சனி, 13 டிசம்பர், 2014

மண்ணாளும் மாயனே...!


உன்னகம் உள்ளதே சொர்க்க மெனும்சூழல்
     தன்னியல் வென்றதெழில் தானியங்க கண்,கானல்
கண்டவை ஏற்பவெங்கும் கோர்ப்ப மழைச்சாரல்
     கொண்டவை கற்ப கலையாகி உன்னையாளும்
கந்தைமொழி பேசசந்தம் என்னவென்று யோசித்த
     சிந்தைவழி தேசபந்தம் உன்னதென்று ஆக்குவாயே
கொண்டதன்று கோணலே கோளமயில் பாடலே
     வண்டகன்று போகதேன் சிந்துமிதழ் நாடினேன்

நானொடிந்து தேடினேன் நானகற்றா வாடினேன்
     வானொடிந்து வீழுமோ நாடியென்னை வாருமா
சின்னசின்ன துள்ளலே தீட்டுதெங்கும் வர்ணமே
    பின்னபின்ன தர்க்கமே சந்ததியென் வர்க்கமே
சொன்னசொல் வேர்பிடி சோலை முழுவண்ணம்
     இன்னதென்ற வீட்டின் கிளையெட்ட ஈரெட்டும்
பார்மொத்தம் பாகமென காண விளைத்திடு
     கார்மேகம் தாகமென நீர்நிலைத் தேடல்நீ

ஊற்றாகி உள்வாங்கி உண்ணார்க்கு ஊன்தெளி
     ஆற்றாத புண்தாக்கி ஆதவனை மாற்றியிடல்
சேறான கால்கொண்டும் சீரான வாழ்தந்த
     மாறாத நற்தொண்டு மண்ணாளும் மாயனே
மனங்கொத்த மாறுதா சாயம் விவசாயன்
     நிலங்கொத்த நீளும் உலகு வினையொத்து
கண்ணே களைகொத்த காலத்தே கற்றுபடி
     மண்ணில் மனமொத்த மாற்றம் வியக்குமினி  

குறிப்பு: மிழ்க்குடில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மகாகவி பாரதி பிறந்ததின போட்டி கவிதை, கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்ட எனது கவிதை தலைப்பு மட்டும் இங்கே மாற்றியுள்ளேன் , 

    

4 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை. நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மண்ணாளும் கவிதை அருமை..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தினேஷ் குமார்

கவிதை அருமை - நன்று நன்று

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தினேஷ் குமார்

கவிதை அருமை - நன்று நன்று

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி