புதன், 27 ஜூன், 2018

தொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்

வீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து . 

இப்படிதாங்க நம் உடலுக்குத் தேவையான வைத்தியம் நாம் உண்ணும் உணவிலும் உண்ணும் முறையிலுமே மறைந்திருக்கிறது. நம் உடலில் பல சுரப்பிகள் உள்ளன அந்தச் சுரப்பிகளின் இயக்கங்கள் முக்கியமானது இயங்காமல் போவதினால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு வியர்வையையும் இரத்தத்தையும் எடுத்துக்குங்க உடலில் இரத்தம் சுரக்காமல் போனால் என்னாகும் என்ன ஆகும் ? வியர்வைச் சுரக்கமால் போனால் என்ன ஆகும்?
கம்பஞ்சோறும் மோரும் 


என்ன ஆகும் உடம்பில் இருக்கும் இரத்தம் சுற்றிச் சுற்றி வந்து கெட்டுப்போக ஆரம்பிக்கும் இரத்தம் கெட்டால் என்னாகும் உடலின் பாகங்களுக்குத் தேவையான சக்திகள் கிடைக்காது, சக்திகள் கிடைகாமல் போவதால் உடலின் பாகங்கள் வலுவிழந்துபோகும் மொத்த உடலுமே திடமற்றுப் போகும். பலபலத் தொற்று நோய்கள் எளிதாக உடலைத் தாக்க ஆரம்பிக்கும். இதெல்லாம் எதனால இரத்தம் சுரக்காமல் இருக்கும் இரத்தமும் கெட்டுப் போனதினாலே. இரத்தம் கெட்டுப்போனால் எல்லாம் போச்சு அதற்கும் வைத்தியம் பார்த்தால் சரியாப் போகும்னுச் சொன்னா அதுதான் தவறு.


இரத்தம் சுத்தமாக மருந்து மாத்திரைகளால் தான் முடியுமா ? அப்படியானால் நாம் உண்ணும் உணவின் பங்கானது என்ன நமது உடலில் ? இப்படிப் பல கேள்விகளை அடுக்கிட்டே போகலாம், பதில் தான் கிடைக்காதுச் சரியாக . சரி நான் ஒன்று சொல்கிறேன் கேளுங்க. பிறந்த குழந்தைகளுக்குச் சில உடல் உபதைகள் உடலுறுப்புகளின் வளர்ச்சி அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமென்று மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருப்போம், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருப்போம் மேலப் போனால் புலம்பிக் கொண்டிருப்போம்.



கேழ்வரகு அடை

ஆனால் சில மருத்துவர்கள் குழந்தை நல மருத்துவர்கள் சரியாகச் சொல்லுவாங்கப் பாருங்க, ஆமாம்ப்பா, குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்கு இல்லைன்னுல ஆனால் இது தானாகச் சரியாகும் தாய்ப்பால் சரியாகக் கொடுக்கச் சொல்லுங்க என்பார் . எவ்வளவு பெரிய உண்மையை மிகச் சாதாரனமாகச் சொல்லிடுவார். உண்மையும் அதானுங்கத் தாய்ப்பாலுக்கு இணையாக வைத்தியம் அந்தக் குழந்தைக்கு எதுவும் செய்துவிட முடியாதுங்க. இன்னொன்றுக் கவனித்தீர்களென்றால் எல்லாம் விளங்கிவிடும் இனி யாரும் வைத்தியம் தேடிப் போகமாட்டீர்கள். 

குழந்தைக்குத் தாயானவள் தரும் தாய்ப்பால், அன்னைத் தன்னுடைய இரத்தத்தையே பாலாக்கித் தருகிறாள் . இரத்தம் இதைப்பற்றித் தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், தாயானவளின் உடலில் தானுண்டச் சத்தான உணவுகளை இரத்தமாகவும் பாலகவும் மாற்றுகிறது. அப்போ இரத்தம் சுரக்கத் தேவையானதெது ஆரோக்கியமான உணவு . ஆரோக்கியமான உணவு மட்டும் உண்டால் போதுமா ? ஆம் போதும் அதை உண்ணும் முறையில் மட்டும் சில வழி முறைகளைக் கடைப்பிடித்தால் போதும் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம் , இதுதான் வாழ்க்கையென்றாகும் வாழ்வாதரமென்றாகும். 

பழையச் சோறும் மோரும்

பசி எடுக்கும் பொழுதுச் சாப்பிடுங்க, தாகமெடுக்கும் பொழுதுத் தண்ணீர்க் குடிங்க எதையும் தள்ளிப் போடாதீங்க , வருதாப் போயிடுங்க எதையும் வச்சிக்கவும் கூடாது எதுவுமில்லாமலும் இருக்கக் கூடாது. நேரத்துக்குத் தான் சாப்பிடுவேன் என்ற அட்டவணையெல்லாம் தூக்கித் தூரப் போடுங்க . சாப்பாட்டை வாயை மூடி நன்றாகச் சுவைத்து மென்று கூழாக்கித் திரவப் பதத்தில் உள்ளே அனுப்புங்க (தொட்டில் பழக்கம் ) தண்ணீரையும் சுவைத்து மென்று பொருமையாக அருந்துங்கள் எதற்குமே அவசரம் வேண்டாம். சாப்பாட்டிற்கு முன்னாலும் பின்னாலும் அரை மணி நேரத்திற்குத் தண்ணீர்க் குடிக்காதீர்கள். 

திடப்பொருளாக உணவை உள்ளே அனுப்பாதீர்கள் ஏனென்றால் செரிமானத்திற்குப் பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும், செரிமானப் பிரச்சனையென்றால் இரத்தத்திற்குத் தேவையான சக்திகள் சரியாகக் கிடைக்காமல் போய்விடும் ஆதலால் நீடு வாழ உணவு உண்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். எதுவும் எங்கும் சென்றுவிடாது உடல் ஆரோக்கியமாக இருந்தால் எதையும் வென்று விடலாம். இயற்கையான உணவு அதாவது சமைக்காத பசுமையான உணவில் 100% சதவீதம் முழுச் சக்தியையும் , சமைத்த உணவுகளில் 75% முதல் 50% வரை சக்தியையும் இறைச்சிகளில் 25% சக்தியையும் நாம் பெருகிறோம். 

முந்தியப் பதிவு : வாங்கச் சாப்பிடலாம் 


கலியுகம் : பழைய சோறும் மோரும் பச்சைமிளகாய்ச் சின்ன வெங்காயமும் காலை உணவாய் எடுத்துக்கொள்ளப் பல நோய்கள் நம்மை விட்டு ஓடுமென்று சொல்லி இப்பதிவை முடித்துக் கொள்கிறேன் அன்பர்களே . தொடரும் ... 







2 கருத்துகள்:

Thirumalai Kandasami சொன்னது…

Font ரொம்ப சின்னதா படிக்க கடினமாயிருக்கு . கொஞ்சம் மாத்துனீங்கன்னா பரவாயில்லை.நன்றி .

Nanjil Siva சொன்னது…

இயற்கை உணவின் நன்மையை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் .... பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது ...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி