புதன், 31 ஜூலை, 2013

4.பித்தனின் சமையல்


16.நிறையாகும் திரை நில்ல பிறையாகும்
வல்லன் முறையாகும் வஞ்சம் திகழாரம்
கொஞ்சும் இதழ்பாடும் கோள கடிகாரம்
நின்றாடி என்று நிலைபாடும்....

17.எத்தனிக்கும் போதெலாம் தத்தளிக்க எனை
விடுவான் ஏன் பரஞ்சோதி யாய்படை பாரேன்
நினைவுகள் அங்குமிங்கும் முன்னோடி எந்தன்
நிலையாடை பார்க்க பறந்து விரிகிறது....

18.மீண்டும் உயிர்த்த நினைவுகள் நீண்டதொரு 
காவியம் சிந்தையுள் ஆழ்த்த அமர்ந்தேன்
தேரினிலே ஏகாந்த புன்னகை வேடத்தின்
ஆளுமை பாவித்த வீதிசென்றேன்....

19.இயக்க இசைந்ததும் நீயே உன்னில் 
அசைந்திடும் நாதம் கவர்ந்திடும் வேதம்
கருவே உருவாய் கருணை தருவாய்
கடனே அடைய அகிலமெலாம் ஆர்பரிக்காய்....

20.எங்கழைப்பான் யேது உரைப்பான் யாரறியா
வேதம் உனைசமர்த்த பங்கமுனில் பங்கிடா
பாக்கியஞ்செய் அங்கமிடும் வேடம் குடந்தங்க
உள்ளுருவன் கூடில் அடையாது மெய்சறுக்கும்...

ஞாயிறு, 14 ஜூலை, 2013

3.பித்தனின் சமையல்


11.சூதாட சூட்சுமம் வாதடி வந்தது
சூழலின் சூடும் சுடுமென் றறியாது
வாதத்தின் வாட்டம் உருமாறி உள்ளில்
கருவேரிட வேற்றுடல் தாண்டியும் காணேன்...

12.நில்லாது ஓடிடும் வெண்ணிலவின் பூரணம்
காண கடைக்கண் சிமிட்டி கருவிருள்
தாண்டி எனைத்தொட்டு தாலாட்டி செல்லமாய்
வின்னில் உலாவரும் உன்னதம் காணே...

13.என்னில் அறியாது எனை மீட்டும்
முருகா என்சொல் எடுப்பினும் அச்சொல்
அழகுடுத்தி ஆழ்ந்து வரும் துணையே
தமிழ்குமரா உன்னடி பனிந்தேன் பவணிவா...

14.மனக்கும் மருதமல்லி யேயுந்தன் சந்தமெனை
வாட்டுதடி மந்தம் பிடித்தலைய மாற்றுதினை
போற்றுதுனை மேற்க்கரையை கார்க்குவிய தேற்றும்
நரனல்லோ நான் எனக்கணிய யேதும்தா...

15.நானொரு குரல் பாவை நடனனின்
அருள் பாவை மழலையாய் அழும்
பாரேன் தகித்திடும் தாகம் தனியே
தினந்தோறும் ஓதும்வே தம்புதிதே...

திங்கள், 8 ஜூலை, 2013

2.பித்தனின் சமையல்


6.காட்டி மறைநின்றான் ஏட்டினில் கூறுவ
கேளும் கிடைக்கனலான் காட்டி நிறைச்செரியும்
கட்டுவன் கோட்டையுள் காணாது கிட்டுவன்
காட்டி உனைவடியும் பேராழி உள்ளேயுகம்..

7.முத்தெடுத்தான் முத்தெடுத்தான் மூழ்குதலை தத்தெடுத்தான்
தத்துவம்போல் கட்டிவைத்தான் கொட்டியவை தாம்தம்
அறிய தமக்குரிமை யாதெனவே குட்டுவைத்தான்
கொட்டியவன் தத்தெடுத்த பிள்ளையானை..

8.சத்திரத்து வீதியிலே சங்கமிக்கும் சூழலிலே
வாழியென வந்தால் மழைமுத்து மாரியெனை
வாரிஅணைத் துக்கொண்டால் தேரினில் வேந்தனைப்
போல்திகழ பாடல் பொழியேன் இன்று...

9.பட்டி யிலடைத்தான் பட்டான் படியமுதம்
புட்டி யிலடைத்து விட்டான் பிடியமுதம்
பக்தி யிலடைத்து தொட்டான் முழுஅமுதும்
புத்தி யிலடைத்தால் கிட்டும்...

10.அழகந்தி சிற்பம் அழகேந்தும் ஆலிலை
நீளா நிலையாகி மீண்டுவரும் நாளை
மிகையாகும் பார்வை தொடருந் துனிவு
படரப் பழிதங்கி பார்கடவும்...

திங்கள், 1 ஜூலை, 2013

1.பித்தனின் சமையல்


1.கனிந்ததோ காலை களைந்ததோ கண்டகனா
காணும் இடமெலாம் காட்சி பிழம்பாய்
ஆட்சி சொரூபனே நேரெதிர் சாட்சியாகி
நில்லானே சங்கடந் தீர்க்கும் மருந்தாய் ...

2.கந்தனை காணுமிடம் வெல்லும் தமிழமுதே
சிந்தனை நாணுமிடம் வெல்லும் கவியமுதே
வந்தனை செய்யுந் தொழிலே தந்தனை
போற்றி வழிபாடி வந்தேனே நான்...


3.உச்சி முடிகாண பட்சியான சிற்பன்
வடிதொழிலில் தைத்த வடு நதியாகி
நாணய மிச்சமிதி யாகி மதிசூட
மலர் ஆகிநின்ற பூதவுடலே சொல்கேளாய்...

4.அரிதிரி யென்றான் திரிய திரியாகி
தீரா சுடாராகி தீண்ட திருவாகி
தில்லை யுருவாகி திண்டாடி ஆடுறான்
நின்றுமின்று மீராது வாடுதே கன்று...

5.குழிசென்ற தன்கூடே வரியகுழி சென்றதெது
கூறே விரியுமவணி பொய்யுரை பூக்களே
பூத்ததோ புத்தகம் ஆதலின் ஆதலுடன்
வித்தகன் ஆக கடவது உன்மெய்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி