செவ்வாய், 24 மார்ச், 2015

மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி...!

இன்றென்றென வெண்ணார்க்கரம் ஈன்றாளுவ காணே
நின்றுண்ணுவ கொன்றானென நீந்திச்செலல் காணே
அன்றெண்ணுவ இன்னார்க்குயர் அஞ்சாததைக் காணே
வென்றாளுவன் பொற்றாமரை மீட்டானெனக் காணே
பெற்றானெனை விற்றானெனப் பெய்யாமழை போர்த்தி
கற்றானவன் உற்றானுடை காற்றானவன் போர்த்தி
பற்றானது பந்தாளுவ பாராளுவன் கீர்த்தி
கற்றாளவன் மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி

மனபோக்கிலே கடந்தேயுகம் மயமாகுது தனிலே
எனதாக்கிட வினைதூவிடும் இயலாதவர் தனிலே
வனவாழ்வினை கடந்தாலென மணந்தானவன் வினையே
தனதாகிடும் உணர்வாலவன் உதயத்தினை விளைத்தே
விலையாவதும் கலையாவதும் வினைத்தான்விளை பொருளே
மலையேறுவன் மழைதேடுவன் மனைதானது மயங்காய்
உலைவேகுது உடன்வாடுது உழைத்தாலுடன் வசமே
நிலையாவது நினைவானது நிழல்தானது உணராய்

திங்கள், 16 மார்ச், 2015

"பலகால பந்தம் படர்ந்தெங்கும் தன்னில்"


1. மன்னன் அமர்ந்தானே மண்மீது கண்ணனே 
    என்னில் அமர்வாயோ ஏற்றிடு கோலத்தை 
    தன்னில் தனைக்காண தாகம் நிறைந்தது 
    தன்னை தளராது தாங்கு

2. உண்மை உறைந்திட ஊரும் மறந்திட 
    கண்ணில் தெரிவது கானல் நாட்டினில் 
    ஊழல் பெருச்சாளி ஊதும் சங்கினித் 
    தாழ்வ தரிதே சமர்செய்

3. ஆட்சி நடக்குதா ஆட்டம் நடக்குதா 
    காட்சி பிழையான கட்சி வளர்க்கவே 
    சாட்சி சடங்கென சட்டம் அமைக்கிறான் 
    மாட்சி மருந்தில்லா மாயம்

4. தெள்ளத் தெளிவாகத்  தேடல் அறிந்தேனே 
    மெள்ளத் தெளிவாகி மீண்டுள் அமர்ந்தேனே 
    தெள்ளு தமிழிசைத் தேனைக் கொணர்வேனே 
    அள்ளுங் களமாக்கி ஆள்

5. கந்தையில் தன்னிலை கண்டதும் கொண்டதை
    சந்தையில் தள்ளிட தன்னையே கண்டவன்
    சிந்தையில் தோன்றிய தென்றலே கல்லென
    வந்தானை சொல்லாள வையும்

6. நானற்ற தேசத்தில் ஞானத்தை தேடி 
    தானுற்ற பாசத்தில் சங்கீதம் பாடி 
    வானுற்ற மாயத்தை மௌனித்து நாடி 
    நானேற்ற வேடத்தில் நாணேற்ற சூடி (னேன்)

7. கட்டுக்குள் அடங்கிடான் காட்டுக்குள் தீயாய் 
    பிட்டுக்கு சுமந்தவன் பேரண்ட மாயன் 
    உட்கொண்ட நஞ்சுடன் ஒற்றாத மெய்யன் 
    விட்டேறி வறுமையின் வேடத்தே மொய்ப்பான்

8. கோலத்தை கொண்டவன் கொடுத்தான் கோணத்தை 
    ஞாலத்தில் வந்தவன் நிறைத்தான் ஞானத்தை 
    காலத்தில் கண்டவன் கௌரவம் கோர்த்தானே 
    பாலத்தை பண்டவன் பணிந்தான் பந்தினிலே

9. கல்லுண்ட கோலத்தில் கட்டுண்டேன் கோளத்தில் 
    வில்சென்ற கோணத்தில் வெட்டுண்ட கோரத்தில்
    சொல்வென்ற கோவத்தீ சூழ்ந்தாண்ட காலத்தில்
    செல்லென்றே சந்திக்கச் சேணத்தை சீர்செய்தேன்

10. பலகால பந்தம் படர்ந்தெங்கும் தன்னில் 
    சிலகால நேரம் சிறகுற்று பறந்தேன் 
    விலையான தெங்கும் விடிலோடு தோன்ற 
    கலையான நாதன் கடந்தெங்கே செல்வான்

11. எங்கிருக்கான் அங்கிருக்கான் என்றே அலைபாயும் 
     கூட்டத்தில் அத்தனை உருவிலும் அவனுள்ளான் 
     என்பதை உணருங்கால் ஊழ்வினைகள் தீண்டா 
     பதார்த்தமாகி எதார்த்த மாயை நிரம்பும் 

ஞாயிறு, 8 மார்ச், 2015

"ஞாலம் மின்னுது வென்றாளு ! "


காலை உந்துது தன்னாலே
மாலை வந்தது பின்னாலே
காலம் ஓடுது முன்னாலே
ஞாலம் மின்னுது வென்றாளு - (காலை)

நாளும் எண்ணிட செல்லாதே
நாளை நின்றிட எண்ணாதே
வாளும் உன்னிடம் நில்லாதே
காளை என்றென துள்ளாதே - (காலை)
வாட என்றும ருந்தாவாய்
தேடல் வென்றிட தீர்வாக
காடும் நன்றென கண்டாயு
நாடி வந்திடும் நற்பாகாய் - (காலை)
***********************************************

தன்னை தானடி தந்தேனே
மன்னன் நானென வந்தேனே
இன்னம் ஏனடி சந்தேகம்
உன்னை தாயென கொண்டேனே - (தன்னை)
கண்ணன் யாரென கண்டாயோ
கண்ணில் பேரருள் கண்டாயோ
மண்ணில் மாதவன் வந்தானே
மண்ணை தாயென கொண்டானே - (தன்னை)
சிந்த பேதமை தந்தானா
பந்த போதனை தந்தானா
வந்த பாதையில் வந்தானா
சந்தம் பாடிட தந்தானே - (தன்னை )

திங்கள், 2 மார்ச், 2015

"ஒவ்வொன்றும் ஓர்ச்சுவை பலகாரம்"


"பிரம்படி பட்ட பரமனை காண
பிரம்மனும் சித்தன் பிறவுவ கண்டுஅவன்
சொல்லாது ஒன்றனை செல்லாது கற்றிட
கல்லுக்குள் இன்னொரு கல்"

"தோகை மயிலாட மையலில் மன்னவன்
தோள்சேர் மமதையில் தோல்வி மயமாகி
மார்தழுவி நீருண்ட மேகமாய் பூவொற்ற
நார்சூடி பாரண்டம் மாயை"

"சிந்தும் மேனியில் சிந்தனை தீயிடு 
பந்தம் சேனையை பங்கிடா சேவைசெய் 
உந்தக் கூரென ஒன்றிலா கோட்டியை 
அந்தம் ஆக்குவ அன்றிலா ஆற்றலுள்"

"காயுந் தேகமே கானலில் நீந்திடா
மாய எந்திரம் மாதவன் தந்தது 
ஆய அந்தரம் ஆடுவன் சன்னதி 
தாயம் ஒன்றென சம்மதி உள்அவன்"

"கடுக்காய் கொணர்ந்தேன் கசக்கா குழந்தாய் 
உடுப்பாய் உணர்ந்தாள் உடலுள் ஒழுக்கம் 
கிடப்பார் அருந்த கெடுப்பார் வருந்த
கடப்பார் அரிதாய் கதவு திறந்தார்"

"அத்தனை ஆதங்கம் அண்டி பிழைப்போரே
பித்தனை போலென்னை பெற்றவன் போல்தன்னை 
சுத்தமாய் உள்ளுடுத்தி சூழ்ச்சியவிழ் மாயவன் 
சித்தனின் காடுஇது சீற்றமுற தாங்கா(உலகு )"

"கோட்டைசுவர் மேலமர்ந்து கொக்கரித்து நின்றான் 
ஆட்டகளம் கண்டிடாதன் ஆட்சிதனை கொண்டான் 
நாட்டினிலென் மக்களெல்லாம் நாதியற்று நிற்க 
கூட்டினிலே பட்டினியாய் குற்றமென்ன செய்தாய் ?"

"அந்தரத்தில் ஆடிடுதே அகமனதின் தோற்றம் 
சிந்தனையும் கூடிடவே சிலைவடிவாய் மாற்றம் 
சந்தித்த பாக்கியமே நான்பெற்ற கொற்றம் 
வந்திறங்கி ஆடுகிறான் மாயவனின் தோட்டம்"

"ஆலயம் தாண்டி வந்து யாரென கூறிசெல்லு
ஆதியும் தானென நீ ஆணவம் ஆளநில்லு"

"மெய்யும் பொய்யும் கலந்ததுவே 
செய்கை பொய்க்கா கலந்தனவே
பொய்யால் மெய்யை கலந்திடவே
மொய்க்கும் பொய்கள் கனவெனலாம்"

"கொட்டி தீர்க்க கோடியுண்டு 
          கோலம் தீரா பாரமுண்டு 
வெட்டி பெயர்த்த வேருண்டால் 
          வெள்ளம் வடிய வாய்ப்புண்டு 
சுட்டி கேள்வி வியப்பன்று
         சூடும் மல்லி மலரென்று
தட்டி திறவும் கதவண்டி
         தானே தகர்த்தல் தரமுண்டா"

"கற்றிட வேண்டி எண்ணம் 
        கருத்தினை ஆள வேண்டும் 
பற்றுதல் தாண்டி வண்ணம் 
        பழகுதல் அமைத்தல் வேண்டும் 
சற்றெனை அடக்கி உண்ணும் 
        சலனங்கள் அமிழ்தல் வேண்டும்
கொற்றவன் ஆண்ட திண்ணம்
        கொடுத்தெனை ஆள வேண்டும்"

"அழகினிற் அகங்காரம் அற்றதொரு 
        அலங்காரம் அமைத்தே அன்பொழியும் 
அவனியே அடைக்கல(ம்) அன்னையே 
        அடைகாக்கும் அழகாம்சம் ஆண்டவள் 
அளவினிற் அகங்கொண்ட அன்றெழ
        அதிகாரம் அமைதிநிலை அந்திவிழும்
அலைபோலே அதிகாலை அர்த்தமெய்
       அழகாடும் அளவெழுதும் அந்தரத்தான்"




சிறு குறிப்பு : முகநூலில் எழுதியவை இவை அனைத்தும் சுவைத்து பகிருங்கள் தங்கள் மேலான கருத்தை 

கந்தன் வருவான் ...!


கந்தனை போற்றி பொழியும் தமிழ்மறை
சிந்தனை ஊற்றுள் தவழும் மழலையாய்
சந்தம் அழகுடுத்தி சாந்தமெய் சூடுவன் 
பந்தம் பழம்பிரித்து வர
சொந்தம் எனதென்று அன்பும் அளவற்று
சிந்தும் மனதேரில் மக்களுனை காணும்
அழகனே ஆறுதலை அர்த்தம் முழங்கும்
பழம்நீ சிவஞான பழம்நீ
போற்றி நினைவெலாம் ஊற்றி உயர்பெரும்
காற்றுள் குழைத்தேனே வீற்று வளம்வரும்
சண்முகா செந்தமிழ் செண்பகப் பூச்சூடி
கண்ணுனை காணவே வா
-மோ.தினேசுகுமார் -

நானெங்கும் சிவனைத் தேடி


நானெங்கும் சிவனைத் தேடி
         நாளெங்கும் அலைந்தேன் வாடி
தானெங்கும் நிறைவேன் வா,நீ
         தன்னுள்ளம் புகுவான் ஞானி
நான்வென்று நகரும் மேனி
         நில்லாது இறைக்கும் கேணி
தானென்ற உணர்வை தாண்டி
         தாயுமான சிவனைக் காணும் 

நித்திரை ஆண்டது போதும் 
         நர்த்தனம் ஆடிய நாதா 
சித்திரம் கண்டது போதும் 
         சட்டென சூடிட வாரும் 
சித்தனும் தங்கிட உள்ளம் 
         சிந்தனை தாங்கியே ஆடும்
நித்தமுன் சத்திரம் தாண்டி
         நாடகம் கண்டிட வா,நீ

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி