செவ்வாய், 21 டிசம்பர், 2010

"நம்பிக்கை கொள்..!"

pic-1.bmp

இன்பம் நிலைத்திருக்க காலமில்லை
துன்பம் இல்லா வாழ்வுமில்லை
வழிதவறி போகும் மனம் - வழிகாட்ட
யாருமில்லை வழிப்போக்கன் பாதையிலே.

தட்டுமண்ணு சுமந்து தினம்
சோறு பொங்கும் ஏழ்மையிலும்
தன்னை நம்பி வாழ்கிறாளே..
அவள் போதும் உன் வழிகாட்ட...!

என்ன குற்றம் செய்துவிட்டாய்..?
உன்னை கொல்ல திட்டமிட்டாய்...?!
தற்கொலைக்கு துணிந்த மனம்..
தடைகளைத் தான் தகர்க்காதோ...?!

தடை என்று ஏதுமில்லை.
நாம் வாழும் உலகினிலே.
எதிர்கொள்ளும் மனமிருந்தால்
உன்னை நம்பி வாழ்ந்துப்பார்.

புல் புழு பிழைத்திருக்க
பூமியிலே இடமுண்டு.
காலனையும் காலம் வெல்லும்
உன் மனம் விதைக்கும் நம்பிக்கை..!!

காதல் ஒரு சாட்சியாக
கல்லறைகள் நிறைவதென்ன...?
காதலைத்தான் குற்றம் சொல்லி
காலனை இழுக்கும் கோலமென்ன..?

சொல்லி சோகம் மாளவில்லை.
சோர்ந்து போனால் போதுமா..?
துணிந்து வாழ கற்றுக்கொள்..!
துன்பத்தை தூசு போல தட்டிச்செல்..!!

டிஸ்கி : நம்ம ரோசாப்பூந்தோட்டம் பாரத் பாரதி இன்று கேட்ட கேள்விக்கு ஒரு எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை வரிகளாக தொடுத்துள்ளேன் நண்பர்களே எச்சுச்மி எங்க போறீங்க வோட் பிளீஸ்

15 கருத்துகள்:

வினோ சொன்னது…

/ துணிந்து வாழ கற்றுக்கொள்..!
துன்பத்தை தூசு போல தட்டிச்செல்..!! /

உண்மையான வரிகள்..கவிதை கலக்கல்...

karthikkumar சொன்னது…

தன்னை நம்பி வாழ்கிறாளே..
அவள் போதும் உன் வழிகாட்ட.///
அருமை வரிகள்...

Unknown சொன்னது…

தலைப்புக்கு ஏற்றவாறு, வாழத்துடிப்பவர்களுக்கு உங்களின் இன்றைய கவிதை நிச்சயம் வழிகாட்டலாக, ஆறுதலாய்
இருக்கும்.

Unknown சொன்னது…

//தடை என்று ஏதுமில்லை.நாம் வாழும் உலகினிலே.எதிர்கொள்ளும் மனமிருந்தால்உன்னை நம்பி வாழ்ந்துப்பார்.
//
நல்ல வரிகள்.

நிலாமதி சொன்னது…

துணிந்து வாழ கற்றுக்கொள்..!
துன்பத்தை தூசு போல தட்டிச்செல்..!!

அருமை வரிகள்...

Philosophy Prabhakaran சொன்னது…

//
சொல்லி சோகம் மாளவில்லை.
சோர்ந்து போனால் போதுமா..?
துணிந்து வாழ கற்றுக்கொள்..!
துன்பத்தை தூசு போல தட்டிச்செல்..!! //

இந்த கடைசி வரிகள் செம...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நல்லாருக்கு,முதல் முறையா 4 பிரிவிலும் ஓட்டு போட்டாச்சு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

iwdha vaaram thamizmaNam taap 20 la idam pidiccidiviingka

Arun Prasath சொன்னது…

சூப்பர் (இது template இல்ல, நானே type பண்ணேன்)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

"தடை என்று ஏதுமில்லை.நாம் வாழும் உலகினிலே.எதிர்கொள்ளும் மனமிருந்தால்உன்னை நம்பி வாழ்ந்துப்பார்."
அருமையான வரிகள். கவிதை சூப்பர்

G.M Balasubramaniam சொன்னது…

எழுதும் வரிகளில் எங்கோ சோகம் தெரிகிறதே.சந்தோஷமும் உற்சாகமுமே நீங்கள் அனுபவிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

செல்வா சொன்னது…

//தட்டுமண்ணு சுமந்து தினம்
சோறு பொங்கும் ஏழ்மையிலும்
தன்னை நம்பி வாழ்கிறாளே..
அவள் போதும் உன் வழிகாட்ட...!
//

செம செம ..!!

செல்வா சொன்னது…

//காதல் ஒரு சாட்சியாக
கல்லறைகள் நிறைவதென்ன...?
காதலைத்தான் குற்றம் சொல்லி
காலனை இழுக்கும் கோலமென்ன..?
//

இந்த வரிகளும் கலக்கல் அண்ணா .!!

vanathy சொன்னது…

nice one.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கையக்கொடுய்யா... வெல்டன்..... !!! மக்கா நீ எழுதுற வேகத்துக்கு ஏதாவது இது எல்லாத்தையும் கவிதை தொகுப்பா போட்டு வெளியிடலாம், சீரியசா சொல்றேன்......!
இது பற்றி தெரிந்த நண்பர்கள் யாரும், விபரம் சொல்லலாம்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி