வெள்ளி, 17 டிசம்பர், 2010

தாயும் சேயும் கருவறையில்


அகத்தே நீ உதைக்க
புறத்தே காணாத பேரின்பம்
உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும்
எனை வென்று சிறை மீட்பேன்
என் கண்மணியே உன்னை

இவை தான் உலகமென்று
புறம் காண மறுக்குதம்மா உள்ளம்
அகத்தே உன் அரவணைப்பில்
நாற்பது வாரமாய் தவமிருந்து
எம் உள்ளம் படைத்தவளே

எனை சிறைமீட்கும் வேள்விதனில்
வேதனை பல அனுபவிப்பாயே
என் தாயே உன் வேதனையின்
தாக்கத்திலே அலறுகின்றேன்
அழுகுரலாய் என் ஆதங்கம்

சோதனையும் வேதனையும்
உன் முகம் காண காற்றாக
பறந்திடுமே கண்மணியே
நீ ஆணாக பிறப்பாயோ
பெண்ணாக பிறப்பாயோ - ஏக்கம்
எங்கும் நிறைந்திருக்க
தூக்கமில்லா உன் நினைப்பில்
காத்திருப்பேன் உனக்காக

பெண்மையிலே வளர்ந்தேனே
உன்னுள்ளம் கொண்டேனே
பெண்ணாக முதல் பிறப்பு
ஆணாகும் அதன் பிறகு
வித்திட்ட விதியம்மா
மாற்றமிலா உண்மையிது

எனைக்காக்கும் இன்னுயிரே
உனைக்காப்பேன் என்றுமிங்கு
உன் சேயான நானிங்கு
தாயே உன் பாதம் பணிகிறேனே
தர்மம் புகட்டிவிடு தாயே
எமக்கு..............


25 கருத்துகள்:

Chitra சொன்னது…

நெகிழ வைக்கும் அருமையான கவிதைங்க....

கலாநேசன் சொன்னது…

வித்தியாசமா நல்லா இருக்குங்க....

philosophy prabhakaran சொன்னது…

தாயின் சுகமான சுமையை உணர வைத்த கவிதை...

வெறும்பய சொன்னது…

தாயின் மேன்மை சொல்லும் அருமையான கவிதை..

ஆமினா சொன்னது…

தாயின் புனிதத்தை வெளிபடுத்தி நெகிழ செய்த கவிதை

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

தமிழ்க் காதலன். சொன்னது…

நண்பா கலக்கிடீங்க.. அருமையான பதிவு.

ம.தி.சுதா சொன்னது…

அம்மா என்ற ஒரே சொல் போதுமையா... கவிதைக்கு....

அருமை சகோதரா...

கணேஷ் க சொன்னது…

முதல் பத்தியில் தாய் சொலுவது போல் உள்ளது, மூன்றாவது பத்தியிலும் கடைசி பத்தியிலும் சேய் சொல்லுவது போல் உள்ளது. தலைபிற்கும் கவிதைக்கும் சமந்தம் இல்லைன்னு தோணுது. இருந்தாலும் கவிதை நல்லா இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தாய்க்கொரு தாலாட்டு, நெகிழ்வு...!

logu.. சொன்னது…

\\பெண்மையிலே வளர்ந்தேனே
உன்னுள்ளம் கொண்டேனே
பெண்ணாக முதல் பிறப்பு
ஆணாகும் அதன் பிறகு
வித்திட்ட விதியம்மா
மாற்றமிலா உண்மையிது \\

Marakkamudiyatha varigal nanbare..

karthikkumar சொன்னது…

பெண்மையிலே வளர்ந்தேனே///
சூப்பர் வரிகள் பங்கு. அம்மா கண்முன்னே வாழும் தெய்வம். அன்றாடம் பூஜிக்கபடவேண்டியவள்.

Geetha6 சொன்னது…

மிக சரியாக சொன்னீர்கள் !!
இந்த கவிதைக்கு ஏற்ற படங்கள் என் ப்ளோகில் பாருங்க..
http://udtgeeth.blogspot.com/2010/12/கரவற-கயல.html

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

உங்கள் கவிதைகள் அனைத்திலும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இதுதான் ,,, பாராட்டுக்கள்...

தேவன் மாயம் சொன்னது…

அகத்தே உன் அரவணைப்பில்
நாற்பது வாரமாய் தவமிருந்து
எம் உள்ளம் படைத்தவளே//


அருமை! தாய்மை ஒரு அற்புதம்!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கவிதை அருமையான கவிதை (என்ன பார்க்குறா கவிதைக்கெல்லாம் template கமெண்ட் தான் போடா முடியும் அதுவும் இல்லாமல் தாயை பற்றி வேற )
நன்றாக இருக்கு மக்கா

சத்ரியன் சொன்னது…

//எனைக்காக்கும் இன்னுயிரே
உனைக்காப்பேன் என்றுமிங்கு
உன் சேயான நானிங்கு
தாயே உன் பாதம் பணிகிறேனே
தர்மம் புகட்டிவிடு தாயே
எமக்கு........//

தினேஷ்,

உன் கவிதைக்கென நானே தாயாகிடலாம் போல இருக்கு.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

மிக அருமை தினேஷ்..

சௌந்தர் சொன்னது…

தாயை பற்றி சிறந்த கவிதை...

ருத்ரன் சொன்னது…

நெகிழ்ச்சியான கவிதை “தாயும் சேயும் கருவரையில்“ நன்றாக உள்ளது..... ............கணேஷ் சொன்ன கமன்ட்ட ஏற்றுக்கொள்ள முடியிவில்லை........ ..காரணம் இதோ, தலைப்பை படித்து, அதன் பொருள் அறிந்து பிறகு கவிதையயை படித்திருக்கவேண்டும்... நான் சொன்னது சரிதானே.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இன்சிடெண்ட் கவிஞா கலக்கல் கவிதை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ் ஒரு நாள் கூட ரெஸ்ட் கிடையாதா?தினமும் கவிதையா போட்டு தாக்கறீங்க?

பாரத்... பாரதி... சொன்னது…

அருமையான கவிதை, ஒரு ஆண் பெண்ணின் நிலையிலிருந்து, அதுவும் தாய்மையின் நிலையிலிருந்து எழுதிய கவிதை என்பதால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு நிற்கிறது . வாழ்த்துக்கள் தினேஷ்.

ஹேமா சொன்னது…

தாயின் தாலாட்டாய் உங்கள் அருமையான வரிகள் !

ArunprashA சொன்னது…

அகத்தே நீ உதைக்க
புறத்தே காணாத பேரின்பம்
உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும்
எனை வென்று சிறை மீட்பேன்

Nice words

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி