செவ்வாய், 1 மார்ச், 2011

"தூர்வனக் கொல்லி"


நெடுங்கதிரோன் வானத்துறக்கம்
வாரணன் தோரண மிரட்டலினியே
சூதன விரிப்பில் தாரண மறிப்பில்
மாண்ட யந்திரத்தது கேளும்

கோரணித்தாழ் கோவணத்தாளும்
மாரணத்தால் தூர்வனக்கொல்லி
காரணத்தான் காணச்செவிடு
பாழ்த்துறை பளிங்கென

சாலக்கோர்வை வானத்து வியர்வை
மானத்தறிந்து முடியோன் கோர
முப்படை சூழும் மடியோன் முடியோன்
கைப்பிடி யடக்கம் காண்.

நாணேற்றியோர் நல்லம்பு நகைக்க
கானக மறியா கடுந்தவ சூரன்
மாளுமன்றே மறித்தெழா சுனைக்குள்
வீழ்ந்தவன் வேரற்றோன்.

தமிழ்க் கதிர் கூழுக்கலைவோன்
குரும்மினி பிறப்பான் நாவுக்கிறையோன்
நனைவதறிது தாவமறந்து தனிமையில்
தகிக்க தகனமாகும் உனதுலகு.

19 கருத்துகள்:

Unknown சொன்னது…

""தூர்வனக் கொல்லி""
புதிய சொல்லாடல்.. அருமை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹே ஹே ஹே ஹே நல்லா இருக்கு...சூப்பரா இருக்கு...[[புரிஞ்சுதாக்கும்]]

Unknown சொன்னது…

//தனிமையில்தகிக்க தகனமாகும் உனதுலகு.//

எனதுலகும் அப்படியே

Chitra சொன்னது…

செந்தமிழ் வார்த்தைகள் பல அறிந்து கொள்கிறோம்.

Unknown சொன்னது…

நல்லா இருக்கு நண்பரே

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//தமிழ்க் கதிர் கூழுக்கலைவோன்
குரும்மினி பிறப்பான் நாவுக்கிறையோன்
நனைவதறிது தாவமறந்து தனிமையில்
தகிக்க தகனமாகும் உனதுலகு.//

நாலு தடவை படிச்சதுக்கு அப்புறம் தான் புரிஞ்சுது..

அருமையான வரிகள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

"தூர்வனக் கொல்லி" - அருமை.

அருமையான வரிகள்...

மோகன்ஜி சொன்னது…

நூதனமான வார்த்தைப்பிரயோகம் இக்கவிதையில் ..நன்று

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எங்கேருந்துய்யா இந்த வார்த்தைகளை புடிக்கறீங்க?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Nice...

சக்தி கல்வி மையம் சொன்னது…

தலைப்பே புதுமையாகவும், படிக்க தூண்டுவதாகவும் உள்ளது..

ஹேமா சொன்னது…

ஒவ்வொரு சொல்லாக சத்தமாய் வாசித்தேன் தினேஸ்.தமிழின் சுவையே தனிதான் !

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

படித்தேன் ருசித்தேன்..
அத்தனையும் தேன்..
சொல்லாட்சி அருமை..

புதிய புதிய வார்த்தைகளை பயன் படுத்துள்ளீர் அருமை வாழ்த்துக்கள்..

பெயரில்லா சொன்னது…

படம் மற்றும் டைட்டில் மிரட்டலாக இருக்கிறது

பெயரில்லா சொன்னது…

நாணேற்றியோர் நல்லம்பு நகைக்ககானக மறியா கடுந்தவ//
பெரும் முன்னேற்றம் புதிய சொற்கள்..வார்த்தை விளையாட்டு

பெயரில்லா சொன்னது…

நாணேற்றியோர் நல்லம்பு நகைக்ககானக மறியா கடுந்தவ//
பெரும் முன்னேற்றம் புதிய சொற்கள்..வார்த்தை விளையாட்டு

சென்னை பித்தன் சொன்னது…

என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்!இன்னும் பல முறை படித்தால் எனக்குப் புரியுமோ என்னவோ?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

வாவ்.. படிக்க அருமையாய் இருக்கு..

எனக்கு நிறைய இடங்கள் தெளிவா புரிஞ்சுக்க முடியல.. எனக்கு அவ்வளவு புலமை இல்லைன்னு நினைக்கிறேன்..

வாழ்த்துக்கள்.. :-))

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வார்த்தைப் பிரயோகம் -சொல் புதிது, பொருள் புதிது. அருமை.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி