செவ்வாய், 31 டிசம்பர், 2013

வாழ்த்தி வணங்கும் பொழுது...!


என்னெண்ணம் வர்ணம் குழைத்து எழுதி
நிறப்ப வழிதனை வாழ்த்தி வணங்கும்
பொழுதினைப் போல் வந்துபோகும் யாவும்
பதறாது ஏற்றுக்கொள் வாழ்வு சிறக்கும் ...

வயகாட்டு வேலியெல்லாம் ஆளும் பயங்காட்டும்
வாக்கபட்ட சோலையெல்லாம் வாழ்த்தும் - ஆசை
வழிகாட்ட வாழ்க்கை நெறியுணர்த்தும் தோரணம்
வறுமை நிறங்காட்டும் ஆறறிவர்...

மேய்த்து பார்த்தான் மேய்ப்பன் மெய்யை
மெய்யாய் பொய்யின் புன்னிய அலங்காரம்
புலப்பட பெருந்தியாகம் போர்த்தி பெருகிடும்
தீயுள் வேள்விதனை வார்த்தான் ...

உள்ளவனைக் காண்பதும் உள்ளிலா தவனை 
காண்பதும் நேர்படும் நிலைக்கேற்ப வேறுபட
தன்னிலை கோர்க்கும் அருந்தேன் மருந்தாய்
வருந்தும் வதன மாற்றமே யுனைசாரும்...

கரையா மனதே கரையும் தொடத்தொட
நீளும் தொடராய் படரும் முல்லைக்கு
பாக்யம் சரமேறி கார்குழல் கூட்டில்
குடியாவ தன்று ஒருநாளே...

திங்கள், 30 டிசம்பர், 2013

புதிராகும் பூக்கள்...!


ஆண்டு கடந்ததோ ஆண்டவன் பாக்யவான்
மாண்டு கடந்ததோர் கூட்டமே மக்களெனும்
பக்குவம் யாரறிவர் குட்டகுட்ட குனிந்தே
பிறக்கிறது ஏழ்மை விடியல்...

ஆறடி தானெங்கும் மெய்யே அறியாது
ஆள்வது பொய்யே புரியாத பூவுக்குள்
பூகம்பம் உண்டே உணரா ஊழ்வினை
தாக்குவ தர்மமென நில்லும் நிழல்...

உதிப்பது உனக்கென புலம்பாது ஆர்பரிக்க
விதிபதப் பயனது பிதற்றாது அர்பனிக்க
மதிசுடும் கனமது அதர்ம விற்பதம்
கதிதொடும் கரணமே தருணம்...

வாக்கபட்டு சீர்அமைய நாமதிக்கும் வாக்கிய
வார்த்தைகட்டு உள்ளின் உடையென ஈர்க்கும்
வழிதனில் வார்ப்புகள் வெட்டவெட்ட கோர்வை
கிளையாகும் ஞானக் கலையாதல் அழகு...

ஆடுவ தாடும் படியாடும் கூடும்
குடியாடும் பாடும் படியும் யாதும்
குறையா வதுமேது தீதும் நிறை
காண்ப தரிதென தீரும்...

செவ்வாய், 19 நவம்பர், 2013

வேடம் இனி எனக்கெதற்க்கு ,,,,


 
கட்டி வைத்த கூட்டுக்குள்ளே
கட்டவிழ்த்து பறந்ததடி நித்தம்
பொங்கும் பானைப் போலே
நினைவில் அலைகள் கூடுதடி
சத்தம் போடா யுத்தம் ஒன்று
அந்தி சாய வந்தமரும்
பக்குவமாய் வாக்குப்பட
வாத்தியக் கட்டு வேண்டாமடி
கூட்டுக்குள்ளே குருவிச் சத்தம்
குறுகுறுக்க செய்யுதடி வேடம்
இனி எனக்கெதற்க்கு வேர்வை
தங்கும் மேனியடி கானி நிலம்
காணும் கனா களையாது
காத்திருக்கு கானகத்தே
கரைத்தட்டி பாட்டன் சொத்து
பகிர்ந்த தற்க்கு வீட்டு முக்கில்
விரிசலடி சோறு திண்ணு
நாளாச்சு சோலைகுயிலே
நீ ஓடி வா அருகே....

திங்கள், 14 அக்டோபர், 2013

அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....!


அற்றதிரு என்னில் அடைக்கலம் ஆகிநிற்க்கும்
உற்றதிரு உன்னில் அடக்கிடல் ஆகுமாயின்
வெற்றுத் திருவுடலின் வற்றல் தகுமாயின்
தாகம் புகும் தரணியையார் ஆள்வது

பற்றதிரு தீமூட்டி மற்ற தறும்மகிழ
நெற்றிதிரு செங்கமழ் நீர்தொட்டு எனை
அற்றதிரு ஆடவனாய் விற்றடக்கி வீருகொள்
கொற்றவளே கோலமிடு கோர்வையாய்

கோவை கடந்தறிய கொய்யா சுவையறிய
பாவை படர்ந்தொளிர பாமரனாய் பவ்யமாய்
பார்கடலான் பார்வையுனை ஆட்கொள்ள ஆகும்
அதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....

புதன், 31 ஜூலை, 2013

4.பித்தனின் சமையல்


16.நிறையாகும் திரை நில்ல பிறையாகும்
வல்லன் முறையாகும் வஞ்சம் திகழாரம்
கொஞ்சும் இதழ்பாடும் கோள கடிகாரம்
நின்றாடி என்று நிலைபாடும்....

17.எத்தனிக்கும் போதெலாம் தத்தளிக்க எனை
விடுவான் ஏன் பரஞ்சோதி யாய்படை பாரேன்
நினைவுகள் அங்குமிங்கும் முன்னோடி எந்தன்
நிலையாடை பார்க்க பறந்து விரிகிறது....

18.மீண்டும் உயிர்த்த நினைவுகள் நீண்டதொரு 
காவியம் சிந்தையுள் ஆழ்த்த அமர்ந்தேன்
தேரினிலே ஏகாந்த புன்னகை வேடத்தின்
ஆளுமை பாவித்த வீதிசென்றேன்....

19.இயக்க இசைந்ததும் நீயே உன்னில் 
அசைந்திடும் நாதம் கவர்ந்திடும் வேதம்
கருவே உருவாய் கருணை தருவாய்
கடனே அடைய அகிலமெலாம் ஆர்பரிக்காய்....

20.எங்கழைப்பான் யேது உரைப்பான் யாரறியா
வேதம் உனைசமர்த்த பங்கமுனில் பங்கிடா
பாக்கியஞ்செய் அங்கமிடும் வேடம் குடந்தங்க
உள்ளுருவன் கூடில் அடையாது மெய்சறுக்கும்...

ஞாயிறு, 14 ஜூலை, 2013

3.பித்தனின் சமையல்


11.சூதாட சூட்சுமம் வாதடி வந்தது
சூழலின் சூடும் சுடுமென் றறியாது
வாதத்தின் வாட்டம் உருமாறி உள்ளில்
கருவேரிட வேற்றுடல் தாண்டியும் காணேன்...

12.நில்லாது ஓடிடும் வெண்ணிலவின் பூரணம்
காண கடைக்கண் சிமிட்டி கருவிருள்
தாண்டி எனைத்தொட்டு தாலாட்டி செல்லமாய்
வின்னில் உலாவரும் உன்னதம் காணே...

13.என்னில் அறியாது எனை மீட்டும்
முருகா என்சொல் எடுப்பினும் அச்சொல்
அழகுடுத்தி ஆழ்ந்து வரும் துணையே
தமிழ்குமரா உன்னடி பனிந்தேன் பவணிவா...

14.மனக்கும் மருதமல்லி யேயுந்தன் சந்தமெனை
வாட்டுதடி மந்தம் பிடித்தலைய மாற்றுதினை
போற்றுதுனை மேற்க்கரையை கார்க்குவிய தேற்றும்
நரனல்லோ நான் எனக்கணிய யேதும்தா...

15.நானொரு குரல் பாவை நடனனின்
அருள் பாவை மழலையாய் அழும்
பாரேன் தகித்திடும் தாகம் தனியே
தினந்தோறும் ஓதும்வே தம்புதிதே...

திங்கள், 8 ஜூலை, 2013

2.பித்தனின் சமையல்


6.காட்டி மறைநின்றான் ஏட்டினில் கூறுவ
கேளும் கிடைக்கனலான் காட்டி நிறைச்செரியும்
கட்டுவன் கோட்டையுள் காணாது கிட்டுவன்
காட்டி உனைவடியும் பேராழி உள்ளேயுகம்..

7.முத்தெடுத்தான் முத்தெடுத்தான் மூழ்குதலை தத்தெடுத்தான்
தத்துவம்போல் கட்டிவைத்தான் கொட்டியவை தாம்தம்
அறிய தமக்குரிமை யாதெனவே குட்டுவைத்தான்
கொட்டியவன் தத்தெடுத்த பிள்ளையானை..

8.சத்திரத்து வீதியிலே சங்கமிக்கும் சூழலிலே
வாழியென வந்தால் மழைமுத்து மாரியெனை
வாரிஅணைத் துக்கொண்டால் தேரினில் வேந்தனைப்
போல்திகழ பாடல் பொழியேன் இன்று...

9.பட்டி யிலடைத்தான் பட்டான் படியமுதம்
புட்டி யிலடைத்து விட்டான் பிடியமுதம்
பக்தி யிலடைத்து தொட்டான் முழுஅமுதும்
புத்தி யிலடைத்தால் கிட்டும்...

10.அழகந்தி சிற்பம் அழகேந்தும் ஆலிலை
நீளா நிலையாகி மீண்டுவரும் நாளை
மிகையாகும் பார்வை தொடருந் துனிவு
படரப் பழிதங்கி பார்கடவும்...

திங்கள், 1 ஜூலை, 2013

1.பித்தனின் சமையல்


1.கனிந்ததோ காலை களைந்ததோ கண்டகனா
காணும் இடமெலாம் காட்சி பிழம்பாய்
ஆட்சி சொரூபனே நேரெதிர் சாட்சியாகி
நில்லானே சங்கடந் தீர்க்கும் மருந்தாய் ...

2.கந்தனை காணுமிடம் வெல்லும் தமிழமுதே
சிந்தனை நாணுமிடம் வெல்லும் கவியமுதே
வந்தனை செய்யுந் தொழிலே தந்தனை
போற்றி வழிபாடி வந்தேனே நான்...


3.உச்சி முடிகாண பட்சியான சிற்பன்
வடிதொழிலில் தைத்த வடு நதியாகி
நாணய மிச்சமிதி யாகி மதிசூட
மலர் ஆகிநின்ற பூதவுடலே சொல்கேளாய்...

4.அரிதிரி யென்றான் திரிய திரியாகி
தீரா சுடாராகி தீண்ட திருவாகி
தில்லை யுருவாகி திண்டாடி ஆடுறான்
நின்றுமின்று மீராது வாடுதே கன்று...

5.குழிசென்ற தன்கூடே வரியகுழி சென்றதெது
கூறே விரியுமவணி பொய்யுரை பூக்களே
பூத்ததோ புத்தகம் ஆதலின் ஆதலுடன்
வித்தகன் ஆக கடவது உன்மெய்...

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

எங்கும் நிறைந்தவன் எங்கும்.......!


பொய்யெனும் வில்லேந்தி மெய்யெனும் நாணேற்றி
மாசிலா அம்பெய்த போர்களத்தே போற்றுமின்
ஏற்றுமெனை தாழ்த்தும் தரமே நிரந்தரமே
யாசித்து ஆவாகித்த பூஞ்சுடர்....

 
அங்கென திங்களை சுட்டி நிலானென்
தங்கிடும் சூதனன் வெற்றிட தேரினில்
வட்டிட பாரினில் நிர்பந்த சூழலேன்
சொல்லிடை பூவாகி மெல்லென தீர்வாகி....


மாதவ கோடரி மான்விழ காடேரி
சாதக சூடேரி மீள்வதரி தீர்க்கதண்டம்
தீதில் பகுதியான் வேதர்க்கு வீதியன்
மாதர்க்கு மழலையான் சூதனன்....


ஊழிக் கணையானே ஆழிக் கடிவாளா
நாழி நிறுவோனே ஆதி முதலானே
அச்சு ததிருமானே உச்சு தலைகாணான்
மிச்சமென வடித்த உள்உணர்வடி வாகிநில்....


துரும்பினில் தூய அருளனைக் காண
அரும்பிய மாலை மதமெனும் காரிருள்
மாமதை தேரினில் உண்மை உருவற்று
காணாது எங்கும் மிதிபட்டு வீழினமானேன்....

வெள்ளி, 22 மார்ச், 2013

இனியேனும்....? இனிமை தாரும்....!


 நான் வேண்டும் வரம் தா ... ! இறைவா... !
வரம் முழுமைப்பெற வாக்கினிலே நீவா...!
நாவினில் சூடிய... ! உன்னால் நரனாக
எட்டுதிக்கும் என்இனம் படும் பாட்டினில்....?
கேள்வித் தீ மூட்டி... ! கேளாயோ ... ! உந்தன் உள்ளில்
மாறாதே ... ! வடுவங்கு நினைமாற்றி நீட்சிக்கொள்ள
ஆத்திரம் கொண்டு உந்தன் நா ... ! விரட்டும் வரம்தா ...!
நாதனாய் மயங்கி ஆடவிடு...! ஆடவிடு ....!

நாளையை எண்ணி ... ! என்னில் கோர்த்துவிடு  ....


கூட்டினுளும்..! காட்டினுளும் ...! கூட்டமாய் வீரர் ..!
வதையில் விதையாகி...!  செந்தமிழெனும் தீச்சுடராய்...!
வீரம் துளிர்விட ....! துரோகத்தீ ... ! அருகாமல்
தூரத்தே தூற்றி ஆழ்த்தும்...!  பிறைசூடா ... ! 

இனியவனாய் இனியேனும் இன்னாரில் தர்மம் 
காக்கும் செந்தமிழர் குலம் செழிக்க ...! ஆதரவு தாரும்
இனமக்களுக்கு இனியேனும்....?  இனிமை தாரும்....!

புதன், 6 மார்ச், 2013

தமிழே ...! அடியவன் பாடிட அமுதென வாராய்...!

தமிழே ...! அடியவன் பாடிட அரியவன்
ஆடிட அழையாய் அணியே நதியாய்
புறல புயாலய் அகல திகழவனை
தீண்டிட வாராய் மெய்யமுதம் தாராய்.....
ஈடேது சொல்லேன் நவமணி நாயகன்
திருவடி போற்றி திகழும் மனமடையும்
ஆனந்த கூடெந்தன் கூரே குயவனின்
கூட்டிசைக்கு பாட்டிசைக்கும் பாரேன்....
காடு விடுமென்னை காணேன் கனவே
கரிய நிறமேறி மாளாய் மதம்கொண்டு
விண்ணெட்ட மண்தட்டும் வீனனிச்சிறி யோனின்
மதியெட்ட மாதவனே நீவா....
சிலிர்த்தெழ சீர்படை தீட்டி யுகம்ஒத்த
யோகநிலை வீரா மதியேந்த மாறா
மனமுவந்து வாராய் கெதிகிட்டா பாவியுந்தன்
பாதமதில் வீழ நிலையாழ்ந்து தீரும்....
ஊட்டிக் களிப்பாள் தவழுமெனை தேவி
சீராட்டி தாலாட்டி நல்வினைதனில் தேற்றியே
அள்ளிமுகர் வாள்அகம் கிள்ளி இழுக்கினை
களைவாள் இளமதியென் தாயே.........

சர்வேசா........!

அடி ! அம்மாடி நீயெந்தன் முன்னோடி 
நானிசைய நாவழையும் தாகம் தலையாட்டி
தேரடியை பாராய் பவமணியும் பாரம்
பராபரமே நாற்புரம் சூடா மலராய்

முழுமை அறியாமல் மூழ்கி தவிக்க
நிறையா மதியும்மதி ஆழும் மயக்கமதில்
மாயனெந் தன்மாயை ஆளும்மா றுதல்காணே
நேருடல் வேரிட ஆறுதல் ஆனேன்

மருவிமா யாவி குருவிகூடு தாவி
மகுடியிலி சைக்குதென் மாயை மறுபிடி
தாங்க மையலுன்னை மீட்டதா வணியில்
தலைமலர் பாவண்ணம் பாட

நானாடும் நாட்டிய மேடையுடன் தானாட
தள்ளாடும் தாளகெதி திண்டாடும் பாதமலர்
சொல்லாடும் சிங்கார பாலமுத பாவை
பரியமர சாலையுந்தன் சாரமே சர்வேசா........!

திங்கள், 4 மார்ச், 2013

காதல்(லை) படுத்தும் பாடு.....!



கசக்கி பிழிந்தென்னை காக்கும் கவியமுதே
காதல் விதைத்து உருகும் மணியமுதே
மாரிம ழைக்கொதுங்க இரையும் இசையமுதே
ஈடென்ன கேளேன் இனிது

 
மனங்கட்டி நாபேச தூதுபோ சொல்லுங்
கிளியே சிலையெட்டும் காரியமே மெல்லுங்
குயிலே மணமல்லி மாலையிட வெல்லுங்
கலையே கனவனைத்தும் கூட்டி


மயங்குது மல்லி மனமது தள்ளி
இயங்குது சொல்லி - மனமள்ளிஎ டுத்தானே
கள்ளி திகைத்தாளே எண்ணி நகையும்
சுவையான காதல் சுகப்பட


சந்திர மோகத்துள் மந்திர மாள்வது
தந்திர சேதிகன் சுந்தரமா வதும்நா
சிந்துமது சொந்தமணி வேடம் தனியா
இவைக்கு இரவது ஈவு


ஏழெட்டு கனியாக் காதலினை பார்த்ததுண்டு
ஏழைக்குள் ஏனிங்கு காதல்வித்து சாதலின்
ஆளுமை ஏற்றிவந்து நேசத்தின் பூட்டுக்கள்
தானவிழ்த்து தாலாத பட்டிக்குள் ஆடியடக்க
ம்
 

சனி, 2 மார்ச், 2013

ஞானத்தை தேடி நலவானே நானும்....!

ஞானத்தை தேடி நலவானே நானும்
மானத்தை வேதம் சுடுமது பாரீர்
மனவத கானம் மலிவது சூடும்
மனமிகும் தானம் ஆகு.........


 யதார்த்தமாய் என்னை தேடிய பாதையில்
கொட்டிய குவியலாய் முத்துக்கள் மூலையில்
மூலனே முடிவிலா எண்ணத்துள் சிக்க
தினமங்கே ஓர்பார்வை பாவையாய்..........


கார்பெருங் கொண்டல் கயவனும் உய்ய
உதயனைம றைத்துமாரி ஊற்றாகி நேற்று
உபயம்செய தேக்கிடம டைத்தான் உரியனாகி
பார்க்கடல்ப டுத்தானை போற்றிட தூற்றான்........

  
பிறப்பினி ஏதோ மறவா இறப்பினி
மெய்க்கு உழப்பனி செய்திடு மறப்பணி
வேணோ இருப்பினி இந்தும் சகலமும்
சார்ந்துயர்த்த அகலும் கோணல்......


ஆற்றிலிடு வான்தேற் றிஅணைவான் போற்றி
உடையாள் தீட்டிய நாட்டிய மேடை
தடையேன் தவழ்ந்து தரணி யிலுருவாய்
தாளமி சைக்க அசைந்துயர்ந்து வாநீ........

 

வெள்ளி, 1 மார்ச், 2013

அருந்தவம் செய்யினும் காணா...!


சித்தனாகி போயின் புலப்படும் வெற்று
பிதற்றங்கு பித்தனாகி நானே பிழையேன்
முழுதுமெனை குற்றமாக்கி தீண்டா சாரமதை
சுத்தமாக்கி தாயென நில்லும் உலகு


மாதவம் சூடிநின்னை காண முதலென்ன
தாராய் பிறைமதி சூடா மனதினில்
வாடா மலராய் துளிரும் அனைப்பு
அருந்தவம் செய்யினும் காணா...............


நாறமலர் தேடினின்னை சூட்டுவிக்க வந்தவிழும்
சொந்தமதி முந்துமிடம் சிந்து நடனமாட
கார்வலுவன் நேரெதிரே கண்ணமிடை சிந்துமிதழ்
தேனமுத வண்ணக்கோலம் பாட.......
 


மெய்யுருகும் மேட்டில் கல்லுருகா காட்டில்
கரிய நிறவேடா கர்மமெதிர் தீர்க்கும்
கடுந்தவனே கூடும் கருணை வழித்தேராய்
கண்ணதிர கூறும் கடமையுந்தன் பாடே............


கொண்டனவே அஞ்சும் அகழியில் கொஞ்சி
விளையாடிடும் தங்கமுந்தன் சேயாம் சகடும்
அகன்றிட ஆற்றிடை நாதிகன் தேற்றிடும்
கூடு குவியலாய் மாயமெய் தானே............


பட்டத்து யானையும் கொட்டத்தில் கூடுமோ
சட்டத்து சாட்டையும் விட்டத்தில் தூங்குமோ
இட்டத்தென் தூவள் இயக்க மதிமாறியே
சுட்டதன் சூடு பிடித்தான் முடிவு..............


  

புதன், 20 பிப்ரவரி, 2013

மறையெந்தன் கூடே...!

 
அன்றென்ன காணேன் அகமுடை நின்றன்ன
தாநீர் மழைதருந் தீயனதீண்டா தாகையான்
கண்ணமிடை அன்னமலர் தாங்கிநின் ரானைவிதி
ஓங்கி துதித்தானே ஓரன்மன் காணே............
அணியனா ஆருதல்இ டுவனா கெடுவன
ஆற்றி தடுவன காட்டினில் கூடினின்
ஆடும் நெடுவனன் தோற்றத்தில் யாகின
யாவும் அடங்கிடும் சாரமுள்ளே........
தடவரை தாண்டி எதுவரை ஓடும்
தடமரை தேடி யுடுத்தும் அணியாய்
மணியே மரகத மாணிக்க சித்தம்
தொடுவுரை காட்டும் உனையே............
 
புரியா புதிரொன்று கூறேன் அறியா
மறையெந்தன் கூடே நிறையா மடமென்றும்
காணேன் கனவிடும் ஈர்ப்பினி யாளும்
இரவணி போர்த்திய தேகம்....
 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இனிவருவேன் வாசம்நாடி...!





 ஊர்விடிய ஓர்வழியாய் நாதனிடம் நாடி
நலமெனவோ நாள்காட்டி தீக்காய மீட்டி
சுடரவனே சூழுமினி சூழலினை மாற்றி
நடைபோட வைத்தவன் தேடினின் மாயம்



 உதிர்ந்த மலரங்கே பேச மனமங்கே
மாலையொன்று கோர்க்க தினம்வந்து தீயாய்
எழுத்தை திரிதனில் மூட்ட முடிவாய்
மலைமுகடு போலங்கும் வீழ்ந்தேன் வீனே


நேற்றுவரை தோல்வியெந்தன் வாசல் இயலாக
காற்றுவரும் நேரமென்னை தூற்று கனியட்டும்
நாளை கனவிருண்டு பாரமங்கே காரியமாய்
காலை உதயம் எமக்கென வேண்டும்தா

 
நாடகக்கார னென்று நகைத்தேன் தேகத்துள்
ஊடகமொன்று பெட்டிக்குள் ளடங்காத சித்திரமாய்
ரத்தின மாலையிட்டு எத்துனை வேடங்கள்
சத்திரத்து சோறுண்ணும் சாரதிக்குள் நீதி


இனிவருவேன் வாசம்நாடி சிலையெல்லாம் சில்லென
வீருகொண்டெழ வீதியில் நாட்டிய மாடிடுவேன்
கட்டிய மூட்டையில் மீதியில்லாது நாதிய
தாண்டவம் மீண்டுவிழ நீர்க்குமென் ஆதி 
 

சனி, 26 ஜனவரி, 2013

தீர்மானம்...... ?

ஒத்தையடி பாதையிலே போரவலே
எங்குயிலே செத்த நேரமுன்னால
செய்தி யொன்னு போட்டானே
நெசமாலும் தீருமா இல்ல நம்ம
காவிரியாட்டும் பகையாளுமா சொல்லு

கட்டிவச்ச கல்லு மச்சுசான் நீ
சுத்தி சுத்தி வந்தாலும் மத்தியிலே
செக்காட்டும் சங்கதியோ சுத்தமில்லே

ஆளுக்கொரு தீர்மானம் நட்டுவச்சு
யாருக்கென்ன தெரியுமுன்னு கட்டிபுட்டான்
பேருக்கொரு கலருல துணிய

துளியும் துவட்டாத துண்டது
கண்டதும் காரியம் வீரியம் பேசும்
சாதியும் சகதிக்குள் ஆட்டம் போடும்

வம்பெதுக்க வரிஞ்சுகட்டி ஆட்டமாட
காளையெல்லாம் அடிமாடாய் எங்கும்
தங்குமிடம் கள்ளுக் குடுவை எல்லாம்
அவர்க்கு இலவசம் இலவசம்

வசமாய் விரிச்ச வலையில்
வலிய வந்து மாட்டிக்கிட்டு
நெசமாய் மாறும் என் தேசம்
என்று கொடிக்கட்டு கொடிக்கட்டு................

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி