புதன், 24 ஆகஸ்ட், 2011

அன்றிலொடியும் நிழலே ...!


அன்றிலொடியும் நிழலே நின்றிலா
மனமே நிகழு நிலவினில் நீந்தும்
நினைவினி லாளும் சித்திரமே சட்டென
சுட்ட சங்கடச் சூழ்.....
விட்ட மதியில் கூர்விழிப் பதிய
அங்கமதி சங்கமத்தில் சூழ்வதெல்லாம்
நாற்கடந் தூற்றே நடை பழகி
தவழும் இதனச் சூடு
மிதமெனத் தகலும் இரவுத் துகிலும்
இடைதனி விடுப்பும் தகன மடுவென
தகிடுதாம் அரனக மரகன சினமது
விழித்தெழ மருகுதெனிலே
மகிழ்ந்தெழுவட்டில் மிகனுடை மலையே
கரணம் எரிச்சூடி தருனம் விருந்தாகி
அருந்தும் அவைச் சாடிய மருந்தென
தட்டிய மதுவினயக்கம்.....

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

யாரறிவார் ...?


கண்ணே என் கண்மணியே
மழலைப் பேசும் பைங்கிளியே
என்று வருவாய் உந்தன்
தாய் தந்தையின் முகம்காண
இப்பூவுலகில் உந்தன் வரவுக்காக
நாமிருவராக உள்ளோம்
என்று மூவராவோம் சொல்வாயோ
எந்தன் பச்சிளம் கண்றே

ஊரார் பேசக் கண்டேன்
ஆணாக பிறப்பாயோ
பெண்ணாக பிறப்பாயோ - என
யாரறிவார் அவர் தம் பிறப்பை
தாய்மையின் கருவறையில்
உதிக்கும் ஒவ்வொரு
மழலையும் பெண்ணாகவே
முதல் உரு எடுக்குமென்று
யாரறிவார் ஆணும் பெண்தான்
நமை ஆள்பவனும் பெண்தான்....

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அந்தரத்தோணியில்.....!


காணா கருவிழியானோ தானே நகலுருவோனோ
சாரம் சலங்கையின் சகனெனும் நகமரியோனே
தாகத் தரணியில் வேகத் தடையெனும்
நாத நடனுருவே சரணம்..

சுயமெனுமுகமெரி சுகமெனுமுகமறி
பிறவணி சூடும் மகத்துவ மாலை
சரீரக் கூடு சமைத்துடன் கோரு
சகதிகளற்ற சாதகமாகு..

சங்கதிக்கேளேன் சரீரமானேன்
சகலமும் இழக்க சடலமுமானேன்
அகிலமும் விரட்ட அந்தரத்தோணியில்
நர்தனமாடிய நான் யார் .....?

புதன், 17 ஆகஸ்ட், 2011

விளையாடலாம் வாங்க.....


வட்டமிட்டு கொட்டு கொட்டி கூடி
விளையடிய காலம் எங்கே கண்
முன்னே நிழலாடுதிங்கே தனித்த
பறவையாய் தகித்த உள்ளங்கள்
கணினி கூடுக்குள்ளே முகமறியா
நட்புக்கள் வட்டம் சூழ கருவாகி
உருவாகி உயிர் பெற்று இன்று
உலகத் தமிழர் முன்னே
தவழுதிங்கே தங்கள் மதியை
தட்டி தரம்பார்க்கும் தங்கமெனில்
தகுந்த தன்னடக்க வெகுமதியளிக்கும் .......

புதிர் போட்டித் தளம் உருவாக பாடுபட்ட அனைத்து டெரர்களுக்கும் இனிய வணக்கத்துடன் கூடிய நல்வாழ்த்துக்கள் ......

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆட்கொள்ளேன்....!


வலிகள் ஆழமாய் ஊடுருவிச் செல்ல
உணர்வுகள் நங்கூரமிட்டு நரகமெனும்
நகரொன்ரை காண்பிக்கிறது துயரெனும்
துகிலுரிப்பாயோ உள்ளில் ....

கண்டுகொள்ளா கள்ளனின் பார்வையிலே
பாவை மயிலே மெல்லென நடைப்பழகி
சொல்லெனும் சாரம் தாழ்த்தி வில்லினின்
அம்பாகி ஆட்கொள்ளேன் அடியவளே .......

நிறைந்தென்னில் நிலைக்கொண்டாய்
வளைந்தென்னில் மலர்ச்சூடி மனம்கொண்டு
குணம் வென்று அகம் கொன்று - நில்லா
ஓட்டத்தில் தவழும் மனமே ....

தொங்குவார் சடலத்தே மங்குவார் வயதணியோர்
வாரனின் மாயமெனில் தங்குதாம் இலைதனில்
மறுவுரும் சாடையாய் மனமதில் சோலையாய்
கருவுறும் காண விழைவு

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

நடமாடும் பிணம் நாமடா .....! மீண்டுவரும் வதம் ....!நாடோடி வாழ்க்கை தானடா..!
நடமாடும் பிணம் நாமடா..!
நயவஞ்சகம் நம்மில் ஏனடா..?
நடைபாதை வஞ்சம் தீர்த்தால்
நமக்கு பாதை ஏதடா..?

பனைபோல வளர்ந்திருக்கும்
பாதை மறிக்கும் பேராசை ஏனடா..?
பணம் பறித்து பழிசுமந்து
பகையாலும் உள்ளம் கொண்டு
பாசமில்லா வேஷம் ஏனடா..?

மலர் கூட சிரிக்குதடா..!
மதிகெட்டு மானம் விற்று
மாயையான வாழ்வை விட்டு
மரணித்து கிடக்கையிலே
மலர் கைகொட்டி சிரிக்குதடா..!

தனையாலும் எண்ணம் நம்மில்
தரங்கெட்டு தடுமாறி போகுதடா..!
தடை விதித்தால் நலமுண்டு
தகரம் கூட தங்கம் தானடா..!
தட்டி தரம் பிரித்தால் - நம்மில்
தங்க குணம் ஏதடா..?

குரல் கொடுத்தும் திருந்தவில்லை
குணம் மாற குறையுமில்லை
குறிபார்த்து நோட்டமிட்டு
குழி பறிக்கும் வேலை ஏனடா..?
குள்ள நரி நம்மில் தோற்குமோ..?

கள்ளனுக்கும் மனமுண்டு
கரைதெரிந்தால் குணம்பெறுவான்
கண்ணீரும் வருவதில்லை
கரை ஏனோ தெரிவதில்லை
காட்டாற்று வெள்ளம்போல - பலர்
கண்ணீரில் உயிர் வாழும்
கலங்கமுற்ற வாழ்க்கை ஏனடா..?

கலியுகம் : தனிபட்ட நபர்களை பற்றிய வரிகள் அல்ல நம்முடைய அரசியல் சாக்கடை வாசிகளை பற்றியது பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவு கொடுங்கள் நண்பர்களே ... கலியுக வதம் தொடரட்டும்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

பெண்ணவள்....!


பெண்ணவள் பேறுபெற்றவள்
கண்ணவள் காணும் உலகினில்
பெற்றவர் கரம்தனில் முத்துச்
சிலையால் பவழ விழியால்
தாய்மடி புரண்டு தாய்ப்பால்
அருந்தி தவழும் வயதினிலே
மெல்லச் சிரிப்பால் அழகணியாள்

சொல்லத் தொடுப்பாள் சித்திரம்
போலே எண்ணி நடப்பாள்
பள்ளிச் செல்லும் காலமிதோ
அன்னியர் கண்டு வியப்பால்
காலமேந்தி கட்டுழலும் சூழ்ச்சி
பட்டுவண்ணம் பட்டெழும்
சுற்றமறியா புன்னகைப் பூ

சூழல் அறிவாள் எத்துணை
எமைக்காக்க அத்துணை
கரம் நழுவ கண்ணாளன்
கரம் தழுவ இத்துணை
நீளும் எங்கும் சுற்றும்
புதியவர் கற்றும் அறிந்திலார்
அன்பும் பண்பும் அவைகாக்க

சூழ்நிலை மாற சூழ்ட்சிகளோ
ஆள பெற்றுயிர் ஏந்தும்
காட்சிகள் மாற மாசிலா
மரிகொழுந்தாய் மகவை காண
படியேறி பட்டதெல்லாம்
பரண் மேலே பொட்டலமாய்

போர்களம் மறைய பொற்காலம்
துவங்க அன்னையாகிறாள்
மழலையின் மொழிகேட்டு ......

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

காணுலகு கயலுருவே ...!


ஏனோ என்னில் எண்ணி விதையுண்டாய்
காணுலகு கயலுருவே கரந்தன்னில்
நீயுருக மாறுமெனில் நானிரக நலம்
கொண்ட மாய வலை

சாதகரும் வேதகரும் நினைத்துன்னை
நிலைக்கொல்லா தவமிருக்க நவமாடி
நலைத்தேடி வயம்பாடி அலைபோலே
அகத்துள்ளே ஆழ்ந்துள்ளேன்

வான் நிலவே நன்னில மானினமே
நினைக் காண ஏனோ என்னிலேதோ
மறித்து மயங்குவதன்ரே நாளும்
நகையாடி நலம் கொள்ளேன்

நிலமொன்னில் களம் என்னில்
விளையுண்ட விதைக் காணீரோ
விலைக்கொண்டு நலம் காணீரேன்
விளைக்கண்ட விதியவனின்

மதியவனின் மயக்கமென்றோ
சதியவனின் சங்கமத்தில் சரி
நிவார அனல்காணும் நல்லேந்திய
சகநரக வாழினி வேனோ ............

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி