செவ்வாய், 30 டிசம்பர், 2014

நேற்று பொருந்த நிறுத்த இயலாமல் ...!

கணித்த காரணம் கர்மம் கடவுவ
ஜனித்த காரணம் மர்மம் வினவுவ
பணித்த காரியம் தர்மம் நிலவவே
கனிந்து காலமாய் தரும்
சலனம் சரணம் சன்யாசன் சன்னதி
சங்கல்ப சாகசம் சமயோசன் நிம்மதி
சந்தர்ப்பம் சமயம் சந்திக்க தன்விதி
சாதுர்யம் சங்கடம் தீர்
என்னது ஏனது எளிதாக கண்டிரு
தன்னது தானது தெளிவாக கண்டுரு
நின்னது வீனது நிதானம் கொண்டிரு
சொன்னது சூடும் சுடர்

கசந்து கலந்தாய் களத்தில் விளைந்தாய்
அசந்த சலங்கை அளந்தபெருங் காலம்
வசந்த மலராய் வளமுடன் வாழ்வே
வசம்தான் சிலராய் பலர்
நேற்று பொருந்த நிறுத்த இயலாத
ஊற்றாய் சருக்கி சடலமாட சங்கதி
சேற்றில் முளைத்தசெந் தாமரை பூவாட
சோற்றை பிசைந்தது கரம்
நாளை நகைத்து நடனமாட தானாக
வேளை திகைத்து கடன்பட வீனாக
சோலை உடன்பட காதல் சடுகுடு
சாலை மணந்த சடலம்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சோற்றை பார்க்கும் கடைசி மனிதன் - நானும்


பசிக்க சோறு
தேடியே இனி
சவமாகு - காலம்

வேறென்ன நீ
செய்வாய்
வெறுமனே - எண்ணம்

காப்பேன் கடமை
என்றான்
மீத்தேன் சதியில் - இன்று

சோதனை தானே
சோற்றை பார்க்கும்
கடைசி மனிதன் - நானும்

வேறென்ன நான் செய்ய
வேர் என்ன தான் செய்ய
பசித்தால் புசிக்க மற

இல்லையேல் இன்றேனும்
போர்த் தொழில் பழகு
போர்க்களம் நிறுவும்

அரிசிக்கு கடைசி
பாலம் நீயென்றே
காலம் வரையும்

ஆகினும் காணாதே வம்சம்
செத்துமடிவது உறுதியே அம்சம்
களமிறங்கி களையெடுத்து கொல்

அல்ல 

ஐம்பது ரூபா அரிசி
ஐநூறாகிடும் அன்றை
காண வா நின்று.....

சனி, 13 டிசம்பர், 2014

வெறுமனே....!


வெறுமனே வாழ்வை
கடந்துவிட சித்தம்
சந்தையில் சிதறிவிடா
எண்ணம் கொள்ளுதே
மொத்தம் சங்கட
சிக்கலில்

சித்திரம் பழகியும் 
சத்திரம் கொள்வதில்லை
கடுகு வெட்டுபட
காரம் குறையுமா
காரண சூரணம்
கையமர்ந்தே

கங்கை முடிசூடி
கந்தன் அப்பனாகி
நின்றெலாம் ஆள்வ
நிலை கொள்ள 
நிசம் சந்தர்ப்பம் 
வசமே

நின்றாலும் நீடு
சென்றாலும் ஏடு
வென்றாலும் பாடு
இருந்தெவரும் 
கண்டதில்லை 
அன்றில் ஒன்றும்

அறிந்தும் அடையாது
புரிந்தும் படியாது 
பாலம் தடைபட்ட
பாட்டன் கதையேது
வாட்டி நிலவுதே
இன்றும்

கொடுப்பினை 
கொண்டவர்க்கே கோளம்
எனதாக கண்டவரும்
அண்டி நிற்க 
அர்ப்பமே சித்தமா
அப்பனே 

அன்னார்க்கும் நிலை
நின்னார்க்கும் விலை
இன்னார் விரித்த
வலையில் சிக்கிய 
மீனெங்கு மீண்டும் 
நீந்த நீரற்று .....

மண்ணாளும் மாயனே...!


உன்னகம் உள்ளதே சொர்க்க மெனும்சூழல்
     தன்னியல் வென்றதெழில் தானியங்க கண்,கானல்
கண்டவை ஏற்பவெங்கும் கோர்ப்ப மழைச்சாரல்
     கொண்டவை கற்ப கலையாகி உன்னையாளும்
கந்தைமொழி பேசசந்தம் என்னவென்று யோசித்த
     சிந்தைவழி தேசபந்தம் உன்னதென்று ஆக்குவாயே
கொண்டதன்று கோணலே கோளமயில் பாடலே
     வண்டகன்று போகதேன் சிந்துமிதழ் நாடினேன்

நானொடிந்து தேடினேன் நானகற்றா வாடினேன்
     வானொடிந்து வீழுமோ நாடியென்னை வாருமா
சின்னசின்ன துள்ளலே தீட்டுதெங்கும் வர்ணமே
    பின்னபின்ன தர்க்கமே சந்ததியென் வர்க்கமே
சொன்னசொல் வேர்பிடி சோலை முழுவண்ணம்
     இன்னதென்ற வீட்டின் கிளையெட்ட ஈரெட்டும்
பார்மொத்தம் பாகமென காண விளைத்திடு
     கார்மேகம் தாகமென நீர்நிலைத் தேடல்நீ

ஊற்றாகி உள்வாங்கி உண்ணார்க்கு ஊன்தெளி
     ஆற்றாத புண்தாக்கி ஆதவனை மாற்றியிடல்
சேறான கால்கொண்டும் சீரான வாழ்தந்த
     மாறாத நற்தொண்டு மண்ணாளும் மாயனே
மனங்கொத்த மாறுதா சாயம் விவசாயன்
     நிலங்கொத்த நீளும் உலகு வினையொத்து
கண்ணே களைகொத்த காலத்தே கற்றுபடி
     மண்ணில் மனமொத்த மாற்றம் வியக்குமினி  

குறிப்பு: மிழ்க்குடில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மகாகவி பாரதி பிறந்ததின போட்டி கவிதை, கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்ட எனது கவிதை தலைப்பு மட்டும் இங்கே மாற்றியுள்ளேன் , 

    

வியாழன், 4 டிசம்பர், 2014

பொய்யனின் மெய்யே...!


கோளப் பெருஞ்சுவரை ஆளப் பிறவும்
     அத்துனை ஆத்மா எத்துணை கொள்ளட்டும்
கேளாதிருக்க கருவனமாம் காத்திர கனவும்
     கடுந்தன யேற்றம் கற்றதனை கொள்ளட்டும்
கோளம் உருவான காலமென நிலவும்
     நிழலாட்டம் களவின் பிறப்பும் கொள்ளட்டும்
சோளம் பொறி(ரி)யிடுக்கில் சிக்கி தவிக்க
     கானல் பணியெந்தன் கடமையாய் கொள்வேன்

வேதமறிய கற்றவன் செயல்பாடு கற்சிலை
     சிகைக்கோதி நர்த்தனம் ஆடுதவன் கோணகூட்டம்
பேதமென்பான் போதனை மறவான் குணவன்
     போதைகொள்ள பேதையின் ஆடலிலே பெருங்கூட்டம்
சேதமெதோ சங்கடத்தை தாங்கும் பொற்சிலை
     பெண்ணவள் போர்த்திய வலையை அறுங்கூட்டம்
சாதகமாய் சேர்ந்தவனே கோர்த்தவன் தற்செயல்
     அறியாது அவன்பாட அருகருகே பொய்கூட்டம்

தந்துணை யாரெனுவாய் தாமெனும் தாரக
     மந்திர மாயையாய் பொழியும் பொய்யிணையே
சிந்தனை ஆளுகையில் தாகமதிர் படுகை
     தீர்க்கநிலை மழையாய் பொழியும் மெய்யிணையே
சுந்தரம் காணுகையே தந்திர வடுவாய்
     சிந்தையில் உண்ணச் சோறிடும் பொய்யிணையே
எந்துணை யாகுமென் பொய்யனின் மெய்யே
     கந்தனை போற்றிவரும் தெய்வ செய்கையிணையே

    
    


புதன், 3 டிசம்பர், 2014

மா மதையில் ...!பல்லதுப்பட்டு சொல்லது மீறும்
வள்ளத் தீ தாலும் வரக வனம்
மண்கட்டி கண்கட்டி விதியாலும்
மதி குட்டி மா மதையில்

விண்சுற்றி வட்டுணரும் மட்டறியும்
மாயமென்ன கற்ற திர்ந்தோன் காகம்
வளரா வளரும் கானகம் மரமுளைக்கா
மண் விதைக்கும் மாற்றுயிர்

நாவறியும் நாற்குணம் நன்கறியா
ஓர் குணம் கோபுர உச்சம்
மிச்சமில்லா எச்சம் ஏந்தும்
மீளில்லா போர்க் கனம்....

குறிப்பு : மீள் பதிவு

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி