொதுங்க வேண்டும் 

படுத்துறங்க பலகாலம் நித்திரை வேண்டும்
          உடுத்திறங்க உடைதாங்கி காப்புகள் வேண்டும்
நடுவரங்கம் சலித்துறங்கா காட்சியே வேண்டும்
          தடுவனவும் நடுவனவும் தழைத்தெழ வேண்டும்
கரம்தொட்டு சிரம்தொட்டு மழைத்தூற வேண்டும்
          கருநாக குடைக்குள்ளேன் காரணம் வேண்டும்
பயிராகி வயிறாரும் உணவாகிட வேண்டும்
          இல்லார்க்கும் எடுத்திரைக்கும் உரிமை வேண்டும்

வேண்டுவன தந்துவிட்டால் உனைதான் யாரும் 
          தீண்டாத சிற்பமென சொற்ப்பமாய் மொய்ப்பர்
வேண்டாத சொல்லில்லை உன்னை நோக்கிவர
          உன்மெய்யும் சேர்ந்ததுவே கொண்டாடும் உயர்
திண்டாட்டம் வேண்டாவே செல்லாதிரு கணக்காய்
          மெல்லோட்டம் போட்டிடு வல்லிய திருவாய்
தென்றலென தொட்டுப்போக உத்தரவிடு வரிய
          வந்தவனாய் சொல்லிவிடு வயக்காடு பொழிக்க
          


5 கருத்துகள்:

Ramani S சொன்னது…


கருத்தும் சொல்லிப்போனவிதமும்
மிக மிக அருமை
மிகக் குறிப்பாக...
வேண்டுவன தந்துவிட்டால்..
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கற்றாரை போற்றியெங்கும் பார்பழக வேண்டும்
உற்றாராய் உணர்வறிந்து தானெரிய வேண்டும்
நிகரேதும் சொல்லாது தனியனாக வேண்டும்
கடலாடும் காட்சிநிறை ஆட்சியே வேண்டும்

அருமையான வரங்கள்...

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

ஊமைக்கனவுகள். சொன்னது…

எண்சீர்க்கழிநெடிலடி விருத்தம்!!!!
இன்னும் எத்தனை பேர் அய்யா இப்படி மரபில் கலக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்???!!
பாடல்கள் அனைத்தும் அருமை!
நடையும் நடைப்பழக்கம்!
நன்றி

Rathnavel Natarajan சொன்னது…

வேண்டுவன தந்துவிட்டால் ...! = Mohandoss DineshKumar = அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு Mohandoss DineshKumar

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி