சனி, 15 மார்ச், 2014

அவன் வரைந்த கோலம் 3 ...!உரியவன் உள்புக உன்னத மாகும் 
வசியம் தவசிகள் வேண்ட அவசியம்
ஆகுத பதம் பயிரிடுவான் மேற்கோள்
வியப்பில் அமிழவே செய்தது

தவமாய் தவமிருந்தும் தாராத செல்வம்
கனிவாய் உணர்வறிந்தும் ஊர்வ தறிந்தும்
செயல்வழுக்கா செய்நெறி தாங்குவச ரீர
சிறையில் உறைவான் இறைவன்

குழந்தை குணமே குமரன் நிலையாகி
வென்றது குற்றம் இழைக்கா உயர்வு
அகண்டு விரிந்த விடியலில் சூழும்
சுழற்சியின் ஆக்கம் அகமதி தீர்க்கம்

அவனுடன் உந்த உயிரின் மதிப்பும்
உழவனின் சேர்ப்பும் உவமை கலந்து
கவர்ந்த விழியே வழிகாட்டி செல்ல
சொலவொனா சோலை மயில்

குறுக்கும் நெடுக்கும் நடக்கும் எழிலெனும்
தோற்றம் தனியொரு மதியாகி காணத்
திகழ வரவும் செலவும் நிறைவில்
பருக உழவும் கரம் உணர்ந்ததில்

உள்ளம் இரண்டால் உடையவன் உள்ளான்
இருவரைக் கொண்டே இயங்கும் எமதும்
இயல்பிது நீரில்லா நீந்த இயலும்
எதிரும் புதிரும் அமரும் கருக்கொண்டே...

-மோ.தினேஷ்குமார்-

புதன், 12 மார்ச், 2014

அவன் வரைந்த கோலம் 2 ...!இடைபுகுந்த வில்லாய் குமரன் அழைக்க
சுடும் பார்வையொன்றை வீச நினைக்க
சினம் அவிழ்ந்த முகம் சாந்தமாய்
அந்தி பருவத்துள் எட்டி நுழைய

கணை தொடுக்க குமரன் விடையவிழ்த்தான்
பாலன் இணையாய் இயல்பாய் இருவரின்
தேடல் இனியதும் மோதல் கொடியதும்
வெற்றி புதியதும் தோல்வி உரியதுமாய்

புகட்ட புகட்ட தெகிட்டா இனிப்பது
இந்திர தந்திரம் மந்திர எந்திரம்
சிந்திய வெண்பனி தீண்டிடும் புல்வெளி
அப்பன் அளிக்க பருகினான் உள்ளில்

சொல்லால் அமைக்க இயலுமெல்லாம் இல்லா
இயக்கமேது உந்திய கேள்வியில் ஊர்ந்தது
ஊற்றெடுக்க பாக்யம் வியந்து அயர்ந்தால்
புரிவதெது பூசிய வடு

புன்னகை யொன்றை விடுத்து புதிராய்
பதிய புதிய பிரகாசம் ஈன்றவளுள்
வந்தவன் கொண்டது வென்றதெது மில்லா
வகுத்தது வாழ்வழி சேர்க்கும் மிகையேமிகை

பேச்சை தொடர்ந்து அவன் அறியா
புகுந்தான் ஒருவன் விழிதப்ப நேரும்
வழிதப்ப வேண்டா இவனுள் குடியாகி
கூடு விழிக்கும் குணமாய் ...

செவ்வாய், 11 மார்ச், 2014

அவன் வரைந்த கோலம் 1...!காலைக் கதிரவன் சுடர் வீச
சுகந்த மனம் சுமந்த வரவே
எனினும் கனியா கனிகள் பலவே
அயர்ந்த கிரக்கம் அடைந்தே

புலப்படும் நாளின் திகைப்பு அறியா
அகப்படும் ஆளுமை சூழ்ந்த உலகம்
சுயமிலா சூத்திரம் தங்கிய மாயை
மழலையை சூழ்ந்த வசந்தம்

காலஓட்டம் காற்றில் கரைய கதையை
துவக்கும் சமயம் அகப்பட ஆதவன்
சுற்றமெங்கும் சூழ அமைதியான நாடகம்
அரங்கேற ஆடுபவன் ஆட்டம்

திருக்குமரன் அன்பாய் குமரன் எனவே
குழுமிய வட்டத்துள் வாலிபம் எட்டும்
வயதுதான் கிட்டகிட்ட கீழ்வானம் செல்ல
நடைபோடும் நாயகன் ஆட்சி

களத்தமேடு காதல் உருவே சமைத்த
உணவும் சகிதமாய் அள்ளி பகிர்ந்தால்
பாக்யம் வயறு நிரம்ப சிறிதுறக்கம்
தட்ட விழிமூடிய வேலை

விளைந்த பயிர் முளைந்த தடம்
களைந்த கிளை கவர்ந்த வரப்புநீர்
ஓட்டம் வரம்பில்லா பாயும் புலியென
அர்த்தம் அரிதாரம் பூசியது

அறிந்தானா ஆரம்பம் ஆகாயம் நீயென்றான்
அதற்கென்ன ஆதாரம் என்றால் பாக்யம்
இடைபிடித்து இன்பவலை வீச அருகெதிரே
ஓடிவந்த குமரன் அப்பாவை அழைத்தான்...

- மோ.தினேஷ்குமார்-

திங்கள், 10 மார்ச், 2014

அவன் வரைந்த கோலம்...!மிச்சம் எதுமிலா அச்சம் அதுமிலா
சொச்சம் உருண்டது உண்டாக வாளும்
உணரும் திருநாள் ஒருநாள் அகத்துள்
அழுக்கை அகற்றப் புகுந்தான்

அனைத்தும் மறந்தான் அணைத்து மகிழ்ந்தான்
மனையாளை அற்றதும் மற்றதும் எட்டியே
வேடிக்கை பாடி புகழும் இளவலை
ஈன்ற பொழுது மழையிடி மின்னல்

துள்ளல் எனலாம் துவளும் உடையாள்
அருகில் அவன்பால் அழைக்க அழுகை
பெருக இருக இணைந்தாள் கழன்றோடி
கன்றும் பசுவும் இன்பமது ஊற்றாய்

இனியவன் பிறவி இயற்றும் அருவி
புகழும் மருவி இழைக்கும் கருவி
இனமும் மனமும் கனவின் குருவி
இயற்கை அழகும் இனிதாய் மலரும்

அயர்ந்தும் உறங்குவான் ஆணவம் கூட்டுவான்
அன்பின் உயிரவன் அர்த்தச் சிலையுத்தம்
ஆதியென் பூர்வகுடி பாதியென் பாக்யவிதி
ஆதவன் தூதுவன் ஆண்டவன் சேவகன்

அவனாடும் ஆட்டம் அடங்காத கூத்து
அறியாத பாட்டும் அவனேதும் சேர்த்து
அழகாக கட்டி அளவாட்டம் போடும்
அரிதார சுட்டி அவன்பெயரோ ....

அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம்...!
புதிதாக எழுத்தை துவக்குகிறேன் கவிதை வடிவில் ஒரு கற்பனை கதையை பலமும் வலமும் தாங்களே என்னையும் கரம்பிடித்து அழைத்துச் செல்லுங்கள் நலமுடன்..

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி