ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சோற்றை பார்க்கும் கடைசி மனிதன் - நானும்


பசிக்க சோறு
தேடியே இனி
சவமாகு - காலம்

வேறென்ன நீ
செய்வாய்
வெறுமனே - எண்ணம்

காப்பேன் கடமை
என்றான்
மீத்தேன் சதியில் - இன்று

சோதனை தானே
சோற்றை பார்க்கும்
கடைசி மனிதன் - நானும்

வேறென்ன நான் செய்ய
வேர் என்ன தான் செய்ய
பசித்தால் புசிக்க மற

இல்லையேல் இன்றேனும்
போர்த் தொழில் பழகு
போர்க்களம் நிறுவும்

அரிசிக்கு கடைசி
பாலம் நீயென்றே
காலம் வரையும்

ஆகினும் காணாதே வம்சம்
செத்துமடிவது உறுதியே அம்சம்
களமிறங்கி களையெடுத்து கொல்

அல்ல 

ஐம்பது ரூபா அரிசி
ஐநூறாகிடும் அன்றை
காண வா நின்று.....

5 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை தினேஷ்.

Aathira mullai சொன்னது…

//ஐம்பது ரூபா அரிசி
ஐநூறாகிடும் அன்றை
காண வா நின்று.....//

இந்த ஆருடம் பலிக்கும் நண்பா. போகிற போக்கைப் பார்த்தால் இதுதான் நடக்கும் நிச்சயமாகத் தெரிகிறது

எதிர்காலப் புலன் என்று இதைத்தான் சொன்னார்களொ. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் தினேஷ் குமார் - கவிதைகள் அனைத்துமே அருமை - நன்று - தொடர்க,

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி