இயக்குகிறாய் ஏர்பூட்டி தன்னை உழுதாளும்
எண்ணம் விதையாகி வண்ணம் உருவாகும்
கண்ணன் உதித்தான் காண்
கடலை கடந்தோட காணும் அலைபோல்
விடலை படர்ந்தாட சூழ்ந்த மனம்போல்
இளகும் இளம்பாகி னிக்கும் இனம்போல்
விளகும் இருளே சுயம்
மிளிரும் குணமே மனதுன் துணையே
துளிரும் இளமே இனதுன் கணையே
கடவும் உளிலே கருத்தும் இணையேன்
நடவும் தெளிவாய் கட
என்றும் உனதான கண்ணன் குழலூத
கன்றும் உறவாட கண்ணம் இழைத்து
பிறந்த புதுபாலன் அண்ணல் உயர்வாய்
திறந்த மனதோடு எண்
5 கருத்துகள்:
குழலூதும் கண்ணன் இணைபிரியான் உள்ளத்தே
குழலூதி மயக்கிக்கிடக்க வைப்பான் உள்ளத்தே
குழலோசை காணத்தில் பறக்குமனமது உள்ளதே
குழைவான் குழலின் குரல்
கண்ணனின் குழலோடு
கண்ணக் கவித்தேன்
கண்டு ரசித்தேன்
அருமை நண்பரே....
கண்ணன் குழலூத
கன்றும் உறவாட கண்ணம் இழைத்து
பிறந்த புதுபாலன் அண்ணல் உயர்வாய்
திறந்த மனதோடு எண்
சிறப்பான பகிர்வுகள்..
சிறப்பான கவிதை...
வாழ்த்துக்கள்
வணக்கம்...
தங்களை ஒரு தொடர்பதிவில் மாட்டி விட்டிருக்கேன்... கோபப்படாதீங்க...
நேரம் இருக்கும் போது எழுதுங்க....
விவரம் அறிய...
http://vayalaan.blogspot.com/2014/11/blog-post_17.html
கருத்துரையிடுக