எத்தனை கால் யார் இவனோ
அத்தனை ஆளுபவன் மகனோ
சித்தனை போல் சத்தம்இலா
சுத்தனை மேலுடுப்பான்
அத்தனை ஆளுபவன் மகனோ
சித்தனை போல் சத்தம்இலா
சுத்தனை மேலுடுப்பான்
தத்துவமே தனித்துவமாய் சிந்தை
புகுவனமாய் என்றும் புதுயுகமாய்
நித்திரை நீந்தி பொழுதடைவான்
சத்திரமே சமய சித்திரமே
புத்தி புதுவான் பக்தன் புகழ்வான்
சக்தி எனுவான் சடமுறைவான்
நிலை யுணர்வான் தனையுழல்வான்
சிலை யெனுவான் தனியே
சக்தி எனுவான் சடமுறைவான்
நிலை யுணர்வான் தனையுழல்வான்
சிலை யெனுவான் தனியே
தத்தளிப்பான் தானே முத்தெடுப்பான்
கனிய கவர்ந்திடுவான் கானலிலே
தாகம் தீர்வான் காணும் மயிலேறி
கனவடைப்பான் காக்க
கனிய கவர்ந்திடுவான் கானலிலே
தாகம் தீர்வான் காணும் மயிலேறி
கனவடைப்பான் காக்க
காலமெனும் தேரிலேறி பார்சுற்றி
ஊர்சுற்றி உலகளப்பான் நொடியில்
உடனிருப்பான் மயமெனும் மாயை
மடியில் தவழும் மனமோ..
4 கருத்துகள்:
கவிதை அருமை நண்பரே,,, வாழ்த்துகள்.
காலமெனும் தேரிலேறி பார்சுற்றி
ஊர்சுற்றி உலகளப்பான் நொடியில்
உடனிருப்பான் மயமெனும் மாயை
மடியில் தவழும் மனமோ..
அப்படிப் போடு... கலக்கல்...
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
மாயம் மிகவாம் மனதின் செயல்களே!
காயம் வருத்திடாமற் காண்!
சிறந்த சிந்தனை! அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
கருத்துரையிடுக