சனி, 16 அக்டோபர், 2010

தொடரும்முன்

தரணியில் இன்றும்
தானே உழைக்கும் சிறுகரங்கள்

திகட்டவில்லை அவர்க்கு
தீக்குச்சி பட்டறைகள்

துயரங்கள் துனிச்சலாக
தூய்மையான வாழ்விழந்து

தென்றல் வீசாதோ
தேன்மழை பொழியாதோ

தை பிறக்குமோ

தொட்டு தொடரும்முன் வாழ்வில்
தோள் கொடுக்கும் சூழல்
தோற்கவில்லை இவர்கள் .................

தோள்கொடுப்போம்
அவர்களுக்கு கல்வி வழியில்
அரசாங்கம் திருந்தாது
அரசியல் மாறும்வரை
தூர் வாரும் ஏரியிலும்
கொள்ளை............
துணிந்து நிற்கும்
நெஞ்சங்களும் கொலை.....
தனித்தே நிற்பினும்
தற்கொலையாக
மாறும் நிலை
துணிந்த கரங்கள்
சேர்வோம் என்றும்.......


9 கருத்துகள்:

Kousalya சொன்னது…

பெற்றோர்களின் வற்புறுத்தல்கள் தான் இதற்கு காரணம். கவிதை வரிகள் நிதர்சனம்....

//தோல்கொடுப்போம்//

தோள் என்று வரவேண்டும் அல்லவா..??

நன்றி

dineshkumar சொன்னது…

Kousalya said...
//தோல்கொடுப்போம்//

தோள் என்று வரவேண்டும் அல்லவா..??

நன்றி கௌசல்யா மாற்றியாச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வார்த்தை பிரயோகமும் கருத்தும் மிக அருமை. எழுத்துப்பிழை குறைத்துக் கொண்டால் நலம்!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அரசியல் "மாறும்" வரை
தூர் வாரும் ஏரியிலும்
"கொள்ளை"............

என்று இருக்கவேண்டும். இந்தக் கமென்ட்டை டெலிட் செய்துவிடலாம்!

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அரசியல் "மாறும்" வரை
தூர் வாரும் ஏரியிலும்
"கொள்ளை"............

என்று இருக்கவேண்டும்.

கவுண்டரே திருத்திட்டேன்

வினோ சொன்னது…

வலி மிகுந்த உண்மை தினேஷ்..

ஒன்று கூடுவோம்...

எஸ்.கே சொன்னது…

வரிகள் அருமை! சிறப்பாக உள்ளது!

Chitra சொன்னது…

மனதை கனக்க செய்யும் கவிதை.

பெயரில்லா சொன்னது…

Great internet site!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி