புதன், 15 டிசம்பர், 2010

சொல்லாத காதல்...........


கள்ளமில்லா காதலடி
உன்னில் சொல்லத் தோணுதடி
உண்மை சொல்ல மறுக்குதடி
எந்தன் உள்ளில் அனலடிக்குதடி

விழியோரம் வழியுதடி
சில நேரம் நீர்த்துளிகள்...!
பக்குவமாய் வார்த்தேனடி
வரிகளாய் கோர்த்தேனடி

வழித் துணையாய் வந்தேனடி
வழிமறந்து நின்றேனடி
மனமொன்று உரைத்ததடி
உன் நிழல் கூட கேட்டதடி

என் காதல் உனைத்தாக்க
உன் உள்ளம் நோகுமடி
குழித்தோண்டி புதைத்தேனடி
புரிந்தொருநாள் வருவாயோ....?!

டிஸ்கி : கவிதைக்கு மட்டும்தான் சொந்தக்காரன் நண்பர்களே நான் காதலை வேறுகோணத்தில் சிந்தித்ததால் வந்த விளைவு இக்கவிதை

19 கருத்துகள்:

தமிழ்க் காதலன். சொன்னது…

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பா.. உங்கள் எண்ணம் ஈடேரட்டும். காதலை சொல்லா கொடுமை நம்மை அரித்துக் கொண்டிருக்கும் வரை தூக்கம் ஏது.....? ஏக்கமே மிச்சம்.

philosophy prabhakaran சொன்னது…

கவிதை அருமையாக இருக்கிறது... இந்த படத்தை எங்கிருந்து பிடித்தீர்கள் அல்லது நீங்களே வரைந்தீர்களா கலக்கலாக இருக்கிறது...

ஹேமா சொன்னது…

காதலை சொல்லாத வரை உங்கள் உள்ளம் நோகுமே.சொல்லித் தெளிவாகிக்கொள்வதே நல்லது காதலில் !

Chitra சொன்னது…

சொல்லாமலே...... ரைட்டு!

சுந்தர்ஜி சொன்னது…

கவிதை சொல்ல விட்டதை படம் சொல்கிறாதோ? பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள் தினேஷ்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kalakkal kavithai super picture

vanathy சொன்னது…

super kavithai.

வைகை சொன்னது…

குழித்தோண்டி புதைத்தேனடி
புரிந்தொருநாள் வருவாயோ....?!//////////


பெரும்பாலோனரின் மனநிலை இதுதான்!

வெறும்பய சொன்னது…

நல்ல கவிதை

பெயரில்லா சொன்னது…

யாதர்த்தமான சிந்தனை .....

கவிதைக்கு மட்டும்தான் சொந்தக்காரன் நண்பர்களே நான் காதலை வேறுகோணத்தில் சிந்தித்ததால் வந்த விளைவு இக்கவிதை//
:)

சங்கவி சொன்னது…

//என் காதல் உனைத்தாக்க
உன் உள்ளம் நோகுமடி
குழித்தோண்டி புதைத்தேனடி
புரிந்தொருநாள் வருவாயோ....?!//

காதலை அழகாக சிந்தித்திருக்கறீங்க நண்பா...

karthikkumar சொன்னது…

நல்ல கவிதை. மாறுபட்ட உங்கள் கோணத்தில்.

logu.. சொன்னது…

\\என் காதல் உனைத்தாக்க
உன் உள்ளம் நோகுமடி
குழித்தோண்டி புதைத்தேனடி
புரிந்தொருநாள் வருவாயோ....?!\\

Rasithen nanbare..

ம.தி.சுதா சொன்னது…

////வழித் துணையாய் வந்தேனடி
வழிமறந்து நின்றேனடி////

அருமைங்க முன்னுக்கப் போகவா பின்னுக்கப் போகவா தெரியல...

பதிவுலகில் பாபு சொன்னது…

ஃபுல் ஃபீலிங்க்ஸ்..

நல்லாயிருக்குங்க கவிதை..

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் சொன்னது…

சொல்லாத காதல் அது கட்டி முடிக்காத வீடு !

Anbu சொன்னது…

:-))

கோமாளி செல்வா சொன்னது…

//விழியோரம் வழியுதடி
சில நேரம் நீர்த்துளிகள்...!
பக்குவமாய் வார்த்தேனடி
வரிகளாய் கோர்த்தேனடி
//

சூப்பர் அண்ணா .!!

கோமாளி செல்வா சொன்னது…

//டிஸ்கி : கவிதைக்கு மட்டும்தான் சொந்தக்காரன் நண்பர்களே நான் காதலை வேறுகோணத்தில் சிந்தித்ததால் வந்த விளைவு இக்கவி//

ஹி ஹி ஹி ..!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி