செவ்வாய், 5 அக்டோபர், 2010

நித்திரையில் கண்ட கனவானேன்

சித்திரை நிலவாக
நின் முகம் காண?

வைகாசி திங்களில்
உதித்தவளோ நீ

ஆனி அடிதார்ப் போல்
நெஞ்சில் பதிந்தாய்

ஆடி யின் பிம்பமாக
நள்ளிரவில் நீ

ஆவணி யில் வீசிய
நின் தாவணிக் காற்று

புரட்டாசி திங்களில்
உதித்த நான்

ஐப்பசி தீபவொளியில்
புன்னகை பூத்தது

கார்த்திகை அகலொளியில்
தேவதையாய் நீ

மார்கழி பூக்கள்
மலர வெட்கப்பட்டன

தை பிறந்தும் நின்
விழி வழி மறிக்க

மாசி மகமாக
மனமெல்லாம் கடலலைகள்

பங்குனி உத்திரத்தன்று
நித்திரையில் கண்ட கனவானேன்

9 கருத்துகள்:

Chitra சொன்னது…

தமிழ் மாதங்களை கொண்டு அருமையாக எழுதப்பட்டு இருக்கும் இந்த கவிதையை ரசித்தேன். பாராட்டுக்கள்!

Chitra சொன்னது…

தமிழ் மாதங்களை கொண்டு எழுதப்பட்ட அருமையான கவிதை. பாராட்டுக்கள்!

வினோ சொன்னது…

அருமையா இருக்கு தினேஷ்...

எஸ்.கே சொன்னது…

நல்ல கற்பனை. அருமையான கவிதை!

ஹேமா சொன்னது…

மாதங்கள் கோர்த்த கவிதை.அழகு.

vanathy சொன்னது…

super kavithai!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

அழகுக் கவி்தை மோகன்..

kavitha சொன்னது…

parava illa tamil maathangala marakama irukinga....... kavithai miga miga azhagu. thodarnthu ezhutha vazhthukkal......

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

மாதங்களை மகிழ வைதத்தீர்களா?
எங்களை சுவைக்க வைத்தது உண்மை.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி