புதன், 8 டிசம்பர், 2010

விலகிச்சென்ற - உறவுகள்


முன்பொரு நாள்
அதிகரித்த வேலைப்பளுவில்
அலைந்து திரிந்து அலுவலாய்
அலுவலகம் வந்தமர்ந்தேன்

ஆவலாய் தேடிய கண்கள்
அலுவலக பணியால் முதியவரை
களைப்புடன் நானமர - பருக
தேநீர் கலந்து கொடுத்து

களைப்பை துரத்தி மீண்டும்
பணியில் இறங்க துரத்தும்
அவர் கலக்கும் தேநீர்
முதியவரை காணவில்லை

சொல்லா விடுப்பு எடுத்துவிட்டார்
களைப்புடனே வெளியேறினேன்
அவரில்லா அலுவலகம்
இருவருடங்களாய் மாறிய இருநாட்கள்

மறுதினம் சிறு சினத்துடன்
எதிர்நோக்கிய கண்கள் அறியாமல்
கலங்கின இருநாட்களில்
உடல் மெலிந்த நிலையில் முதியவர்

கலங்கிய கண்களுடன் அவர்
கரம்பிடித்து வினவினேன்
மகளின் திருமணம் மறுமாதம்
என்றுரைத்து மனம்கலங்கினார்

இருலகர ரூபாய் ரொக்கமாம்
மாப்பிள்ளை வீட்டார் கேட்டது
இருநாட்களாய் பசி அறியாமல்
பணத்திற்காக அலைந்திருக்கிறார்

பாவப்பட்ட மனிதன்
மாதக்கடைசி என்று உள்ளுக்குள்
மனம் புலம்பியதை
கரம் அறிந்தோ என்னவோ

இளகிபோன கரங்கள்
நேர்த்தியாய் அவர் விரலில்
கோர்த்த மோதிரம்
நெஞ்சம் கனத்தது விலகிச்சென்ற
உறவுகளை நினைத்து..........

டிஸ்கி : பட உதவி கொஞ்சம் வேட்டிபேச்சு சித்ரா அக்கா நன்றி , நண்பர்களே பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க மறந்துவிடாதீர்கள்

12 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முத வெட்டு,முத ஓட்டு,முத ஷொட்டு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மனித நேயத்தையும்,இயலாமையையும் வெளிப்படுத்தும் கவிதை

Chitra சொன்னது…

அந்த படத்தை நான், கூகிள்ல தாங்க சுட்டேன். நீங்க வேற நன்றி சொல்லிக்கிட்டு.....

கவிதை - எல்லோரையும் மனித நேயத்துடன் மதிக்க, சொல்லி தந்து இருக்கிறது. உதவ முடியவில்லை என்றாலும், ஆதரவாக பேசி - புன்னைகையோடு அக்கறையாக பேசவாவது தோன்றுமே.

Philosophy Prabhakaran சொன்னது…

சிலருக்கு பாடமாக அமையக்கூடிய கவிதை...

karthikkumar சொன்னது…

நெஞ்சம் கனத்தது விலகிச்சென்ற
உறவுகளை நினைத்து..நெஞ்சம் கனக்கிறது எனக்கும்தான் பங்கு.

பெயரில்லா சொன்னது…

கல்யாணம் வரை கல்யாண கவிதைதான்

பெயரில்லா சொன்னது…

அந்த படத்தை நான், கூகிள்ல தாங்க சுட்டேன்//
அப்போ நன்றி கூகிளாண்டவர்

பெயரில்லா சொன்னது…

முத வெட்டு,முத ஓட்டு,முத ஷொட்டு//
முத வடையா

பெயரில்லா சொன்னது…

முத வெட்டு,முத ஓட்டு,முத ஷொட்டு//
முத வடையா

பெயரில்லா சொன்னது…

வைகை said

இருலகர ரூபாய் ரொக்கமாம் மாப்பிள்ளை வீட்டார் கேட்டது ////////////////////

இன்னுமா இப்படியும் மனிதர்கள்?!!

வினோ சொன்னது…

மனிதம் பேசுகிறது கவிதை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மனசு பாரமாகிடிச்சு'பா....

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி