வெள்ளி, 14 அக்டோபர், 2011

வாழ்த்தி வழி கூறுங்கள் ...!


நினைவுகள் நீந்தி செல்கின்றன கடந்த
காலங்களை நோக்கி வழியெல்லாம்
நில்லாச் சுடராய் தாய்மடி தவழ்ந்து 
தந்தைக் கரம் பற்றிய மழலையாய்   

ஆட்டுவித்தோர் காட்டுவித்த பாதைகளில் 
பயணிக்க கொடுத்தோர் கிடைப்பினில்
நெடுந்தொலைவு கடந்தும் நீளும்
பாதைகள் முற்றமிலா 

கரை யேறுகனம் நழுவ முகமறியா
எனைத் தழுவும் காட்சிகளின் ஆட்சிதனில் 
நிறைந்தோனைத் தொழுது இடைநாளின் 
கடைப்படி மறையுந் தருணம் 

அன்புள்ளங்கள் எம்மைச் சூழ்ந்து வர 
மேற்ப்படியறிய தொடரும் பயணத் துவத்தில்
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இச்சிறியவனை
வாழ்த்தி வழி கூறுங்கள் 

திங்கள், 3 அக்டோபர், 2011

"பிறவித் தேடல்"


காலை கனியும் அந்திமக் கதிரில்
மலர்சூடும் மாலை மஞ்சள் வெயில்
வழித்தேடும் விழிதனில் வினவா அழைப்பு
விடையில்லா பிரிவா புரியும்...?

இரவின் உறக்கம் இமைகளோ மறுக்கும்
கனவினில் பறக்கும் மனமெல்லாம் இனிக்கும்
தண்ணீர் தகிக்கும் அடுப்பனல் குளிரும்
தீஞ்சுடர் தாங்கும் கரங்கள்...!

உள்ளில் பிறக்கும் உணர்வில்லா வலிக்கும்
உண்மை புரியா பிரியம் ஈர்க்கும்
பெற்றவர் எதிர்க்க அம்புகள் படரும்
அன்பினில் உணராச் சுருக்கு.

இருமனச் சங்கமம் இறைதனில் வகுத்தது
பிழைதனில் பயணம் ஏன்? பிறவா
பிறவியும் அடங்கும் பயனில்லா பாதைதனில்
ஏற்றாச் சுடரினில் தொடரும் தேடல்.


கலியுகம்: - சமயங்கள் வேலை நேரங்களில் கழிவதால் அன்பர்களுக்காக ஒரு மீள் 

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி