வெள்ளி, 8 ஜூன், 2018

ஆங்கில மருத்துவமா ? தமிழ் மருத்துவமா ?

அனைவருக்கும் வணக்கம் 
                                     ஆங்கில மருத்துவமா ? தமிழ் மருத்துவமா ? என்ற கேள்விகளோடு இன்றைய பதிவைத் துவக்குகிறேன். பொதுவாக ஆங்கில மருத்துவத்தை நாடவே ஆர்வம் அதிகம் இருக்கிறது என்ன தான் ஆங்கில மருத்துவம் பார்த்து உடனடி நிவாரணம் கிடைத்தாலும் அடியோடு நோய் அழிக்கப்பட்டதா ? என்ற கேள்விதான் தொற்றி நிற்கின்றது மீதம் , வேறு என்னதான் வழியென்று தேடுவதற்கான நேரம் நம்மிடம் இல்லையென்றப் பொதுவான பதில் எல்லோருடைய கையிலும் உண்டு. 

சரீரத்திற்கு என்ன தேவைத் தடையில்லாமல் இயங்குவதற்கு ? மருந்து மாத்திரைகள் இருந்தால் போதுமென்ற நிலையிலே இன்று நாமிருக்கிறோம் கடைசி வரைக்கும் அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்திடுவோம்னுச் சொல்றீங்களா ? கட்டக் கடைசிக்கு நம்மைக் கொண்டு சென்றது மருந்து மாந்திரையா ? சரியாகவே புரிய மாட்டுதில்லைங்க ஆமாம் அதேதான் அடிபட்டக் காயத்திற்கு மருந்துப் போட்டால் சரியாப் போகுது ஆனால் உள்ளுக்குள்ள ஏற்பட்ட நோய்க்கு மருந்துச் சாப்பிட்டுட்டே இருக்கோம் நிறுத்தாமல் இதுதான் வாழ்க்கையா ? இயற்கையா ? செயற்கையா ? 

இன்றைக்குப் பாருங்க ஆங்கில மருத்துவத்திற்கு நீட் தேர்வு எழுதினால் தான் மருத்துவப் படிப்பிற்கான இடம் கல்லூரியில் கிடைக்கும்  என்றாகிவிட்டது. அரசியல் வியாதிகளெல்லாம் சேர்ந்து வாங்கும் கிம்பளங்களால்  ”மருந்தாலும் சாவு மருத்துவம் படிக்க வந்தாலும் சாவு” என்ற புது மொழியை எழுத வைத்துவிட்டனர். நோய்க்கான தீர்வைக் கொடுக்காத மருத்துவத்திற்கு எத்தனை போட்டி எத்தனை போராட்டங்கள் என்று பார்த்தால் ஒன்னுமே புரிய மாட்டேங்குது யார் பின்னிய வலையிது ? ஏன் பின்னப் பட்டது ? பட்டத்து யானைக்கும் வைத்தியம் பார்த்தனராம் தமிழர்கள் . 

காசு சம்பாதிக்கத்தான் மருத்துவம் என்ற நிலையே இன்று அதற்கான போட்டியாக இருந்தால் அடுத்த நுழைவுத் தேர்வுக்காக அவனோ அவளோ தயாராகிவிடுவார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவையென்று களமிறங்கியவர்களுக்கு நுழைவுத் தேர்வே பெரும் தடைதான் . ஏன்னாப் பாமரனுக்குப் போய்ச் சேர வேண்டியது எதுவும் இதுவரை சரியாகப் போய்ச் சேரவில்லை ( தம்பி பதிவு வேற எங்கயோ போகுதே , அப்பவே அந்தப்பக்கம் போய்டுச்சுங்க ) என்பது தான் உண்மை எல்லாருக்கும் தெரிந்ததைத் தான் சொல்றேன்னா ? நான்... அட ஆமாமில்ல ! 

சித்தர்கள் பாடலெல்லாம் நமக்குப் புரியாதே போக வேண்டும் என்றே மொத்தம் புதிரான கூட்டம் கட்டம் கட்டியே கணக்குப் பார்த்துக் கவணில் கோர்த்து எரிந்தவையல்லவா  இன்றைய தினம் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிலையும். புரியாதே புலம்புகின்றோம் புரண்டுப் புரண்டு வருந்துகின்றோம் இப்படியே இரண்டு தலைமுறையை ஓட்டிட்டோம் என்றாலும் அடுத்தத் தலைமுறைக்கும் அதையே புகட்டுகின்றோம் ஏன் ? எதற்கு ? என்ற கேள்விகளை நமக்கு நாம் கேட்காததன் விளைவு விளைந்து நிற்கின்றது. 

சித்தர்கள் பொதுவாக என்ன செய்திருக்காங்க யாருக்கும் புரியாமப் பாட்டெழுதி வச்சிருக்காங்க என்றுத்தான் தோன்றும் நமக்குத் தமிழ் மொழி முழுமையாய் அறியாதலால் அப்படிச் சொல்லித் திரிகிறோம். ஆனால்  என் மனசு என்ன சொல்லுதென்றால் சித்தர்கள் செய்த வேலையெல்லாம் மானுட மேனியைச் சரீரத்தை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்னென்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் மனித ஆரோக்கியத்திற்கு ஆகாரத்திற்கும் உண்டான தொடர்பு நிலைகளைப் பலவாரு ஆராய்ச்சி செய்து அவர்களும் அதனைப் பயன்படுத்திப் பலகாலம் உடலுடனும் உடலற்றும் வாழ்ந்தார்கள் வாழ்கிறார்களென்றே சொல்கிறது ஆழ் மனசு... 

”தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” எப்படி அழகாய் அர்த்தமெய்யாய்ச் சொல்லியிருக்காங்க அப்பவே. தொட்டில்ல என்னங்கப் பழக்கம் நமக்கு அதை எப்படிச் சுடுகாடு வரைக்கும் கொண்டு செல்வது ? உடைத்துச் சொல்வதெறால் குழந்தைக்கான உணவு முறையைப் பாருங்கள் திரவ நிலை உணவுகளாகவே உள்ளன ஏனென்று கேட்டால் குழந்தைக்குப் பல் இல்லையென்று பதில் வரும் அப்படித்தானே நம்மை யோசிக்க வடிவமைச்சிருக்காங்க மொத்தம் புதிரான கூட்டம் . அதாகப்பட்டது தொட்டில் பழக்கம் என்பது திரவ உணவுகளையே நம் உடலானது ஏற்கவல்லது, சுடுகாடு வரை அப்படிக் கடைப்பிடித்தால் சுடுகாட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்பதையே சூசகமாகச் சொல்லிச் சென்றுள்ளனர் . 


துத்தி இலைப்பறித்து தூதுவளையும் சேர்த்து 
உணவாக அ(ம)ருந்து புற்றும் விட்டோடும் புதிராய் போகும்


கலியுகம் : திட உணவுகளை உட்கொள்ளும் நாம் எப்படித் திரவு உணவுக்கு மாற முடியும் என்றால் திட உணவானது தொண்டையைத் தாண்டிச் செல்ல அனுமதியாது அதற்கு முன்னமே உமிழ் நீர்க் கலந்துப் பற்களால் மென்று நாவினால் சுவைத்துக் குழைத்துக் கூழாக்கி அனுப்புங்கள் தொடரும் 

கருத்துகள் இல்லை:

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி