ஞாயிறு, 23 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி....

 அனைவருக்கும் வணக்கம் என் மீது கொண்ட அன்பால் அண்ணன் மனசு குமார்  அவர்கள் கனவில் வந்த காந்தி தொடுத்த கேள்விகளுக்கு தானும் பதிலெழுதி தன்னையும் எழுத அழைத்திருந்தார் கால ஓட்டம் சமயம் சரிவர கிட்டுவதில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் ஆடு மாடு வேண்டுமானாலும் மேய்த்து விடலாம் இந்த மனிதர்களை மேய்ப்பது பெரும் வேலை அய்யா அதுவும் பாகிஸ்தானி, பஞ்சாப் சிங் முதல் கொண்டு அனைத்திந்தியா எனும் போது தலை கொஞ்சம் சுத்தும் தான் முன்னூறு நானூறு பேர்களை மேய்க்கவே இப்படி புலம்புறேன் என்றால் சரிவாங்க நேரா காந்தி தாத்தா கேட்ட கேள்விக்குள்ள போவோம் ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துப்பா.....
1. மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?
         மறுபிறவி 
மனம் திருந்துமா விருந்தும் அருந்துமா 
நிறைந்த மரணமும் அறிந்த தருணத்தே
அடைபட்ட கூண்டினை திறக்கும் சாவியாய்
பாவியின் ஆவி கிடக்கட்டும் பரிதாபம்
ஏனென்ற நிலை மாற நாளையென் பிறப்பு
உதிக்கட்டும் ஆதவன் கதிர் விழுமிடத்தே

(அண்ணல் : அய்யா குமாரு எங்கய்யா இருக்க முதல் கேள்வியிலே மூச்சு முட்டுதுய்யா )

2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்..?
             நான் ஆட்சியாள வேண்டுமா
சாட்சிகள் தூண்டிய காட்சியடி அன்பின்
ஆட்சியை கொணர  தேர்வெழுதி பன்பின்
பாலனாய் பணிவின் குணங்கொடடி தேரோட்ட
பாராட்டு வேண்டாம் பணியை தொடர்வேன்
முழுமதியே சாதிக்கும் ஆசையை ஆளனும்
பிள்ளை அவனில் சாதியின் வாசமேன்
வீசனும் சொல்லேன் களைந்தெரிவேன் 
அரசாலும் ஏட்டிலே நாட்டிலே பஞ்சம்
யாரங்கு தஞ்சம் தவிப்புக்கே எங்கும்
முதலான உரிமம் அழைப்புக்கு தயங்காதே
இதுவென் ஆட்சி இளவல்களே என்கட்சி

(அண்ணல் :  புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாம தெளிஞ்ச மாதிரியும் இருக்கு தம்பி )

3. இதற்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?
அயலுக்கும் புயலாவேன் கனல்கக்கும் தீயாய்
சுழலுக்குள் சூரையாடவே சூத்திரங்கள் தேர்வாய்
கொண்ட சாத்தியமாகும் வாழ்வின்வழி அமைய
மக்களும் புயலாகுவர் அயலானை வெல்ல
(அண்ண்ல் : ம்ம்ம்ம்)

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
மதியாத பிள்ளைக்கு புதிதாக தண்டனை
தனியேதான் தவியேன் தனக்கு தான்துணை
என்றாகி போகுமென் ஆட்சியில் அஞ்சுவர்
முதியோரை தவிப்பில் விட அருஞ்சுவர்
அரணாக பெற்ற பிள்ளைகளே அமைவர்

(அண்ணல் : சரிதான் )

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
காட்சியெனும் கூண்டை கண்முன் கொடுத்து
சாட்சியில்லை எனும் பேதத்தை உடைப்பேன்
மக்கள் சாட்சியெனும் சொல்லே மனமெல்லாம்
உதயமாகும் மகேசனும் சாட்சியாவன் 

(அண்ணல் : ஆகா ஆகா )

6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?
மக்களே தீர்ப்பர் நீதிக்குக் வேலியாய்
அவரே அமைப்பர் அகங்காரம் கொண்டால்
ஆணவம் ஒழிப்பேன் அதிலெது வேண்டுமோ
அவரவர் விருப்பம் அனைவர்க்கும்
(அண்ணல் : எலே நீ என்ன தான் சொல்ல வர்ற எதோ சொல்ற புரிஞ்சா சரி )

7. விஞ்ஞானிகளுக்கு என்று ஏதும் இருக்கின்றதா?
இருக்கு இருக்கு 
அங்கொன்றும் இங்கொன்றும் வேண்டாம்
ஆதி பரமசிவன் போலே நெற்றிக்கண்
திறக்க வழிசெய்வேன் தலைக்கணம் அல்ல
என்தேவா புத்திக்குள் புதைந்ததை உருக்கொணரவே
கருவாக்கம் காரியம் உனக்கறியும் 

(அண்ணல் : அடேய் அடேய் என்னடா சொல்ற )

8. இதை - உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?
சமம் என்பதை புதைத்துவிட்டு மனதில்
இவன் உண்டதும் கண்டது இனியவன் 
உண்பதும் அவ்வழி கொண்டதென ஆகும்
சாசனம் தன்னை தான் ஆளும் வழியெங்கும்

(அண்ணல் : இவன் இங்க இருக்க வேண்டியவனே இல்லை )
9. மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக?
பதுமையை போலிங்கு யாருமில்லை
பதுங்குவதும் பாய்வதும் தேவையில்லை
பலவகையானவர் பக்குவமாகி இனமெனும்
சாதியை களைந்துவிட்டேன்

(அண்ணல் : நல்லாத் தான்யே பேசுர நடைமுறைக்கு ஆகுமா)

10. எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டும்? -  என இறைவன் கேட்டால்..?
அதிகாலை மலர்களாய் பிறந்து 
மனதினை கவர்ந்து மாலையாய் 
மகேசன் மனதிலமர்ந்து மாலையில்
இறப்பென்ப தறியாது துறக்கனும் உயிர்

(அண்ணல் : ஏதோ நான் கேட்ட கேள்விக்கு எனக்கே புரியாம பதிலை சொல்லிட்ட இவிங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் )

அனைவருக்கும் திரும்ப ஒரு முறை வணக்கம் வச்சுட்டேன் ஏதோ மனசுல பட்டதை கொட்டிட்டேன் எல்லாம் உங்கள் வசமே உலகு வேலைபளு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது ஏதேனும் தவறுகள் இருப்பின் அடியேனை மன்னிக்கவும் என்றும் உங்கள் அபிமான


 மோ.தினேஷ்குமார்

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நண்பரே,,, அருமையாக கவிதை வாசித்து மஹாத்மாவே குழம்பும்படி வச்சுட்டீங்க... ஸூப்பர்.

-'பரிவை' சே.குமார் சொன்னது…

எப்பா தினேஷா...
இனிமே தொடர்பதிவுக்கு கூப்பிடுவியா.. கூப்பிடுவியான்னு கேக்குற மாதிரி இருக்கு...
நல்லாத்தான் இருக்கு இதுவும்...
கவிஞன்யா... கவிஞன்யா...

இனி காந்தி கனவுல வருவாருங்கிறே...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி