வெள்ளி, 31 அக்டோபர், 2014

கடந்தது யோகம்...!


காட்சிகள் மாற கடந்தது யோகம்
அதிலொரு வீழ்வு அவனிடம் தேர்வு
கரைந்ததும் காலக் கழிவினில் ஏடு
படித்துரை பாக்ய பிறப்பிடமோ

அலைந்து திரிந்து அமரும் தருவாய்
கருவின் உதயம் தெளிந்த மனமாய்
மயங்கி மருகிய நேரம் படிந்தது 
கண்கள் திறந்தும் இருண்டது மாயை

மனம் லயித்து மயமாகி போக
தினம் புதிதாய் உதித்த மலர்கள்
நலம் விசாரிக்க புன்னகை பூத்த
பெரு மௌனத்தின் சங்கதி

அவிழ தொடங்கி அமிழ்ந்து மணந்தது
தன்னை தனிமையில் காண கவர்ந்தது
மெய்யே மெழுகாய் உருகிடும் தவமே
உடை தரித்தயென் உள்ளம் திறந்ததே

கதவுகள் காற்றிசைக்க திக்கு திறந்தது
பேதை பிதற்றிய பாவை உருவிலே
மேகப் பொழிவினை தேக்கி நிறுத்திட
வாதம் பிழையென்ற கோணம் சரியானது....


வியாழன், 30 அக்டோபர், 2014

கடமை பதுமை...!


நெய்து தரிக்கட்டும் உடை மனிதம்
பெய்து பொழிக்கட்டும் விளை வழியே
எய்து தனக்கெட்டும் தான் கெட்டும் 
கொய்த பழமே இனிக்கும் வினை

விளைத்து பலனிலா வதைத்து கொணர
சிதைத்து விழும் வீனத்தவி வாதம்
களைத்த கருவே நினைத்து விழுதாம்
திலைத்த பருவம் திரித்த வினை

களம் நிறைய கடனும் குறைய
கவனம் இயற்றும் கருவி பிறவி
குடம் நிறையும் குணம் கரையும்
குளம் தெளிய விளைக்கும் 

கால மியற்றும் கடமை பதுமையாய்
நாளு மியங்கு தயங்கா புதுமையே
தாகம் அறிந்து தவிர்ப்பு மருந்திட
மேகம் பொழியும் மழையே 

மருவி மயமாய் நிறுவ அகலும்
பிணியே கனிவு மகவாய் பிறவும்
துணிவை திறவும் வழியே வகு
வாழ்வின் இறுக்க மறுக்கும் 
புதன், 29 அக்டோபர், 2014

பூலோகம் சொர்க்கம் ...!


நேற்று பிரிந்தென்ன கண்டாய் மனமேயான்
அற்று அறிந்தென்ன கண்டேன் மயமேமாய்
வெற்று நிறைந்தெங்கும் கற்ற பிடிகொண்டு 
விற்று சரமாகும் நிலை கண்டேன்

பட்டது படியேற பக்குவம் பலமாகும் 
இட்டது விதி விளையாட விலையாகும்
கற்றதும் கடன் பெற்றதும் வெற்றுக்கு
தட்டுபட தாகம் அறியும் வழியே

நானாகி நீயாகி நாயகன் தானாகி 
தத்துவம் சித்தரித்த புத்தம் புதுமையாகி
புண்ணியம் பூலோக சொர்க்கம் புரிதலிலா
புன்னகை போர்த்தியே யாகம் 

ஆயிரம் அர்த்தம் புதையுண்ட காலகிடங்கு
ஆளும் தனியனே ஆடும் அவனியில்
காணுங் கருத்தியல் நீள இணைப்பிணை
மெய்யாய் உருகோர்க்கும் பெய்யா மழை

கடந்தது காணாது பொய்யே அவன்
அளந்தது காணாது பொய்யே அவன் 
அறிந்திட காணாது பொய்யே அவன்
பிறப்பிடம் ஆவதுன் மெய்யே ...

செவ்வாய், 28 அக்டோபர், 2014

உறங்குவான் உள்ளில்...!


உறங்குவா னுள்ளில் உயர்வெனும் மேய்ப்பன்
இறங்குவா னில்லை உணர்ந்துயிர்க் காவிடின்
தோற்றமினி வேடமிட தொற்றுமிழை கோலமிட
கற்றததும் மெய்ப்பிக்கும் பொய்யெந்தன் கூடே

நார்தரித்த வேடம் மலரடுக்க மாலையாகி
தாந்தரிக்க வேடம் கபடமாக பொய்த்திலா
கார்மேக மோகம் மழைபாடும் கானம்
கலையான லோகம் உடனிருப்ப கூடே

தேனிருக்கும் கூடு தனியே தவமிருக்க
ஆர்ப்பரித்து ஆடும் அலைகளும் தேடிடும்
தேவையவன் தேரோ நெகிழ்ந்து ஒழுகும்
அமுதோ அகமேறி காணாய்யுன் கூடே

அருகிலிரு ஆழ்வதறி ஆராய காரம்
பிடிபடும் கார்யம் விடுபடும் தோராய
தோரணம் கண்டு தொடுவாய் சுயமே
தொலைவெது காணுவாய் உள் கூடே

அழைத்தெழும் பாக்யம் பிழைத்துழும் வாக்கில்
தழைத்தெழும் தர்மம் விளைத்துழு கர்மம்
கடனோடு சேரும் கணமே சுடுகாட்டு
பித்தன் பிழைக்க புகுவானுள் கூடே

திங்கள், 27 அக்டோபர், 2014

உள்ளது அறி...!


ஆண்டு பலவாகி போகினும் ஆண்டவன்
தானாகி ஆள அகிலத்தின் கோணம்
அளவின்றி நீளும் அகிலாண்ட நாயகன்
வாழ்ந்தெழில் கூடே குயவனும் உள்ளே

தாழ்ந்தென்ன ஆகுவ வீழ்ந்தெங்கு நீங்குவ
வாழ்வென்ற தேரிலே போரென்றும் நீளுமே
பாழ்கொள்ள வேண்டா அகழ்வாய் நிகழ்வை
அருள் திறளும் அகமே உனதாய்

மகிழ்வெங்கும் காணாய் பழியெங்கும் வீனாய்
கழிவெங்கும் நீக்கு இழிவங்கு மாயும்
மரங்கொத்தி தானே மனங்கொத்த பாராய்
மதியாகி போவன் மயமுந்தன் உள்ளே

தீராது கொள்ளும் தியானத்தே நில்லும்
தனியேத் தனை வெல்லும் நிலையே
வலிமை யதுவென ஓதும் அகநிலைக்கல்
ஆட்ட முடிவதும் உள்ளென அறி...

உள்ளில் அவனாக உள்ளது அறி
உள்ளில் இயக்கமே உள்ளது அறி
உள்ளில் உயிராக உள்ளது அறி
உள்ளில் எதுவுமாக உள்ளது அறி

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி