திங்கள், 20 டிசம்பர், 2010

காணாத என் கண்மணியே ..!


கனவாக கலையாது
காணாத உன் உருவம் .!
நினைக்காத நாளுமில்லை
நீ வாழும் உள்ளமிது .!

எனை யாலும் கண்மணியே
நீ எங்கிருக்காய் கூறிவிடு ?
கடல் கடந்து நானிருக்க
காணாது தேடினாயோ !

காற்றாக பறந்துவந்து - என்
கண்மணியின் கரம்பிடிப்பேன்
மலர்கொடுத்து மணம்முடிப்பேன்
உன் மன்னவன் நான்தானென்று

மெய்யுரைத்து கூறுகிறேன்
பொய்யுரைத்தேனும் காதல்
கொள்வாயோ ?
காணாத என் கண்மணியே ..!

டிஸ்கி : என்ன காதலுக்கு போயிட்டேன்னு யாரும் நினைக்க வேண்டாம் நம்ம முறைமாமன் கார்த்திக் பங்காளி காதல் கவிதை எழுத சொல்லி அழைப்பு விடுத்தமையால் வந்த விளைவு

23 கருத்துகள்:

Chitra சொன்னது…

கனவாக கலையாது
காணாத உன் உருவம் .!
நினைக்காத நாளுமில்லை
நீ வாழும் உள்ளமிது .!


...Super! Super!!!

வைகை சொன்னது…

என்ன காதலுக்கு போயிட்டேன்னு யாரும் நினைக்க வேண்டாம் நம்ம முறைமாமன் கார்த்திக் பங்காளி காதல் கவிதை எழுத சொல்லி அழைப்பு விடுத்தமையால் வந்த விளைவு /////////////


பங்கு நம்பிட்டோம்!!

ம.தி.சுதா சொன்னது…

////மெய்யுரைத்து கூறுகிறேன்
பொய்யுரைத்தேனும் காதல்
கொள்வாயோ ?/////

மொழி வார்ப்பில் சும்மா பிச்சு உதர்றிங்களே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எப்ப உங்களுக்கு கல்யாணம் ஆகும்?

Kousalya சொன்னது…

அட நல்லா இருக்குங்க கவிதை...! தொடர்ந்து எழுதலாமே !!

Arun Prasath சொன்னது…

நல்லா இருக்குங்க..நல்ல பீலிங்

ஹேமா சொன்னது…

படமும் வரிகளும் காதலோடு அழகு !

அமைதிச்சாரல் சொன்னது…

கவிதை நல்லாருக்கு..

karthikkumar சொன்னது…

என்னமோ நான் சொன்னதுக்காக மட்டும் நீங்க எழுதல. அத பாத்தாலே தெரியுது. சாரி பங்கு கொஞ்சம் ஆணி அதான் லேட்.

karthikkumar சொன்னது…

கவிதை சூப்பர். படிக்கும்போதே love feel வருது

வினோ சொன்னது…

காதலும் நல்லா தானே இருக்குங்க...

கோமாளி செல்வா சொன்னது…

//எனை யாலும் கண்மணியே
நீ எங்கிருக்காய் கூறிவிடு ?
கடல் கடந்து நானிருக்க
காணாது தேடினாயோ !
//

இது நல்லா இருக்கு அண்ணா ..
நான் இந்த கமெண்ட் டைப் பண்ணும் போது சிரிசிகிட்டே டைப் பண்ணுறேன் ..
ஏன்னா நானும் இத பத்தி நாளைக்கு ஒரு கவிதை எழுத போறேன் ..!

பாரத்... பாரதி... சொன்னது…

//எப்ப உங்களுக்கு கல்யாணம் ஆகும்? //

கொடும் தாங்க முடியலயா?

பாரத்... பாரதி... சொன்னது…

//நினைக்காத நாளுமில்லை நீ வாழும் உள்ளமிது .!
எனை யாலும் கண்மணியே நீ எங்கிருக்காய் கூறிவிடு ?//
ரசித்த வரிகள்

பாரத்... பாரதி... சொன்னது…

//என்ன காதலுக்கு போயிட்டேன்னு யாரும் நினைக்க வேண்டாம் நம்ம முறைமாமன் கார்த்திக் பங்காளி காதல் கவிதை எழுத சொல்லி அழைப்பு விடுத்தமையால் வந்த விளைவு//
கார்த்திக் இப்ப சந்தோஷமா?

தமிழ்க் காதலன். சொன்னது…

எனக்கென்னமோ நம்பறமாதிரி இல்ல நண்பரே, வண்டி எந்த பக்கம் போகுது..... போலாம் ரை .....ரை

ArunprashA சொன்னது…

அருமையான காதல் வரிகள் நிறைந்த அற்புதமான கவிதை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நினைக்காத நாளுமில்லை/////

அப்படியா சரி, நல்லாரு பங்காளி, சீக்கிரமே பத்திரிக்கை அனுப்பி வைய்யி.....!

philosophy prabhakaran சொன்னது…

// என்ன காதலுக்கு போயிட்டேன்னு யாரும் நினைக்க வேண்டாம் //

ஏன் போனா என்ன தப்பு... நீங்க தொடர்ந்து இன்னும் நிறைய காதல் கவிதைகள் எழுதி குவிக்க வாழ்த்துக்கள்...

philosophy prabhakaran சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அப்படியா சரி, நல்லாரு பங்காளி, சீக்கிரமே பத்திரிக்கை அனுப்பி வைய்யி.....! //

கையில குழந்தை இருக்குறதா பாத்தா எப்படி தெரியுது...

பிரஷா சொன்னது…

கனவாக கலையாது
காணாத உன் உருவம் .!
நினைக்காத நாளுமில்லை
நீ வாழும் உள்ளமிது .!

அருமை அருமை நண்பரே...

dineshkumar சொன்னது…

philosophy prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அப்படியா சரி, நல்லாரு பங்காளி, சீக்கிரமே பத்திரிக்கை அனுப்பி வைய்யி.....! //

கையில குழந்தை இருக்குறதா பாத்தா எப்படி தெரியுது...

பிரபா என் கையில் உள்ள குழந்தை என் அண்ணன் மகள் அஞ்சனாதேவி

பெயரில்லா சொன்னது…

great web page. Carry on doing

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி